ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொன்மொழிகள்

Albert Einstein

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரும், மற்றும் 1921 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசையும் வென்றவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein). தற்காலத்தில் "நீ என்ன பெரிய ஐன்ஸ்டைன் ஆ" என்று மக்கள் கேக்கும் அளவிற்கு புத்திசாலித்தனத்தின் குறியீடாகவே மாறிவிட்டார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தனது வாழ்நாளில் பல அரிய கண்டுபிடிப்புக்களையும், சமன்பாடுகளையும் அறிவியல் உலகிற்குத் தந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein). இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் ஐன்ஸ்டீன் ஒரு அதிசய பிறவியாகவே தோன்றுவார். ஐன்ஸ்டைனின் ஆழம்மிக்க கருத்துக்களைப் படித்துப் பயனடைவோம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Albert Einstein quotes in Tamil

 

  • எல்லோரும் ஒரு மேதையே. ஆனால் நீங்கள் ஒரு மீனை மரத்தில் ஏறும் திறனைக் கொண்டு மதிப்பிட்டால், அது தன் வாழ்நாள் முழுவதும் தான் ஒரு முட்டாள் என்ற நம்பிக்கையிலேயே வாழும்.

 

  • பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள்.

 

  • அறியாமையை விட ஆபத்தான ஒரே விஷயம் ஆணவம்.

 

  • தீமை செய்பவர்களால் உலகம் அழிக்கப்படாது, ஆனால் எதையும் செய்யாமல் அதை வேடிக்கை பார்ப்பவர்களால் தான் அழிக்கப்படும்.

 

  • தகவல் ஒரு அறிவு அல்ல. அறிவின் ஒரே மூலம் அனுபவம் மட்டுமே. ஞானத்தை அடைய உங்களுக்கு அனுபவம் தேவை.

 

  • பதில்களைக் கொண்ட நபரில் கவனம் செலுத்தாதீர்கள், கேள்விகளைக் கொண்ட நபரில் கவனம் செலுத்துங்கள்.

 

  • தர்க்கம் உங்களை ஒரு புள்ளியில் இருந்து என்னொரு புள்ளிக்கு அழைத்துச் செல்லும். கற்பனை உங்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்.

 

  • பிரச்சினைகளை உருவாக்கியபோது நாம் பயன்படுத்திய அதே சிந்தனையைக்கொண்டு, எங்களால் அவற்றைத் தீர்க்க முடியாது.

 

  • முட்டாள்தனத்திற்கு எதிரான தடுப்பூசி இங்கே இல்லை.

 

  • வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது.

 

  • பைத்தியம்: ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கும்.

 

  • அறிவை விட கற்பனை முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது.

 

  • எதையாவது நீங்கள் நம்புவதால் மட்டுமே, அது உண்மை என்று அர்த்தமாகாது.

 

  • நான் எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்கின்றேனோ, நான் அவ்வளவு அதிகமாக கடவுளை நம்புகிறேன்.

 

  • நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணையுங்கள், மக்களுடனோ அல்லது பொருட்களுடனோ அல்ல.

 

  • சிந்தனை செய்வது ஒரு கடினமான வேலை, அதனால்தான் மிகச் சிலரே அதைச் செய்கிறார்கள்.

 

  • மூன்று பெரிய சக்திகள் உலகை ஆளுகின்றன: முட்டாள்தனம், பயம் மற்றும் பேராசை.

 

  • நேற்றிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், இன்றைக்காக வாழுங்கள், நாளை மீது நம்பிக்கை வையுங்கள். முக்கியமான விடயம் கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள்.

 

  • அற்புதங்களுக்காக காத்திருக்காதீர்கள், உங்கள் முழு வாழ்க்கையே ஒரு அற்புதம் தான்.

 

  • மேதைகள் சிக்கலான யோசனைகளை எளிமையாக்குகிறார்கள், எளிய யோசனைகளை சிக்கலாக்குவதில்லை.

 

  • உங்களால் அதை எளிமையாக விளக்க முடியாவிட்டால், நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்ளவில்லை.

 

  • என் வாழ்வில் சிறந்த மகிழ்ச்சியை, நான் இசையில் இருந்து பெறுகிறேன்.

 

  • பெண்கள் எப்பொழுதும் ஆண்கள் மறக்கும் விடயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள், ஆண்கள் எப்பொழுதும் பெண்கள் நினைவில் வைத்திருக்கும் விடயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

 

  • ஒரு புத்திசாலி பிரச்சினையைத் தீர்க்கிறான். ஞானமுள்ளவன் அதைத் தவிர்க்கிறான். 


  • கோபம் முட்டாள்களின் நெஞ்சில் மட்டுமே குடியிருக்கிறது.


  • நீங்கள் காதலில் விழுந்ததற்குப் புவி ஈர்ப்பைக் குறை சொல்ல முடியாது.


  • ஆண்கள் மாறிவிடுவார்கள் என்று நம்பி பெண்கள் ஆண்களைத் திருமணம் செய்கிறார்கள். பெண்கள் மாறமாட்டார்கள் என்று நம்பி ஆண்கள் பெண்களைத் திருமணம் செய்கிறார்கள்.


  • புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல கற்பனை.


  • உள்ளுணர்வு சார்ந்த மனம் ஒரு புனிதமான பரிசு மற்றும் பகுத்தறிவு சார்ந்த மனம் ஒரு உண்மையுள்ள ஊழியர். நாங்கள் ஊழியரை மதிக்கும் மற்றும் பரிசை மறந்துவிட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம்.


  • புத்திசாலித்தனத்தின் அளவுகோல் மாறும் திறனாகும்.


  • ஒருவர் பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.


  • நேரம் என்பது ஒரு மாயை.


  • ஒரு மேசை, ஒரு கதிரை, ஒரு கிண்ணம் நிறைய பழங்கள் மற்றும் ஒரு வயலின், ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேறு என்ன வேண்டும்?.


  • எனது மாணவர்களுக்கு நான் ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறேன்.


  • உண்மையான மதிப்புமிக்க விடயம் உள்ளுணர்வு மட்டுமே.


  • உள்ளுணர்வுள்ள மனம் ஒரு புனிதமான பரிசு.




உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.