கோபத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

 கோபத்தைப் பற்றிய பொன்மொழிகள்

Anger


சினத்தால் குணத்தை இழந்து, குணத்தால் உறவை இழந்து உறவால் வாழ்வை இழந்து, வாழ்வில் நிம்மதியை இழந்தவர் கோடி. கோபம் எனும் கொடுங்கோலன், செங்கோல் எடுத்து ஆட்சி செய்தால், கோடி புகழ் பெற்றாலும் வெறும் கோமாளி ஆகிடுவான். உள்ளத்திலே உண்மையின்றி, எண்ணத்திலே திண்ணமின்றி, வார்த்தையிலே வசைபாடித்திரிய கோபமென்னும் (Anger) கோமாளியே காரணம்.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள், ஆத்திரத்தால் ஆட்சியை இழந்தவர்களும் உண்டு, கோபத்தால் கோட்டையை இழந்தவர்களும் உண்டு. அப்படியென்றால் கோபம் (Anger) என்பது வேண்டத்தகாத உணர்ச்சியா?, பிறகு ஏன் "ரெளத்திரம் பழகு" என்று பாரதி சொன்னான். அறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொள்வோம் வாருங்கள்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Anger quotes in Tamil 


  • நீங்கள் கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது விநாடிகள் உங்கள் மன அமைதியை இழக்கிறீர்கள். --ரால்ப் வால்டோ எமர்சன்

 

  • யாரேனும் செய்த தவறுக்காக நீங்கள் கோபப்படும்போது, உங்கள் சொந்தத் தவறுகளைக் கொஞ்சம் ஆராயுங்கள். பிறகு உங்கள் கோபத்தை மறந்து விடுவீர்கள். --எபிக்டெட்டஸ்

 

  • ஆத்திரம் என்பது நீங்கள் விஷம் குடித்துவிட்டு, மற்றவர் இறப்பார் என காத்திருப்பதைப் போன்றது. --கேரி ஃபிஷர்

 

  • கோபம் எதற்குமே தீர்வாகாது என்பதை நினைவுபடுத்துகிறேன், அது எதையுமே உருவாக்காது, ஆனால் அது எல்லாவற்றையும் அழித்துவிடும். --தாமஸ் எஸ். மோன்சன்

 

  • உங்களைக் கோபப்படுத்தும் எந்தவொரு நபரும் உங்கள் எஜமானராக மாறுகிறார். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே அவர் உங்களைக் கோபப்படுத்த முடியும். --எபிக்டெட்டஸ்

 

  • கோபத்தில் தொடங்கப்படும் எதுவும், அவமானத்தில் முடிகிறது. --பெஞ்சமின் பிராங்க்ளின்

 

  • பயம் என்பது இருண்ட பக்கத்திற்கான பாதையாகும். பயம் கோபத்திற்கு வழிவகுக்கிறது. கோபம் வெறுப்புக்கு வழிவகுக்கிறது. வெறுப்பு துன்பத்திற்கு வழிவகுக்கிறது. --ஜார்ஜ் லூகாஸ்

 

  • உங்களைக் கோபப்பட வைப்பவர், உங்களை வெல்வார். --எலிசபெத் கென்னி

 

  • கோபம் ஒரு தற்காலிக பைத்தியக்காரத்தனம், எனவே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள், அல்லது அது உங்களைக் கட்டுப்படுத்தும். --ஹோரேஸ்

 

  • கோபம் ஒரு மிகப்பெரிய சக்தி. உங்களால் அதைக் கட்டுப்படுத்த முடிந்தால், இந்த முழு உலகையும் நகர்த்தக்கூடிய சக்தியாக அதை மாற்றலாம். --வில்லியம் ஷென்ஸ்டோன்

 

  • நீங்கள் கோபமாக இருந்தால் பேசுவதற்கு முன் ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள். மிகவும் கோபமாக இருந்தால், ஒன்று முதல் நூறு வரை எண்ணுங்கள். --தாமஸ் ஜெபர்சன்

 

  • ஒரு சிறந்த போராளி ஒருபோதும் கோபப்படுவதில்லை. --லாவோசி

 

  • உங்கள் குழந்தைகளுக்கு ஒருபோதும் கோபப்பட வேண்டாம் என்று கற்பிக்காதீர்கள்; எப்படிக் கோபப்பட வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். --லைமன் அபோட்

 

  • ஒரே நேரத்தில் கோபப்படுவதும் சிரிப்பதும் உங்களால் சாத்தியமற்றது. கோபமும் சிரிப்பும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது., மேலும் இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும் அதிகாரம் உங்களுக்கு உள்ளது. --வெய்ன் டயர்

 

  • கோபத்திற்குச் சிறந்த நிவாரணி தாமதித்தல். --ப்ரிகாம் யங்

 

  • உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.  --கெளதம புத்தர்

 

  • கோபம் முட்டாள்களின் நெஞ்சில் மட்டுமே குடியிருக்கிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 

  • சரியான இடத்தில், சரியான நபருக்கு எதிராக, சரியான விதத்தில், சரியான நேரத்தில், சரியான கால அளவில் கோபப்படும் மனிதனை நாங்கள் போற்றுகின்றோம். --அரிஸ்டாட்டில்

 

  • கோபம் அகிம்சையின் எதிரி, அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன். --மகாத்மா காந்தி

 

  • நீங்கள் உங்கள் கோபத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால் கோபத்தில் தவறில்லை. --வெய்ன் டயர்

 

  • நீங்கள் அனுமதிக்காதவரை உங்களை யாரும் பொறாமைப்படவோ, கோபப்படவோ, பழிவாங்கவோ அல்லது பேராசைப்படவோ வைக்க முடியாது. --நெப்போலியன் ஹில் 

 

  • உண்மையைப் பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும். --கெளதம புத்தர் 

 

  • ஒரு மனிதனின் மேன்மையை எது அவனைக் கோபப்படுத்துகிறது என்பதை வைத்துக் கூற முடியும். --ஆபிரகாம் லிங்கன்

 

  • பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது. --நெல்சன் மண்டேலா


  • யார் வேண்டுமானாலும் கோபப்படலாம் அது எளிதானது, ஆனால் சரியான நபருடன், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்திற்காக, சரியான முறையில் கோபப்படும் ஆற்றல் அனைவருக்கும் இல்லை மற்றும் அது எளிதானது அல்ல. --அரிஸ்டாட்டில்


  • நீங்கள் சரியாக இருக்கும்போது, ​​நீங்கள் கோபப்பட வேண்டிய அவசியமில்லை, நீங்கள் தவறாக இருக்கும்போது, ​​உங்களுக்கு கோபப்பட உரிமை இல்லை. --மகாத்மா காந்தி


  • நம்மை கோபப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் விடயங்களை விட நமது கோபமும் எரிச்சலும் நமக்கு அதிக தீங்கு விளைவிக்கும். --மார்கஸ் அரேலியஸ்




உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.