இசையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

இசையைப் பற்றிய பொன்மொழிகள்

Music

இசை (Music) இது சிலருக்கு போதை மருந்து, சிலருக்கு ஊக்க மருந்து இன்னும் சிலருக்கு இதுதான் பிணி தீர்க்கும் மருந்து. இந்த உலகில் போதைக்கு அடிமையாதவர்கள் கூட உண்டு ஆனால் இசை எனும் பெரும் போதைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இல்லை எனலாம். தனிமையான நேரங்களில் தக்க துணையாகவும், சோகமான நேரங்களில் தோள்கொடுக்கும் தோழனாகவும், நாம் தூங்கும் நேரத்தில் கூட தாலாட்டுப்பாடுவதும் இசை மட்டுமே.

வாழ்வில் துன்பம் இயற்கை என்றாலும் அந்த துன்பத்தைப் போக்க இயற்கையே நமக்கு அளித்த அற்புதமான பரிசுதான் இசை. இந்த உலகில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்து உண்டென்றால் அது இசையாகத்தான் இருக்கும். நாம் எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நம் அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய ஒரே மொழியான இசையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Music quotes in Tamil

 

  • இசை இல்லாத வாழ்க்கை ஒரு பாலைவனத்தின் வழியாக பயணம் செய்வதைப் போன்றது. --பாட் கான்ராய்

 

  • வார்த்தைகள் தோல்வியடைந்த இடத்தில், இசை பேசுகிறது. --ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்

 

  • இசை என்பது மொழியை மீறிய ஒரு கலை வடிவமாகும். --ஹெர்பி ஹான்காக்

 

  • இசை என்பது மனதின் மருந்து. --ஜான் லோகன்

 

  • இசை என்பது மனிதகுலத்தின் உலகளாவிய மொழி. --ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ

 

  • இசையுடன் ஒன்றி இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். எனது முழு வாழ்க்கையையும் இந்த கலைக்காக அர்ப்பணிக்கிறேன். --ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்

 

  • மிகவும் இறுக்கமாக மூடிய இதயத்தையும் திறக்கும் ஒரு மந்திரச் சாவியைப் போல இசை செயல்படுகிறது. --மரியா வான் ட்ராப்

 

  • ஒரு இசையமைப்பாளர் தான் சொல்ல வேண்டியதை வார்த்தைகளில் சொல்ல முடிந்தால், அதை இசையில் சொல்ல முயற்சிக்க மாட்டார். --குஸ்டாவ் மஹ்லர்

 

  • நீங்கள் எந்த கலாச்சாரத்திலிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை, எல்லோரும் இசையை விரும்புகிறார்கள். --பில்லி ஜோயல்

 

  • பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு தாளம் உள்ளது, அனைத்தும் நடனமாடுகிறது. --மாயா ஏஞ்சலோ

 

  • உங்களால் எனக்கு பறக்கக் கற்றுக் கொடுக்க முடியாவிட்டால், எனக்கு பாடக் கற்றுக் கொடுங்கள். --ஜேம்ஸ் எம். பாரி 

 

  • இசை என்பது உணர்ச்சியின் சுருக்கம். --லியோ டால்ஸ்டாய்

 

  • மக்கள் இசையைப் போன்றவர்கள், சிலர் உண்மையைப் பேசுகிறார்கள், மற்றவர்கள் வெறுமனே சத்தம் போடுகிறார்கள். --பில் முர்ரே

 

  • அழகான, கவித்துவமான விடயங்களை இதயத்திற்குச் சொல்வதற்கான தெய்வீக வழிதான் இசை. --பப்லோ கேசல்கள்

 

  • இசையை ஒருவர் இதயத்தால் சிந்தித்து மூளையால் உணர வேண்டும். --ஜார்ஜ் ஸ்ஸெல் 

 

  • இசையைப் பற்றிய ஒரு நல்ல விடயம், அது உங்களைத் தாக்கும் போது, நீங்கள் எந்த வலியையும் உணர மாட்டீர்கள். --பாப் மார்லி

 

  • இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி. --கார்ல் மார்க்ஸ் 


  • .இசைக் குறிப்புகள் மற்றும் தாளங்கள் முதன்முதலில் மனிதகுலத்தின் ஆண் அல்லது பெண் முன்னோர்களால் எதிர்ப் பாலினத்தை வசீகரிப்பதற்காக கையாளப்பட்டன என்று நான் தீர்மானிக்கின்றேன். --சார்லஸ் டார்வின்


  • வார்த்தைகள் பேசப்படுவதற்கு முன்பே இசை கண்டறியப்பட்டது மற்றும் புரிந்து கொள்ளப்பட்டது. --சார்லஸ் டார்வின்


  • இசை இல்லாவிட்டால்,  எனக்கு வாழ்க்கை ஒரு வெறுமையாக இருக்கும். --ஜேன் ஆஸ்டின்


  • ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான். --கன்பூசியஸ்


  • ஒவ்வொரு முறையும் நல்ல இசையை உருவாக்குது மட்டுமே எனது நோக்கம். --லில் வெய்ன்


  • இசையால் உலகை மாற்ற முடியும், ஏனெனில் அதனால் மக்களை மாற்ற முடியும். --போனோ


  • இசை என்பது உண்மையில் ஆன்மீகத்திற்கும் சிற்றின்ப வாழ்க்கைக்கும் இடையிலான இடைநடுவராகும். --லுட்விக் வான் பீத்தோவன்


  • இசைக்கலைஞர்களாகிய நாம் கேட்பவர்களின் ஆன்மாவைத் தொடும் நிலையில் இருக்கிறோம். --ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பால்


  • இசை ஒரு மிகச்சிறந்த ஆற்றல். இது எல்லோருக்கும் தெரிந்த மொழி. --பில் ஹிக்ஸ்


  • இனிமையான இசை கடவுளின் புனிதமான நாக்கு. --சார்லஸ் காட்ஃப்ரே லேலண்ட்


  • இசை என்பது பிரபஞ்சத்தின் வாசனைத்திரவியம். --கியூசெப் மஸ்ஸினி

 

  • இசை என்பது தீர்க்கதரிசிகளின் கலை மற்றும் கடவுளின் பரிசு. --மார்ட்டின் லூதர்

 

  • இசை என்பது உலகின் மிகச்சிறந்த தொடர்பாடல். --லூ ராவ்ல்ஸ்

 

  • நவீன இசை போதைப்பொருள் போலவே ஆபத்தானது. --பியட்ரோ மஸ்காக்னி

 

  • இசை என்பது இதயத்தின் இலக்கியம், பேச்சு முடிவடையும் இடத்தில் அது தொடங்குகிறது. --அல்போன்ஸ் டி லாமார்டைன்

 

  • இசை என்பது எனது மதம். --ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்


  • குணத்தை வடிவமைப்பதில் இசைக்கு நிறைய பங்கு இருப்பதால், அதை நாம் நம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவசியமாகும். --அரிஸ்டாட்டில்


  • ஆன்மாவின் உணர்வுகளை இசை நேரடியாகப் பிரதிபலிக்கிறது. ஒருவர் தவறான இசையைக் கேட்டால், அவர் தவறான நபராக மாறுவார். --அரிஸ்டாட்டில்


  • இசை ஒரு நல்ல விடயம், அது மனிதனில் உள்ள மிருகத்தை அமைதிப்படுத்துகிறது. --ஜோசப் ஸ்டாலின்


  • என் வாழ்வில் சிறந்த மகிழ்ச்சியை, நான் இசையில் இருந்து பெறுகிறேன். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.