கடவுளைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

கடவுளைப் பற்றிய பொன்மொழிகள்

God

இந்த பூமியில் வாழும் மிகச்சிறந்த மற்றும் மிக ஆற்றல் மிக்க ஒரே உயிரினம் மனிதன் மட்டுமே, அதனால்தான் என்னமோ மனிதனால் தன்னை விட ஆற்றல் மிக்க ஒருவர் உண்டு என்பதை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்குக் காரணம் மனிதனின் அகந்தை மட்டுமல்ல அவனது அறியாமையும் கூட, நம்மை விட ஆற்றல் மிக்க ஒன்றை நம்மால் எப்படி முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.

ஒரு மனிதனால் ஒரு மாட்டை புரிந்துகொள்ள முடியும் ஆனால் ஒரு மாட்டால் மனிதனை புரிந்துகொள்ள முடியாது, அதுபோலவே நம்மைவிட ஆற்றல் மிக்க இறைவனை (God) நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. பல கண்டுபிடிப்பாளர்களும், விஞ்ஞானிகளும் கூட கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கும் போது, அவர்கள் கண்டுபிடித்ததை புத்தகத்தில் படித்தவர்கள் தங்களை பகுத்தறிவாளர்களாக பாசாங்கு செய்துகொண்டு கடவுளை மறுத்துப் போசுவது நகைப்புக்குரிய முட்டாள்த்தனம்.

மனித அறிவால் புரிந்துகொள்ளக் கூடியவராக இருந்தால் அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும். மனித அறிவுக்கு அப்பாற்பட்டு இருந்தால்தானே அவர் கடவுள். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பார்கள் அது முற்றிலும் உண்மை, கடவுள் விடயத்தில் நாம் அனைவரும் குருடர்களைப் போன்றவர்கள். ஒவ்வொருவரும் தடவிப்பார்த்து ஒவ்வொன்றைக் கூறலாம் ஆனால் உண்மை என்னவென்று படைத்தவனுக்கே தெரியும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


God quotes in Tamil


  • புரிந்துகொள்ளும் அளவுக்கு கடவுள் சிறியவராக இருந்தால், வணங்கப்படும் அளவுக்கு அவர் பெரியவராக இருக்க மாட்டார். --ஈவ்லின் அண்டர்ஹில்


  • வண்ணங்களைப் பற்றி ஒரு குருடனுக்கு எதுவும் தெரியாததைப் போலவே, எல்லாம் வல்ல கடவுள் அனைத்தையும் உணர்ந்து புரிந்துகொள்ளும் விதம் பற்றி எங்களுக்குத் தெரியாது. --ஐசக் நியூட்டன்


  • இந்த தருணத்தில், கடவுள் உங்கள் வாழ்க்கையில் திரைக்குப் பின்னால் செயல்படுகிறார், அனைத்தையும் உங்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கிறார். நம்பிக்கையுடன் இருங்கள். --ஜோயல் ஓஸ்டீன்


  • கடவுளைக் காதலிப்பதே மிகச்சிறந்த இன்பம், அவரைத் தேடுவதே மிகச்சிறந்த சாகசம், அவரைக் கண்டுபிடிப்பதே மிகச்சிறந்த சாதனை. --செயிண்ட் அகஸ்டின்


  • நம்பிக்கை என்பது கடவுள் உங்களுக்கு விரும்பமானதைச் செய்வார் என்று நம்புவதல்ல. கடவுள் சரியானதைச் செய்வார் என்று நம்புவது. --மேக்ஸ் லுகாடோ


  • கடவுள் இல்லை என்பதை ஒருவராலும் நிரூபிக்க முடியாது. ஆனால் விஞ்ஞானம் கடவுளை தேவையற்றதாக ஆக்குகிறது. இயற்பியலின் விதிகளால் ஒரு படைப்பாளரின் தேவை இல்லாமல் பிரபஞ்சத்தை விளக்க முடியும். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்


  • கடவுள் ஒருபோதும் தாமதிப்பதில்லை, நாங்கள் தான் பொறுமையற்றவர்கள். --லெக்ரே


  • கடவுள் எங்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பது நாம் நல்லவர்கள் என்பதால் அல்ல, அவர் நல்லவர் என்பதால் தான். --ஐடன் வில்சன் டோஸர்


  • கடவுள் இன்று உங்களுக்கு 86,400 வினாடிகளை பரிசாக வழங்கியுள்ளார். அவருக்கு நன்றி சொல்ல நீங்கள் ஒன்றையாவது பயன்படுத்தினீர்களா?. --வில்லியம் ஆர்தர் வார்டு


  • கடவுள் எப்போதும் சரியான நபர்களையே உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவார், ஆனால் நீங்கள் தவறான நபர்களை விலகிச் செல்ல அனுமதிக்க வேண்டும். --ஜோயல் ஓஸ்டீன்


  • நாம் மிகுந்த வேதனையை அனுபவிக்கிறோம், ஏனெனில் கடவுளால் மட்டுமே நமக்குக் கொடுக்கக்கூடியதை நாம் மனிதர்களிடமிருந்து பெற முயற்சிக்கிறோம், உங்களுக்குத் தேவையானதை கடவுளிடம் தேடுங்கள், மனிதர்களிடம் அல்ல. --ஜாய்ஸ் மேயர்


  • மக்கள் ஒவ்வொரு நாளும் கடவுளைப் பார்க்கிறார்கள், வெறுமனே அவர்கள் அவரை அடையாளம் காண்பதில்லை. --முத்து பெய்லி


  • நாத்திகம் என்பது மிகவும் புத்தியற்றது. நான் சூரிய மண்டலத்தைப் பார்க்கும்போது, சூரியனிடமிருந்து சரியான அளவு வெப்பத்தையும் ஒளியையும் பெறுவதற்காக பூமியானது சரியான தூரத்தில் உள்ளதைக் காண்கிறேன். இது தற்செயலாக நடக்கவில்லை. --ஐசக் நியூட்டன்


  • கடவுளின் கை ஒருபோதும் நழுவுவதில்லை, அவர் ஒருபோதும் தவறு செய்வதில்லை. அவருடைய ஒவ்வொரு அசைவும் நம்முடைய சொந்த நலனுக்காகவும், நம்முடைய இறுதி நன்மைக்காகவும் தான். --பில்லி கிரஹாம்


  • கடவுள் உங்களுக்கு ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார், மேலும் நீங்களாகவே இன்னொரு முகத்தை உருவாக்குகிறீர்கள். --வில்லியம் ஷேக்ஸ்பியர்


  • கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது, எனவேதான் அவர் தாய்மார்களை உருவாக்கினார். --ருட்யார்ட் கிப்ளிங்


  • ஒரு நன்மை பயக்கும், சர்வ வல்லமையுள்ள கடவுள் பூனை எலிகளுடன் விளையாட வேண்டும் என வடிவமைத்து உருவாக்கினார் என்று என்னால் நம்ப முடியவில்லை. --சார்லஸ் டார்வின்


  • கடவுள் உங்களை உருவாக்கியபோது அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. கடவுள் உங்களைப் பார்பது போலவே நீங்களும் உங்களைப் பார்க்க வேண்டும். --ஜோயல் ஓஸ்டீன்


  • கடவுள் நம் பாதைகளை அதிசயங்களால் நிரப்பியுள்ளார், வாழ்க்கைப் பாதையில் நிச்சயமாக நாம் கண்களை மூடிக்கொண்டு செல்லக்கூடாது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்


  • நீங்கள் கடவுளை மறந்துவிட்டீர்களா? நீங்கள் அவரை மறந்தாலும் அவர் உங்களை மறக்கவில்லை. --மோசே


  • ஈர்ப்புசக்தி கோள்களின் இயக்கங்களை விளக்குகிறது, ஆனால் கோள்களை இயக்கிவிட்டது யார் என்பதை விளக்க முடியாது. --ஐசக் நியூட்டன்


  • உங்கள் இருதயத்தைத் திறந்து எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளை அழையுங்கள், ஏனெனில் கடவுள் களத்தில் நுழையும் போது அற்புதங்கள் நிகழ்கின்றன. --விக்டோரியா ஓஸ்டீன்


  • சிலர் அதைப் பரிணாமம் என்று அழைக்கிறார்கள், மற்றவர்கள் அதைக் கடவுள் என்றும் அழைக்கிறார்கள். --சார்லஸ் டார்வின்


  • கடவுள் அனைத்தையும் எண், எடை மற்றும் அளவு மூலம் படைத்தார். --ஐசக் நியூட்டன்


  • கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார், அவர் என்னை ஏதாவது செய்வதற்காக அனுப்பினார், என்னை யாரும் தடுக்க முடியாது. கடவுள் என்னைத் தடுக்க விரும்பினால், நான் நிறுத்துகிறேன். மனிதனால் ஒருபோதும் முடியாது. --பாப் மார்லி


  • கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்று எனக்கு அக்கறை இல்லை, கடவுளின் பக்கத்தில் நான் இருக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய அக்கறை, ஏனென்றால் கடவுள் எப்போதும் சரியானவர். --ஆபிரகாம் லிங்கன்


  • கடவுள் நம் பக்கம் இருப்பதாகக் கூறுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் பதிலளிக்க வேண்டிய உண்மையான கேள்வி என்னவென்றால், நாம் அவருடைய பக்கம் இருக்கிறோமா என்பதுதான் என்று நான் நினைக்கிறேன். --ரொனால்ட் ரீகன்


  • கடவுளுக்கு அஞ்சுங்கள், உங்கள் எதிரிகள் உங்களுக்கு அஞ்சுவார்கள். --பெஞ்சமின் பிராங்க்ளின்


  • அறியாமை என்பது கடவுளின் சாபம், அறிவு என்பது நாம் சொர்க்கத்திற்குப் பறப்பதற்கான சிறகு. --வில்லியம் ஷேக்ஸ்பியர்


  • கடவுள் இல்லை என்றால், அவரை நம்புவதன் மூலம் ஒருவர் எதையும் இழக்க மாட்டார், அதே நேரத்தில் அவர் இருக்கிறார் என்றால், அவரை நம்பாததால் ஒருவர் அனைத்தையும் இழக்க நேரிடும். --பிலைஸ் பாஸ்கல்


  • மனிதன் கடவுளிடமிருந்து தன்னை வேறுபடுத்தி, உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் தவறைச் செய்கிறான். --சுவாமி விவேகானந்தர்


  • கடினமாக உழைக்கும் மக்களுக்கு மட்டுமே கடவுள் உதவுகிறார் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்தக் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்


  • நான் கடவுளுக்கு அஞ்சவில்லை, நான் அவருடைய விசுவாசிகளுக்கு அஞ்சுகிறேன். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்


  • நான் கடவுளை நம்பவில்லை என்று கூறுவேன், ஆனால் நான் சொல்வதை அவர் கேட்டுக்கொண்டிருக்கலாம் என்று பயப்படுகிறேன். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்


  • கடவுள் செய்த எல்லாவற்றிற்கும் நான் அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன், அவர் இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. --உசைன் போல்ட்


  • இந்தச் சக்தி என்ன என்பதை என்னால் கூற முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், அது இருக்கிறது என்பது மட்டுமே. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்


  • கடவுள் உங்களுக்கு அருகில் இருக்கிறார், உங்களுடன் இருக்கிறார், உங்களுக்குள் இருக்கிறார். --செனிக்கா


  • நாங்கள் மனிதர்களுக்கு மிக அதிகமாக பயப்படுகிறோம், ஏனெனில் நாங்கள் கடவுளுக்கு மிகக் குறைவாகவே பயப்படுகிறோம். --வில்லியம் குர்னால்


  • கடவுள் என்னை மன்னிக்கும்போது, நானும் அதைச் செய்வது சிறந்தது என்று நினைக்கின்றேன். --ஜானி கேஷ்


  • கடவுளிடம் பேச ஆசைப்படுவது அபத்தமானது. நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒருவரிடம் நம்மால் பேச முடியாது - கடவுளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது, நாம்மால் அவரை நம்ப மட்டுமே முடியும். --இம்மானுவேல் கான்ட்


  • நான் எப்படி கடவுளை நம்புகிறேன் என்று நான் உங்களுக்கு சொல்லப்போவதில்லை, ஆனால் நான் கடவுளை நம்புகிறேன். --குவென்டின் டரான்டினோ


  • கடவுள் எனக்கு அளித்த திறமைக்காக நான் நன்றி கூறுகிறேன், அவர் என்னை படைத்த சூழலுக்காக நான் நன்றி கூறுகிறேன். --எமினெம்


  • ஒரு மனிதன் கடவுள் என்று அழைப்பதை, இன்னொருவன் இயற்பியல் விதிகள் என்று அழைக்கிறான். --நிக்கோலா டெஸ்லா


  • நீங்கள் கடவுளுடன் தனிமையில் இருக்கும்போது மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கும். --ரூமி


  • அமைதியாக இருங்கள், கடவுளின் கரத்தால் மட்டுமே உங்கள் இதயத்தின் சுமைகளை அகற்ற முடியும். --ரூமி


  • நான் கடவுளைத் தேடினேன், என்னை மட்டுமே கண்டுபிடித்தேன். நான் என்னைத் தேடினேன், கடவுளை மட்டுமே கண்டுபிடித்தேன். --ரூமி


  • நான் பார்த்தவை அனைத்தும் நான் பார்க்காத அனைத்தையும் படைத்தவரை நம்ப எனக்கு கற்றுக்கொடுக்கிறது. --ரால்ப் வால்டோ எமர்சன்


  • கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள், இருந்தும் நாங்கள் எப்போதும் அவரை ஏதோ ஒரு தனிமனிதனாகவே நினைக்கிறோம். --எமிலி டிக்கின்சன்


  • எல்லா நேரத்திலும் தான் புகழப்பட வேண்டும் என்று விரும்பும் கடவுளை என்னால் நம்ப முடியாது. --ஃபிரெட்ரிக் நீட்சே


  • கடவுள் எல்லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர் மற்றும் முற்றிலும் நல்லவர் என்றால், தீமை எங்கிருந்து வருகிறது? கடவுள் தீமையைத் தடுக்க விரும்பினாலும் அவரால் முடியாது என்றால், அவர் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல. அவரால் தீமையைத் தடுக்க முடியும் ஆனாலும் அவர் அதைச் செய்யாவிட்டால், அவர் நல்லவர் அல்ல. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் கடவுள் இல்லை. --டேவிட் ஹியூம்


  • காரணம் இல்லாமல் எதுவுமே இல்லை, இந்தப் பிரபஞ்சத்தின் மூல காரணத்தை நாம் கடவுள் என்று அழைக்கின்றோம்.--டேவிட் ஹியூம்


  • தெய்வத்திற்கு மனித உணர்வுகள் இருக்கும் என்று நம்புவது அபத்தமானது. --டேவிட் ஹியூம்

  • புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் தெய்வீகம் என்று அழைத்தால், தெய்வீகமான விடயங்களுக்கு முடிவே இருக்காது. --ஹிப்போகிரட்டீஸ்


  • நான் எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்கின்றேனோ, நான் அவ்வளவு அதிகமாக கடவுளை நம்புகிறேன். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


  • கடவுள் மக்கள் தன்னை நம்ப வேண்டும் என்று விரும்பினால், பிறகு ஏன் அவர் தர்க்கத்தை உருவாக்கினார்?. --டேவிட் ஃபெஹெர்டி


  • கடவுளின் இருப்பைக் கூட தைரியமாக கேள்வி கேளுங்கள். --தாமஸ் ஜெபர்சன்


  • வானத்தில் ஒரு கண்ணுக்கு தெரியாத மனிதன் வாழ்கிறான் என்று மதம் உண்மையில் மக்களை நம்ப வைத்துள்ளது. --ஜார்ஜ் கார்லின்


  • கடவுள் இல்லை என்றால், அவரைக் கண்டுபிடிப்பது அவசியம். --வால்டேர்


  • நான் தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாக கடவுளை நம்புகிறேன், அந்த நம்பிக்கை அறிவியலைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றுடன் ஒத்துப்போகிறது. --வில்லியம் டேனியல் பிலிப்ஸ்


  • நான் கடவுளை பெரிதும் நம்புகிறேன், நான் கடவுளை நம்புகிறேன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். --சூஸ் ஓர்மன்


  • நான் கடவுளை நம்புகிறேன் ஆனால் மக்கள் பொய்யர்கள். தாங்கள் கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறுபவர்களைத்தான் நான் நம்பவில்லை. --ஐசக் பஷேவிஸ் சிங்கர்


  • நான் கடவுளை நம்புகிறேன், நான் மனிதனுக்கு பயப்படுவதில்லை, நான் கடவுளுக்கு பயப்படுகிறேன். --டென்சல் வாஷிங்டன்


  • ஆமாம், நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிறைய சான்றுகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அன்னை தெரேசாவும் ஹிட்லரும் ஒரே இடத்திற்குச் செல்கிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. --டேவிட் ஜுக்கர்



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.