சே குவேராவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

சே குவேராவின் பொன்மொழிகள்

Che Guevara

அர்ஜென்டீனாவைச் (Argentina) சேர்ந்த மாபெரும் புரட்சியாளரும், மருத்துவரும், பல புரட்சிப் போர்களில் பங்குபெற்ற ஒரு போராளியும் தான் சே குவேரா (Che Guevara). மார்க்சியவாதியான இவர் உலகெங்கிலும் மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடி அதில் வெற்றியும் கண்டார்.

பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து கியூபாவின் விடுதலைக்காக போராடினார். மேலும் கியூபாவின் மத்திய வங்கியிலும் 14 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். கொரில்லாப் போர் முறையில் வல்லவராக இருந்த சே குவேரா கொரில்லாப் போர்முறை குறித்த புத்தங்களையும் எழுதியுள்ளார்.

விஞ்ஞானி என்றதுமே நமக்கு ஐன்ஸ்டீனின் பெயர்தான் முதலில்  நினைவுக்கு வருவதைப்போல, ஓவியர் என்றதுமே நமக்கு முதலில்  டா வின்சியின் பெயர்தான் முதலில் நினைவுக்கு வருவதைப்போல, புரட்சியாளர் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் சேகுவேராவாகத்தான் இருக்கும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Che Guevara quotes in Tamil


  • கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை.


  • புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும்.


  • இந்தப் பூமியில் உள்ள மிகப்பெரும் பணக்காரரின் அனைத்துச் சொத்துக்களையும் விட ஒரு மனிதனின் வாழ்க்கை பல மில்லியன் மடங்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் மிகச் சரியாகக் கற்றுக்கொண்டோம்.


  • நண்பர்கள் இல்லாதது சோகமான விடயம், ஆனால் எதிரிகள் இல்லாதது இன்னும் சோகமானது.


  • ஒரு மனிதனை தூக்கிலிடுவதற்கு, அவன் குற்றம் செய்ததற்கான ஆதாரம் தேவையில்லை. அவனை தூக்கிலிட வேண்டியது அவசியம் என்பதற்கான ஆதாரம் மட்டுமே தேவை.


  • அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும்.


  • செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை.


  • எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு நபருக்கும் எதிராக எந்தவொரு அநீதி  இழைக்கப்பட்டாலும் அதை ஆழமாக உணர எப்போதும் முயற்சி செய்யுங்கள். அதுவே ஒரு புரட்சியாளரின் மிக அழகான பண்பாகும்.


  • சொல்லின் சிறந்த வடிவம் செயல்.


  • எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது.


  • எங்கள் இளைஞர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும், இந்த உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி விவாதித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.


  • சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழிமுறையாகும்.


  • வெறும் வார்த்தைகளால் ஒரு விடயத்தை தீர்க்க முடியும் என்ற நினைப்பு ஒரு மாயை.


  • மண்டியிட்டு வாழ்வதை விட நான் எழுந்து நின்று சாவேன்.


  • மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழித்தல் என்பதைத் தவிர சோசலிசம் என்பதற்கு வேறு எந்த சரியான வரையறையும் இல்லை.


  • நான் சிலுவையில் அறையப்படுவதை விட, என் கைக்கு எட்டக்கூடிய அனைத்து ஆயுதங்களையும் கொண்டு நான் போராடுவேன்.


  • ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் நடுங்கினால் நீயும் என் தோழன்.


  • உண்மையான புரட்சியாளர்கள் தங்களை உட்புறமாகவே அலங்கரிக்கிறார்கள், வெளிப்புறமாக அல்ல.


  • ஒரு புரட்சிகர சூழ்நிலைக்காக ஒருவர் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அதை உருவாக்க முடியும்.


  • மனிதர்களை மிருகங்களாக மாற்றுவதே ஏகாதிபத்தியத்தின் இயல்பு.


  • நீ என்னைக் கொல்ல வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். சுடு கோழையே, நீ ஒரு மனிதனை மட்டும் கொல்லப் போகிறாய்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link