பெஞ்சமின் பிராங்க்ளினின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
பெஞ்சமின் பிராங்க்ளினின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும், அறிவியலாளரும், எழுத்தாளரும் மற்றும் அரசியல்வாதியும்தான் பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin). மேலும் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்களில் மிகவும் மூத்த தலைவரும் ஆவார். பல துறைகளில் கவனத்தைச் செலுத்தினாலும் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்றவர் பிராங்க்ளின். 17 பிள்ளைகளைக் கொண்ட ஒரு ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது கடின உழைப்பாலும் விடமுயற்சியாலும் சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்தார்.
மேலும் அறிவியலிலும் பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Franklin) பங்கு குறிப்பிடத்தக்கது, எடுத்துக்காட்டாக இடிதாங்கி (lightning conductor), வெள்ளெழுத்துக் கண்ணாடி (bifocal lens) ஆகியவை இவரின் கண்டுபிடிப்புக்களாகும். தனது கண்டுபிடிப்புக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக தனது கண்டுபிடிப்புக்களுக்கு காப்புரிமை கூட பெற மறுத்தவர் பிராங்க்ளின். மேலும் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகமான பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை (University of Pennsylvania) நிறுவியவரும் இவர்தான்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Benjamin Franklin quotes in Tamil
- நீங்கள் இன்று செய்ததையே நாளையும் செய்தால், இன்று உங்களுக்குக் கிடைத்ததே நாளையும் கிடைக்கும்.
- மாற்றம் மட்டுமே வாழ்க்கையில் நிலையானது. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் திறன் உங்கள் வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும்.
- கெட்டவன் யார் என்று அரசாங்கம் உங்களுக்குச் சொல்லும்போது அது போர். நீங்களே அதைத் தீர்மானிக்கும்போது அது புரட்சி.
- எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்தித்தால், அப்பொழுது யாருமே சிந்திக்கவில்லை.
- அதிகாரத்தைக் கேள்வி கேட்பதே ஒவ்வொரு குடிமகன்களினதும் முதற் கடமை.
- சுதந்திரம் இல்லாத பாதுகாப்பு சிறைச்சாலை என்று அழைக்கப்படும்.
- உங்கள் செல்வத்தை அதிகரிக்க இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் வழிமுறைகளை அதிகரியுங்கள் அல்லது உங்கள் விருப்பங்களைக் குறையுங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதே சிறந்தது.
- கல்வி இல்லாத பகுத்தறிவு, பகுத்தறிவு இல்லாத கல்வியை விடச் சிறந்தது.
- சுதந்திரம் என்பது மற்றவர்களால் நமக்கு வழங்கப்பட்ட பரிசு அல்ல, ஆனால் கடவுள் மற்றும் இயற்கையின் விதிகளால் நமக்குச் சொந்தமான உரிமை.
- ஒரு பெண்ணின் தவறுகளைக் கண்டுபிடிக்க, அவளின் தோழிகளிடம் அவளைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள்.
- நன்றாகச் சொல்வதை விட நன்றாகச் செய்வது சிறந்தது.
- சிறிய செலவுகள் குறித்து கவனமாய் இருங்கள். ஒரு சிறிய கசிவு ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்துவிடும்.
- கிணறு வறண்டு போகும்போதே, தண்ணீரின் மதிப்பு எங்களுக்குத் தெரியும்.
- கீழ்ப்படிய முடியாதவனால் கட்டளையிட முடியாது.
- கடவுளுக்கு அஞ்சுங்கள், உங்கள் எதிரிகள் உங்களுக்கு அஞ்சுவார்கள்.
- யார் புத்திசாலி? எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்பவர்.
- நீங்கள் திட்டமிடத் தவறினால், நீங்கள் தோல்வியடையத் திட்டமிடுகிறீர்கள்.
- உங்கள் ஆயுளை நீட்டிக்க, உங்கள் உணவைக் குறையுங்கள்.
- சிரிப்பவர்கள் பெரும்பாலும் வயதாக மாட்டார்கள்.
- எல்லா மருந்துகளிலும் சிறந்தது ஓய்வு மற்றும் உண்ணாவிரதம்.
- தவறவிட்ட நேரத்தை திரும்பப் பெறமுடியாது.
- பெரும்பாலான மனிதர்கள் 25 வயதிலேயே இறந்துவிடுகின்றனர், அவர்களுக்கு 70 வயதாகும் வரை நாங்கள் அவர்களை அடக்கம் செய்வதில்லை.
- சீக்கிரமாக படுக்கைக்குச் செல்வது மற்றும் சீக்கிரமாக எழுந்திருப்பது ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும், செல்வந்தராகவும் மற்றும் புத்திசாலியாகவும் ஆக்குகிறது.
- ஒரு நல்ல வாழ்க்கைத் துணை மற்றும் ஆரோக்கியம் என்பன ஒரு நபரின் சிறந்த செல்வமாகும்.
- சூரியன் பிரகாசிக்கும் போது மட்டுமே ஒரு தவறான நண்பரும், நிழலும் உடன் வருகின்றன.
- மகிழ்ச்சி என்பது இந்த உலகில் இல்லை, அது நம்மில் உள்ளது.
- கோபத்தில் தொடங்கப்படும் எதுவும், அவமானத்தில் முடிகிறது.
- நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது.
- கல்வி இல்லாத மேதை சுரங்கத்தில் உள்ள வெள்ளி போன்றவர்.
- அறிவில் முதலீடு செய்வது சிறந்த வட்டியைக் கொடுக்கும்.
- ஒரு முட்டாளின் இதயம் அவன் வாயில் உள்ளது, ஆனால் ஒரு புத்திசாலியின் வாய் அவன் இதயத்தில் உள்ளது.