அரசியலைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
அரசியலைப் பற்றிய பொன்மொழிகள்
இன்றைய காலகட்டத்தில் அரசியல் (Politics) என்பது கிட்டத்தட்ட ஒரு மோசமான தொழிலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் மோசமான அரசியல்வாதிகளும் அவர்களது மோசமான அரசியலும்தான்.
தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தும் கூட நம்மால் ஒரு மாற்றத்தையும் நிகழ்த்த முடிவதில்லை. நாம் யாரைத் தெரிவு செய்தாலும் அனைவரும் ஒரே மாதிரியே செயல்படுகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
மக்களாட்சி என்ற பெயரில் விரலில் மை வைத்தவர்களுக்கு நெற்றியில் நாமத்தைப் போடுவதுதான் ஜனநாயக ஆட்சியா என்ற கேள்விதான் எழுகிறது. அரசியல் என்பது மர்மங்கள் நிறைந்த பெர்முடா முக்கோணம் போன்றது அதன் மர்மங்களை புரிந்துகொள்வது அரிதினும் அரிது.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Politics quotes in Tamil
- மதத்திற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு மதம் என்றால் என்னவென்றே தெரியாது. --மகாத்மா காந்தி
- அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர் அதே நேரத்தில் போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். --மாவோ சேதுங்
- யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதையே அரசியல் தீர்மானிக்கிறது, யாரிடம் உண்மை உள்ளது என்பதை அல்ல. --பால் க்ரூக்மேன்
- ஒரு நேர்மையான அரசு ஊழியரால் அரசியலில் பணக்காரர் ஆக முடியாது, சேவையின் மூலம் அவரால் மேன்மையையும் திருப்தியையும் மட்டுமே அடைய முடியும். --ஹாரி எஸ். ட்ரூமன்
- எந்த ஒரு கட்சியாலும் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது, அதனால்தான் எங்களுக்கு இரண்டு கட்சிகள் உள்ளன. --பாப் ஹோப்
- அரசியலில் முட்டாள்தனம் என்பது ஒரு குறைபாடு அல்ல. --நெப்போலியன் போனபார்ட்
- ஆடுகளின் தேசம் ஓநாய்களின் அரசாங்கத்தையே உருவாக்கும். --எட்வர்ட் ரோஸ்கோ முர்ரோ
- அரசியல் பல ஆண்டுகளாக, அல்லது நீண்ட காலமாக, சரி அல்லது தவறு என்பதற்குப் பதிலாக வலது அல்லது இடது என்பதில் அக்கறை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. --ரிச்சர்ட் ஆர்மர்
- நீங்கள் உங்கள் அரசின் விவகாரங்களில் அக்கறை காட்டவில்லை என்றால், முட்டாள்களின் ஆட்சியின் கீழ் நீங்கள் வாழ நேரிடும். --பிளேட்டோ
- சுதந்திரம் ஒருபோதும் ஒடுக்குவோரால் தானாக முன்வந்து கொடுக்கப்படுவதில்லை, அது ஒடுக்கப்பட்டவர்களால் கோரப்பட வேண்டும். --மார்டின் லூதர் கிங்
- அரசியலில் பங்கேற்க மறுத்ததற்காக தண்டனைகளில் ஒன்று, நீங்கள் உங்களை விட தகுதி குறைந்தவர்களால் ஆளப்படுவீர்கள். --பிளேட்டோ
- அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை, அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது. --ஜோசப் ஸ்டாலின்
- கொடுங்கோன்மையானது ஜனநாயகத்திலிருந்து இயற்கையாகவே எழுகிறது. --பிளேட்டோ
- நம் காலத்தில் 'அரசியலில் இருந்து விலகி இருத்தல்' என்ற ஒன்றே கிடையாது. எல்லாப் பிரச்சினைகளுமே அரசியல் பிரச்சினைகளாகும். --ஜார்ஜ் ஆர்வெல்
- ஞானத்தை விரும்புவோர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் ஞானத்தை விரும்புவோராக மாறும் வரை, மனிதகுலம் ஒருபோதும் சிக்கலுக்கு முடிவைக் காணாது. --பிளேட்டோ
- அதிகாரத்தை விரும்பாதவனே அதை அடையத் தகுதியானவன். --பிளேட்டோ
- ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் கீழ் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் என்று நம்புவது தவறானது. --ஜார்ஜ் ஆர்வெல்
- வாக்களிப்பதால் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்றால், அவர்கள் எங்களை அதைச் செய்ய விடமாட்டார்கள். --மார்க் ட்வைன்
- பணத்தால் வாங்கக்கூடிய சிறந்த அரசாங்கம் எங்களிடம் உள்ளது. --மார்க் ட்வைன்
- ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. --ஆபிரகாம் லிங்கன்
- ஜனநாயகம் என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையினருக்கு அடிபணிய வைப்பதை அங்கீகரிக்கும் ஒரு அரசாகும், அதாவது ஒரு வர்க்கத்தால் மற்றொன்றுக்கு எதிராக வன்முறையை முறையாகப் பயன்படுத்துவதற்கான ஒரு அமைப்பு. --விளாடிமிர் லெனின்
- ஒரு நாடு மற்றைய நாடுகளை ஒடுக்கினால் அதனால் சுதந்திரமாக இருக்க முடியுமா? அதனால் முடியாது. --விளாடிமிர் லெனின்
- எந்த அளவு அரசியல் சுதந்திரமும் பசியுள்ள மக்களைத் திருப்திப்படுத்தாது. --விளாடிமிர் லெனின்
- கெட்டவன் யார் என்று அரசாங்கம் உங்களுக்குச் சொல்லும்போது அது போர். நீங்களே அதைத் தீர்மானிக்கும்போது அது புரட்சி. --பெஞ்சமின் பிராங்க்ளின்
- எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, அவற்றை யார் எண்ணுகிறார்கள் என்பது மட்டுமே முக்கியம். --ஜோசப் ஸ்டாலின்
- அதிகாரத்தைக் கேள்வி கேட்பதே ஒவ்வொரு குடிமகன்களினதும் முதற் கடமை. --பெஞ்சமின் பிராங்க்ளின்
- அரசாங்கம் வறியவர்களிடமிருந்து திருடி பேராசைக்காரர்களுக்குக் கொடுக்கிறது. --ரொனால்ட் ரீகன்
- ஒருவர் புரட்சியைப் பாதுகாப்பதற்காக சர்வாதிகாரத்தை நிறுவுவதில்லை, சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக புரட்சியை உருவாக்குகிறார். --ஜார்ஜ் ஆர்வெல்
- ஒன்று நீங்கள் உங்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவீர்கள், அல்லது அரசாங்கம் உங்களைக் கட்டுப்படுத்தும். --ரொனால்ட் ரீகன்
- அரசியலில் எதுவும் தற்செயலாக நடக்காது. அப்படி நடந்தால், அது அவ்வாறு திட்டமிடப்பட்டது என்று நீங்கள் பந்தயம் கட்டலாம். --பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
- எங்கள் பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு தீர்வல்ல, அரசாங்கமே ஒரு பிரச்சினை. --ரொனால்ட் ரீகன்
- உண்மையைச் சொல்வதற்கு இருபது வழிகளும், பொய்யைச் சொல்வதற்கு ஒரே ஒரு வழியும் இருந்தால், அரசாங்கம் அந்த ஒரு வழியைக் கண்டுபிடிக்கும். பொய்களைச் சொல்வது அரசாங்கங்களின் இயல்பு. --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
- சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிப்பதை ஏற்காத எந்த ஜனநாயகமும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. --பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
- போரில் உங்களை ஒரு முறை மட்டுமே கொல்ல முடியும். அரசியலில் நீங்கள் பலமுறை கொல்லப்படுவீர்கள். --வின்ஸ்டன் சர்ச்சில்
- அரசியல் என்பது நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னறிவிக்கும் திறனாகும். --வின்ஸ்டன் சர்ச்சில்
- வாக்காளர்கள் எதையுமே தீர்மானிப்பதில்லை. வாக்கு எண்ணுபவர்களே அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள். --ஜோசப் ஸ்டாலின்
- எந்த ஒரு அரசாங்கத்தினதும் இறுதியான உத்தியோகபூர்வ செயற்பாடு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதுதான். --ஜார்ஜ் வாஷிங்டன்
- ஒரு அரசாங்கம் நெருப்பைப் போன்றது, ஒரு எளிய வேலைக்காரன், ஆனால் ஒரு ஆபத்தான எஜமானன். --ஜார்ஜ் வாஷிங்டன்
- பலர் சிலரால் சுலபமாக ஆளப்படுவதை விட ஆச்சரியமானது எதுவும் இல்லை. --டேவிட் ஹியூம்
- எந்தவொரு அரசாங்கமும் முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதும், அரசியலுக்கும் விலங்குகளுக்கும் கூட மரணம் தவிர்க்க முடியாததுதான் என்பதும் அனைவரும் அறிந்ததே.--டேவிட் ஹியூம்
உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.