பணத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

 பணத்தைப் பற்றிய பொன்மொழிகள்

Money

இந்த உலகில் சில விடயங்களுக்கு அறிமுகமே தோவையில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் பணம் (Money). நாம் உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றுள் உயிர்வாயுவிற்கு அடுத்த படியாக பணமே அவசியமானது. ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் நாம் உயிர்வாழத் தேவையானவற்றுள் உயிர்வாயு ஒன்றைத் தவிர மீதி அனைத்தையும் பணம் கொடுத்தே வாங்கிவருகிறோம். மேலும் உயிர்வாயு கூட விற்பனை செய்யப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்.

பணத்தால் (Money) உங்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்க முடியாதுதான், ஆனால் உங்கள் பணப்பிரச்சனையைத் தீர்க்க முடியும். மேலும் பணமே உங்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாகும். பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அனைவருக்கும் அவசியமான பணத்தைப்பற்றி அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Money quotes in Tamil


  • பணம் அன்பு போன்றது. அதைப் பகிர மறுப்பவனை அது மெதுவாகவும் வேதனையுடனும் கொன்றுவிடுகிறது, அதை சக மனிதர்களிடம் பகிர்பவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. --கஹ்லில் கிப்ரான்

 

  • நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிப்பீர்கள். --வாரன் பபெட்


  • பணக்காரர்கள் "நான் தான் என் வாழ்க்கையை உருவாக்குகிறேன்" என்று நம்புகிறார்கள். ஏழைகள் "எனக்குக் கிடைத்த வாழ்க்கை இதுதான்" என்று நம்புகிறார்கள்.  --டி. ஹார்வ் எக்கர்

 

  • பணத்தால் வாங்கக்கூடிய விஷயங்களுக்காக உங்கள் பணத்தைச் செலவிடுங்கள். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். --ஹருகி முரகாமி

 

  • பணம் என்பது வெறும் எண்களே மேலும் எண்கள் ஒருபோதும் முடிவடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவை என்றால், மகிழ்ச்சிக்கான உங்கள் தேடல் ஒருபோதும் முடிவடையாது. --பாப் மார்லி

 

  • பணக்காரர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து எஞ்சியதைச் செலவு செய்கிறார்கள். ஏழைகள் தங்கள் பணத்தைச் செலவு செய்து எஞ்சியதை முதலீடு செய்கிறார்கள். --ஜிம் ரோன்

 

  • பணம் ஒரு கொடூரமான எஜமான், ஆனால் மிகச் சிறந்த வேலைக்காரன். --பி.டி. பர்னம்

 

  • உங்கள் சம்பளம் சிறியதாக இருக்கும்போதே ஏதாவது சேமிக்க முயற்சி செய்யுங்கள்; நீங்கள் அதிகம் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு சேமிப்பது சாத்தியமற்றது. --ஜாக் பென்னி

 

  • செல்வம் என்பது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் திறனாகும். --ஹென்றி டேவிட் தோரே

 

  • செல்வம் கடல் நீர் போன்றது; நாம் எவ்வளவு அதிகமாக குடிக்கிறோமோ, அவ்வளவு தாகம் உள்ளவர்களாக ஆகிறோம், புகழின் விஷயத்திலும் இதுவே உண்மை. --ஆர்தர் ஸ்கோபன்ஹவுர்

 

  • நான் நிறைய பணம் உள்ள ஒரு ஏழையாக வாழ விரும்புகிறேன். --பப்லோ பிக்காசோ

 

  • அதிகமாக வைத்திருப்பவன் பணக்காரன் அல்ல, அதிகமாக கொடுப்பவனே பணக்காரன்.  --எரிச் ஃப்ரோம்

 

  • செல்வம் ஞானிகளின் அடிமை. முட்டாள்களின் எஜமான். --செனிக்கா 

 

  • பணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை, இப்போது என்னிடம் 50 மில்லியன் டாலர் உள்ளது, ஆனால் என்னிடம் 48 மில்லியன் டாலர் இருந்தபோது உள்ள மகிழ்ச்சியே இப்போதும் உள்ளது. --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்

 

  • ஒரு மனிதனின் மேன்மை அவர் எவ்வளவு செல்வத்தைச் சம்பாதிக்கிறார் என்பதில் இல்லை, ஆனால் அவரது நேர்மை மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களை நேர்மறையாகத் தூண்டும் திறனில் உள்ளது. --பாப் மார்லி 

 

  • பணம் மனிதர்களை மாற்றாது, அது வெறுமனே அவர்களின் மாறுவேடங்களை கலைத்து விடுகிறது. ஒரு மனிதன் இயல்பாகவே சுயநலவாதியாக அல்லது ஆணவம் உள்ளவனாக அல்லது பேராசை கொண்டவனாக இருந்தால், பணம் அதை வெளியே கொண்டு வருகிறது, அவ்வளவுதான். --ஹென்றி ஃபோர்ட்

 

  • பணத்தை மிச்சப்படுத்த சந்தைப்படுத்தலை நிறுத்துபவர்கள், நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை நிறுத்துபவர்களைப் போன்றவர்கள். --ஹென்றி ஃபோர்ட்  

 

  • உங்களிடம் பணம் இருக்கும்போது, நீங்கள் யார் என்பதை நீங்கள் மட்டுமே மறந்துவிடுவீர்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லாதபோது, நீங்கள் யார் என்பதை இந்த முழு உலகமும் மறந்துவிடுகிறது. இதுதான் வாழ்க்கை. --பில் கேட்ஸ்

 

  • நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் மற்றும் நீங்கள் சாக்குப்போக்குகளை உருவாக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் சாக்குப்போக்கிலிருந்து பணம் சம்பாதிக்க முடியாது. --பில் கேட்ஸ்

 

  • ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை. --பில் கேட்ஸ் 

 

  • உங்கள் செல்வத்தை அதிகரிக்க இரண்டு வழிகள் உள்ளன. உங்கள் வழிமுறைகளை அதிகரியுங்கள் அல்லது உங்கள் விருப்பங்களைக் குறையுங்கள். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வதே சிறந்தது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

 

  • ஒரு நல்ல வாழ்க்கைத் துணை மற்றும் ஆரோக்கியம் என்பன ஒரு நபரின் சிறந்த செல்வமாகும். --பெஞ்சமின் பிராங்க்ளின் 

 

  • ஒரே நேரத்தில் மிகுந்த செல்வந்தராகவும் நல்லவராகவும் இருப்பது சாத்தியமில்லை. --பிளேட்டோ

 

  • வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்ல, ஆசைகள் அதிகரிப்பதால் தான். --பிளேட்டோ

 

  • எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம். --கார்ல் மார்க்ஸ்

 

  • வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. --கார்ல் மார்க்ஸ்  

 

  • எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவுக்கு பணக்காரன் இல்லை. --ஆஸ்கார் வைல்ட் 

 

  • சாதாரண செல்வங்கள் திருடப்படலாம், உண்மையான செல்வங்களைத் திருட முடியாது. உங்கள் ஆன்மாவில் உங்களிடமிருந்து எடுக்க முடியாத எண்ணற்ற விலைமதிப்பற்ற விடயங்கள் உள்ளன. --ஆஸ்கார் வைல்ட் 


  • பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது, ஆனால் அது நிச்சயமாக உங்களுக்கு சிறந்த நினைவுகளைக் கொடுக்கும். --ரொனால்ட் ரீகன்

 

  • பணத்தைக் கையாளத் தெரியாத ஒரு மனிதனைக் கெடுக்க உறுதியான வழி அவனுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுப்பதாகும். --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


  • பணப் பற்றாக்குறையே எல்லாத் தீமைகளுக்கும் மூலகாரணமாகும். --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


  • பணமும் வெற்றியும் மக்களை மாற்றாது, அவை வெறுமனே ஏற்கனவே இருப்பதை அதிகரிக்கின்றன. --வில் ஸ்மித்


  • பணம் தான் மனிதனை வேடிக்கையாக செயற்பட வைக்கிறது. --எமினெம்


  • ஒரு நாளில் பணக்காரனாக விரும்புகிறவன் ஒரு வருடத்தில் தூக்கிலிடப்படுவான். --லியோனார்டோ டா வின்சி


  • பணத்திற்காக வேலை செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்தாதீர்கள், ஆனால் அந்த வேலையை நேசிப்பதால் அதைச் செய்யும் ஒருவரை வேலைக்கு அமர்த்துங்கள். --ஹென்றி டேவிட் தோரே

  • பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள். --வாரன் பஃபெட்


  • தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள். --வாரன் பஃபெட்


  • உங்களால் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், உங்களால் உங்கள் பணத்தைக் கட்டுப்படுத்த முடியாது. --வாரன் பஃபெட்

  • எவருக்குச் செல்வம் குறைவாகத் தேவையோ, அவரே செல்வத்தை அதிகமாக அனுபவிக்கிறார். --எபிகியூரஸ்

  • அனைத்து செல்வங்களிலும் மிகச் சிறந்த செல்வம் தன்னிறைவு. --எபிகியூரஸ்


  • இன்று எனக்கு பணம் உண்மையில் ஒரு பொருட்டல்ல. --ஜாக்கி சான்




உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.