தோல்வியைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
தோல்வியைப் பற்றிய பொன்மொழிகள்
தன் வாழ்நாளில் ஒருமுறை கூட காதலைச் சந்திக்காதவர்கள் கூட இந்த உலகில் உண்டு, ஆனால் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட தோல்வியைச் (Failure) சந்திக்காதவர்கள் யாரும் இல்லை. தோல்வி எனும் படிக்கல்லை மிதிக்காமல் வெற்றி எனும் சிகரத்தை அடைந்தவர் இங்கு யாரும் இல்லை. ஒரு மூன்றடுக்கு மாடியில் முதல் மாடியில் ஏறாமலே மூன்றாவது மாடிக்குச் செல்ல ஆசைப்படுவது எப்படியோ, அப்படித்தான் தோல்வியைச் சந்திக்காமலே வெற்றியடைய ஆசைப்படுவதும்.
வெற்றிக்கனியை சுவைக்க வேண்டுமென்றால் தோல்வி (Failure) எனும் ஏணியில் ஏறித்தான் ஆகவேண்டும். தோல்வி என்பது ஒரு படிநிலை மட்டுமே அது ஒரு இறுதி விளைவு அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தோல்வியும் ஒரு நிகழ்வு மட்டுமே, ஒரு முறை தோற்றால் மறுமுறை என்னும் அதிக பலமாக முயற்சி செய்வோம். நினைத்ததை வென்று சரித்திரம் படைப்போம். அடிமோல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். விடாமுயற்சியால் எதையும் வென்று முடிப்போம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Failure quotes in Tamil
- ஒவ்வொரு தோல்விக்கும், ஒரு மாற்று நடவடிக்கை உண்டு. வெறுமனே நீங்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் செல்லும் பாதை தடைப்படும் போது, மாற்றுப்பாதையில் செல்லுங்கள். --மேரி கே ஆஷ்
- என்னால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும், எல்லோரும் ஏதோ ஒன்றில் தோல்வியடைகிறார்கள், ஆனால் முயற்சி செய்யாமல் இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. --மைக்கேல் ஜோர்டான்
- தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல, அது வெற்றியின் ஒரு பகுதி. --அரியன்னா ஹஃபிங்டன்
- வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர், அவர்களின் முயற்சியைக் கைவிட்டபோது அவர்கள் வெற்றிக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை உணராதவர்கள். --தாமஸ் அல்வா எடிசன்
- உங்கள் தோல்விகளால் சங்கடப்படாதீர்கள், அவைகளிடமிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் தொடங்குங்கள். --ரிச்சர்ட் பிரான்சன்
- வெற்றி என்பது தோல்வியில் இருந்து தோல்விக்கு உற்சாகத்தை இழக்காமல் செல்வதில் உள்ளது. --வின்ஸ்டன் சர்ச்சில்
- நேற்று நீங்கள் கீழே விழுந்தால், இன்று எழுந்து நில்லுங்கள். --எச். ஜி. வெல்ஸ்
- வெற்றி பெறுவதற்கு, வெற்றிக்கான உங்கள் விருப்பம் தோல்விக்கான உங்கள் பயத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். --பில் காஸ்பி
- தோல்வியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டால், உண்மையில் நீங்கள் தோற்கவில்லை. --ஜிக் ஜிக்லர்
- தோல்வி என்பது ஒரு நபர் அல்ல ஒரு நிகழ்வு என்பதை நினைவில் கொள்ளுங்கள். --ஜிக் ஜிக்லர்
- தோல்வியைப் பற்றிய அற்புதமான விஷயம் என்னவென்றால், அது தற்காலிகமானது மட்டுமே. அதை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் பிரகாசியுங்கள். --ஜோயல் பிரவுன்
- முயற்சி செய்யத் தவறுவதே மிகப்பெரிய தோல்வி. --வில்லியம் ஆர்தர் வார்டு
- உங்களால் தவிர்க்க முடியாததைக் குறித்து அஞ்சுவது முட்டாள்தனம். --பப்ளிலியஸ் சைரஸ்
- வெற்றி என்பது எப்போதாவது நிரந்தரமானது, தோல்வி என்பது எப்போதாவது அபாயகரமானது. முக்கியமான விஷயம் தொடர்ந்து முயற்சி செய்வதுதான். --அண்ணா ஓல்சன்
- முயற்சியைக் கைவிடுவதே தோல்வியடைவதற்கு உறுதியான ஒரே வழி. --ஜீனா ஷோல்டர்
- தொண்ணூற்றொன்பது சதவிகித தோல்விகள், சாக்குப்போக்குச் சொல்லும் பழக்கமுள்ளவர்களிடமிருந்து வருகிறது. --ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
- பெரிதாகத் தோல்வியடையத் துணிந்தவர்களால் மட்டுமே எப்பொழுதும் பெரிதாகச் சாதிக்க முடியும். --ராபர்ட் கென்னடி
- ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான ஒரு படியாகும். --வில்லியம் வீவெல்
- தோல்வி ஒரு அவமானம் அல்ல. தோல்வி என்பது உலகின் மிகச்சிறந்த கலைகளில் ஒன்றாகும். --சார்லஸ் கெட்டரிங்
- ஒரு கனவை அடைய முடியால் செய்ய ஒரு விஷயம் மட்டுமே உள்ளது: தோல்வி பயம். --பாலோ கோயல்ஹோ
- முயற்சி செய்து தோல்வியடையுங்கள், ஆனால் முயற்சி செய்யத் தவறாதீர்கள். --ஜான் குயின்சி ஆடம்ஸ்
- தோல்விக்கு அஞ்சாவிட்டால் மட்டுமே நீங்கள் வெற்றியடைவீர்கள். --ஹிரோகி அயோகி
- தோல்வி என்பது வெறுமனே மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பாகும், இந்த முறை இன்னும் அதிக புத்திசாலித்தனமாக. --ஹென்றி ஃபோர்ட்
- நேர்மையான தோல்வியில் எந்த அவமானமும் இல்லை, தோல்விக்குப் பயப்படுவதே அவமானமாகும். --ஹென்றி ஃபோர்ட்
- வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த இடத்திலேயே நீங்கள் வீழ்ந்தே கிடக்கும் போது தான் தோல்வி வரும். --சாக்ரடீஸ்
- தோல்வி வேடிக்கையானது அல்ல, அது மோசமானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் தோல்வியடையக் கூடாது என மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்வது மோசமானது. --ஜே. கே. ரௌலிங்
- தோல்வி மிகவும் முக்கியமானது, நாங்கள் எப்பொழுதுமே வெற்றியைப் பற்றிப் பேசுகிறோம். தோல்வியைத் தாங்குவதற்கான திறன் அல்லது தோல்வியைப் பயன்படுத்துவது பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கிறது. தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் முயற்சி செய்ய விரும்பாதவர்களை நான் சந்தித்திருக்கிறேன். --ஜே. கே. ரௌலிங்
- தோல்வியை ஒப்புக்கொள்ள பயப்படாதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மோசமாகச் செய்ததை இன்னும் முழுமையாகவும், இன்னும் கவனமாகவும், இன்னும் முறையாகவும் செய்யுங்கள். --விளாடிமிர் லெனின்
- நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. இது உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும். --ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
- தோல்வி பயத்தால் முடங்கிப்போய் இருப்பது தோல்வியை விட மோசமானது. --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- தோல்வியடைவதற்குப் பயப்படாதீர்கள். நான் முயற்சித்த எதிலும் எப்போதும் தோல்வியடையத் தயாராக இருந்தேன். உங்களால் எப்போதும் வெல்ல முடியாது, ஆனால் முடிவுகளை எடுக்கப் பயப்படாதீர்கள். --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- தோல்விக்கு அஞ்சாதீர்கள். தோல்வி ஒரு குற்றமல்ல, ஆனால் சிறிய இலக்கே குற்றமாகும். பெரும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் கூட அவை போற்றத்தக்கவை. --புரூஸ் லீ
- நான் தோல்வியடையவில்லை, வெற்றி பெறமுடியாத 10,000 வழிகளைக் கண்டுபிடித்தேன். --தாமஸ் அல்வா எடிசன்
- நான் 1000 முறைகள் தோல்வியடையவில்லை. ஒளி விளக்கு 1000 படிநிலைகள் கொண்ட ஒரு கண்டுபிடிப்பு. --தாமஸ் அல்வா எடிசன்
- நீங்கள் தோல்வியுறும் ஒவ்வொரு முறையும், மற்றொரு தவறான தெரிவை நீக்கிவிட்டீர்கள். --தாமஸ் அல்வா எடிசன்
- நான் 99 முறை தோல்வியடைந்தேன் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், தோல்விக்கு காரணமான 99 வழிகளை நான் கண்டுபிடித்தேன் என்று சொல்லுங்கள். --தாமஸ் அல்வா எடிசன்
- நான் ஒருபோதும் தவறுகளைத் தோல்விகள் என்று கருதுவதில்லை, அவை வெறுமனே வெற்றி பெறமுடியாத வழிகளைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளாகும். --தாமஸ் அல்வா எடிசன்
- ஒரு கலைஞரின் வாழ்க்கையில் தோல்வி பெரும் வெகுமதிகளைத் தருகிறது. --குவென்டின் டரான்டினோ
- வெற்றிக்கான சூத்திரத்தை என்னால் உங்களுக்கு வழங்க முடியாது, ஆனால் தோல்விக்கான சூத்திரத்தை என்னால் உங்களுக்கு வழங்க முடியும் - அதாவது: அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்யுங்கள். --ஹெர்பர்ட் பேயார்ட் ஸ்வோப்
- தோல்விக்குப் பயந்தால் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள். --ஸ்டீவ் ஜாப்ஸ்
- தோல்வியை உங்கள் இதயத்திற்கு செல்ல விடாதீர்கள், வெற்றியை உங்கள் தலைக்கு செல்ல விடாதீர்கள். --வில் ஸ்மித்
- நீங்கள் ஒரு முறை தோல்வியடைந்ததால், நீங்கள் எல்லாவற்றிலும் தோல்வியடைவீர்கள் என்று அர்த்தமல்ல. --மர்லின் மன்றோ
- தோல்வி என்பது பெரும்பாலும் அதிகாலை நேர இருளாகும், அதாவது வெற்றி நாளின் விடியலுக்கு முந்தைய நேரமாகும். --லெய்க்ஹ் மிட்செல் ஹாட்ஜஸ்
- யாரும் தோல்வியடைவதற்கு விரும்புவதில்லை. நான் செய்யும் அனைத்திலும் நான் வெற்றிபெற விரும்புகிறேன். --எமினெம்
- நாம் வெற்றி பெற்றால் யாரும் கவனிக்க மாட்டார்கள். நாம் தோல்வியடைந்தால் கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். --வின்ஸ்டன் சர்ச்சில்
- வெற்றி என்பது இறுதியானது அல்ல, தோல்வி என்பது அபாயகரமானது அல்ல, தொடர்வதற்கான தைரியம்தான் முக்கியமானது. --வின்ஸ்டன் சர்ச்சில்
- தோல்விகள் தங்கள் வெற்றிகளுக்கான முன்னேற்பாடு என்பதை உணரும்போது மனிதர்கள் வெற்றி பெறுகிறார்கள். --ரால்ப் வால்டோ எமர்சன்
- நேற்றைய தோல்விகளைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், இன்றைய வெற்றிகள் குறைவாகவே இருக்கும். நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும். --மகாத்மா காந்தி
- வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி முயற்சியை நிறுத்துவதே. --நெப்போலியன் ஹில்
- மக்கள் வாழ்க்கையில் தோல்வியடைவதற்கு முதற் காரணம், அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டாரின் பேச்சைக் கேட்பதுதான். --நெப்போலியன் ஹில்
- சாக்குப்போக்கு சொல்லும் நபர்களிடமிருந்தே 99% தோல்விகள் வருகின்றன. --ஜார்ஜ் வாஷிங்டன்
- ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றிக்கான விதைகள் உள்ளன. --தீபக் சோப்ரா