வெற்றியைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
வெற்றியைப் பற்றிய பொன்மொழிகள்
வெற்றி (Success) என்பது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சுவைக்கத்துடிக்கும் ஒரு மாயக்கனி. பல மனிதர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் இந்த மாயக்கனியை, எட்டிப் பறிப்பது எப்படி என்பதே அனைவரினதும் தேடல். நீங்கள் எட்டிப்பறிக்க முயலும் போது சிலர் உங்களிடமிருந்து தட்டிப் பறிக்கக் கூட முயலலாம். எதுவாயினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் வள்ளுவனின் வாக்குக்கிணங்க முயற்சியினால் முன்னேறிச் செல்வோம்.
தடைகளை உடைத்து சரித்திரம் படைத்து, பகைவனை எதிர்த்து வெற்றிப் படிதனை அமைத்து, கரும்பென இனித்து இன்பக் கனிதனைப் பறித்து, வெற்றிக் கணைதனை எடுத்து தரணியில் நிறுத்து. துரும்பென நினைத்து உனை மறந்தவர் எதற்கு, விடியலும் உனக்கு விருந்திட இருக்கு. இதற்கு மேலும் கவிதை சொல்லி உங்களைக் கலங்கடிக்க விரும்பவில்லை "வெற்றி" (Success) பற்றிய பொன்மொழிகளுக்குச் செல்லலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Success quotes in Tamil
- வெற்றி என்பது மனதின் நிலை. நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாரளாக நினைக்கத் தொடங்குங்கள். --ஜாய்ஸ் பிரதர்ஸ்
- வெற்றிக்கான இரகசியம் என்று எதுவும் இல்லை, இது முன்னேற்பாடு, கடின உழைப்பு மற்றும் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளல் இவைக்கான பிரதிபலனாகும். --கொலின் பவல்
- தடைகள் குறுக்கிடும் போது, இலக்கை அடைவதற்கான உங்கள் திசையை மாற்றுங்கள், இலக்கை அடைய வேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை மாற்றாதீர்கள். --ஜிக் ஜிக்லர்
- இந்தக் கணத்தில் சிறந்த ஒன்றைச் செய்வது, அடுத்த கணத்தில் உங்களைச் சிறந்த இடத்தில் வைக்கிறது. --ஓப்ரா வின்ஃப்ரே
- மெதுவாக வளரும் மரங்களே, சிறந்த பழங்களைத் தருகின்றன. --மோலியர்
- உங்களால் அதைக் கற்பனை செய்ய முடிந்தால், உங்களால் அதை அடைய முடியும். உங்களால் அதைக் கனவு காண முடிந்தால், உங்களால் அதுவாகவே ஆக முடியும். --வில்லியம் ஆர்தர் வார்டு
- வெற்றி என்பது முன்னேற்பாடும் வாய்ப்பும் சந்திக்கும் இடம். --பாபி அன்சர்
- நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள், நீங்கள் செய்வதை நேசித்து செய்யுங்கள், நீங்கள் செய்வதை நம்பிக்கையுடன் செய்யுங்கள். --வில் ரோஜர்ஸ்
- வெற்றிகரமான மனிதர்கள் வெறுமனே வெற்றிகரமான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள். --பிரையன் ட்ரேசி
- வெற்றி என்பது நீங்கள் ஒவ்வொருநாளும் செய்யும் சிறு சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகையாகும். --ராபர்ட் கோலியர்
- வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை. ஆனால் தோல்வியாளர்கள் பயப்பிடுகிறார்கள். தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும். தோல்வியை புறக்கனிக்கும் மக்கள் வெற்றியையும் புறக்கனிக்கிறார்கள். --ராபர்ட் கியோசாகி
- செயலே அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமாகும். --பப்லோ பிகாசோ
- தன்னம்பிக்கையும் கடின உழைப்பும், உங்களுக்கு எப்போதும் வெற்றியைத் தரும். --விராட் கோலி
- திறமை ஒரு பரிசு, ஆனால் கடின உழைப்பால் மட்டுமே உங்களால் வெற்றியடைய முடியும். --ஜீன் பெலிவோ
- சுய ஒழுக்கம் இல்லாமல், வெற்றி சாத்தியமற்றது. --லூ ஹோல்ட்ஸ்
- வெற்றியில் ஆர்வமுள்ள மனிதர்கள், தோல்வியை ஒரு ஆரோக்கியமான, தவிர்க்கமுடியாத படிநிலையாக கருதக் கற்றுக்கொள்ள வேண்டும். --ஜாய்ஸ் பிரதர்ஸ்
- வெற்றிக்கான பாதையில் வேகக்கட்டுப்பாடு எதுவும் இல்லை. --டேவிட் டபிள்யூ. ஜான்சன்
- எங்களை நாங்களே உருவாக்குகின்றோம், ஆனால் வெற்றியாளர்கள் மட்டுமே அதை ஒப்புக்கொள்வார்கள். --ஏர்ல் நைட்டிங்கேல்
- வாழ்க்கையில் நீங்கள் விரும்பியதை அடைய இன்றியமையாத முதற்படி, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானித்தல். --பென் ஸ்டீன்
- ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த விடயங்களை ஒருபோதும் அடைய முடியாது. --நிக்கோலோ மச்சியாவெல்லி
- ஒரு வெற்றிகரமான மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு வலிமையின் பற்றாக்குறை அல்ல, அறிவின் பற்றக்குறை அல்ல, மாறாக விருப்பத்தின் பற்றாக்குறையாகும். --வின்ஸ் லோம்பார்டி
- வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது "விடாமுயற்சி" என்று நான் நம்புகிறேன். --ஸ்டீவ் ஜாப்ஸ்
- வெற்றி பெற்ற வீரர்கள் முதலில் வென்றுவிட்டு பின்னர் போருக்குச் செல்கிறார்கள், அதேசமயம் தோற்கடிக்கப்பட்ட வீரர்கள் முதலில் போருக்குச் சென்று பின்னர் வெற்றி பெற முற்படுகிறார்கள். --சுன் சூ
- போரே இல்லாமல் கிடைக்கும் வெற்றிதான் மிகச்சிறந்த வெற்றி. --சுன் சூ
- உங்களை நீங்களே அறிந்து கொண்டால், நீங்கள் எல்லா போர்களிலும் வெற்றி பெறுவீர்கள். --சுன் சூ
- வேறு எதற்கும் முதல், முன்னேற்பாடே வெற்றிக்கான சாவியாகும். --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
- வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் உள்ள ஒரே வேறுபாடு செயலாற்றும் திறனாகும். --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
- கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுகிறான். --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
- உங்கள் வெற்றி பலரை உங்களை வெறுக்க வைக்கிறது. அப்படி இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கண்களில் உள்ள பொறாமையைப் பார்க்காமல், வெற்றியை அனுபவிப்பதே சிறந்ததாகும். --மர்லின் மன்றோ
- வெற்றியடைவது எப்படி என்பதை அறிய எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை. --புரூஸ் லீ
- நம்பிக்கை வெற்றியிலிருந்து வருகிறது, ஆனால் வலிமை போராட்டத்திலிருந்து வருகிறது. --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- சட்டைப் பைகளில் கைகளை வைத்துக்கொண்டு வெற்றி எனும் ஏணியில் ஏற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- சிறிய வெற்றிகளைத் தேடுங்கள், அதை உருவாக்குங்கள். ஒவ்வொரு சிறிய வெற்றியும் உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்த சிறிய வெற்றிகள் உங்களை நன்றாக உணரவைக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- ஏதோ ஒன்றைச் சாத்தியமற்றது என்று என்னிடம் யாராவது சொல்வதை விட என் வெற்றியை உறுதி செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை. --ஜாக்கி சான்
- வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அங்கே உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றியடையக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும். --ஸ்டீபன் ஹாக்கிங்
- வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- வெற்றியின் ரகசியம் என்ன? சரியான முடிவுகள். சரியான முடிவுகளை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? அனுபவம் மூலம். அனுபவத்தை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்? தவறான முடிவுகள் மூலம். --அப்துல் கலாம்
- உங்கள் முதல் வெற்றியின் பின்னர் ஓய்வெடுக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாவதாக தோல்வியடைந்தால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன. --அப்துல் கலாம்
- ஈடுபாடு இல்லாமல் உங்களால் வெற்றிபெற முடியாது. ஈடுபாட்டுடன் உங்களால் தோல்வியடைய முடியாது. --அப்துல் கலாம்
- என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். --நெல்சன் மண்டேலா
- தாங்கள் செய்வதில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், சூழ்நிலைகளைக் கடந்து வந்து அனைவராலும் வெற்றியடைய முடியும். --நெல்சன் மண்டேலா
- எங்கள் மிகப்பெரிய பலவீனம் கைவிடுதலில் உள்ளது. வெற்றி பெறுவதற்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயற்சிப்பதாகும். --தாமஸ் அல்வா எடிசன்
- வெற்றியின் ரகசியம் குறிக்கோளில் கவனம் செலுத்தலாகும். --தாமஸ் அல்வா எடிசன்
- வெற்றி என்பது கற்பனை மற்றும் லட்சியம் மற்றும் வேலை செய்வதற்கான விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது. --தாமஸ் அல்வா எடிசன்
- உங்களுக்கு காற்று தேவைப்படும் அளவுக்கு வெற்றி தேவைப்படும் போது, நீங்கள் அதை அடைவீர்கள். வெற்றிக்கு வேறு எந்த ரகசியமும் இல்லை. --சாக்ரடீஸ்
- நீங்கள் வெற்றிபெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடையப் போகிறீர்களா என்பதை உங்கள் சிந்தனையே தீர்மானிக்கிறது. --ஹென்றி ஃபோர்ட்
- வெற்றி என்பது பிரச்சினைகளிலிருந்து வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதில் இருந்து வருகிறது. --சுன் சூ
- வெற்றியைக் கொண்டாடுவது நல்லது, ஆனால் தோல்வியின் படிப்பினைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானது. --பில் கேட்ஸ்
- ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். --முஹம்மது அலி
- மகிழ்ச்சிக்கான திறவுகோல் வெற்றி அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். நீங்கள் செய்வதை நேசித்து செய்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள். --ஆல்பர்ட் ஸ்விட்சர்
- சரியான மனநிலை கொண்ட மனிதன், தனது இலக்கை அடைவதை எதனாலும் தடுக்க முடியாது, தவறான மனநிலை கொண்ட மனிதனுக்கு இந்தப் பூமியில் எதனாலும் உதவ முடியாது. --தாமஸ் ஜெபர்சன்
- வெற்றியின் வெகுமதிகளில் ஒன்று சுதந்திரம். அதாவது நீங்கள் விரும்பியதைச் செய்யக்கூடிய திறன். --ஸ்டிங்
- ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான ஒரு ரகசியம் என்னவென்றால், வாய்ப்பு வரும்போது அவன் அதற்கு தயாராக இருக்க வேண்டும். --பெஞ்சமின் டிஸ்ரேலி
- ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார். --ஹென்றி டேவிட் தோரே
- ஒரு வெற்றிகரமான ஆண் என்பவன் தனது மனைவி செலவழிப்பதை விட அதிகமாக பணம் சம்பாதிப்பவன். ஒரு வெற்றிகரமான பெண் என்பவள் அத்தகைய ஒரு ஆணைக் கண்டுபிடிப்பவள். --லானா டர்னர்
- மற்றவர்களின் வெற்றிக்கு உதவுவதன் மூலம் நீங்கள் சிறப்பாக மற்றும் விரைவாக வெற்றிபெற முடியும் என்பது உண்மையில் உண்மைதான். --நெப்போலியன் ஹில்
- எனக்குத் தெரிந்த பெரும்பாலான வெற்றிகரமான நபர்கள், பேசுவதை விட அதிகம் கேட்பவர்கள். --பெர்னார்ட் பாருச்
- வெற்றிகரமான நபர்கள் சிறந்த கேள்விகளைக் கேட்கிறார்கள், இதன் விளைவாக அவர்கள் சிறந்த பதில்களைப் பெறுகிறார்கள். --டோனி ராபின்ஸ்
- பெரும்பாலன நபர்கள் தங்கள் மிகப்பெரிய தோல்வியைத் தாண்டி வெறுமனே ஒரு படி மேலே சென்று மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். --நெப்போலியன் ஹில்
- சிலர் மிகப் பெரிய வெற்றிகளை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பதற்கு இதுவே சான்று. --ஆபிரகாம் லிங்கன்
- வெற்றியடைவதற்கு நாம் முதலில் நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும். --நிகோஸ் கசான்ட்ஜாகிஸ்
- எதுவுமே செய்யாமல் வெற்றியடைய முயற்சிக்கும் மனிதர்களை விட, ஏதாவது ஒன்றைச் செய்து தோல்வி அடையும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்கள். --லாயிட் ஜோன்ஸ்
- வெற்றிகரமான மனிதன் தனது தவறுகளிலிருந்து பயனடைந்து, மீண்டும் வேறு ஒரு வழியில் முயற்சி செய்வான். --டேல் கார்னகி
- நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யும் போது வெற்றி உங்களைப் பின்தொடர்கிறது. வெற்றியடைவதற்கு வேறு வழியில்லை. --மால்கம் ஃபோர்ப்ஸ்
- தோல்வியே வெற்றிக்கான திறவுகோல், ஒவ்வொரு தவறும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கிறது. --மோரிஹெய் உஷிபா
- தன்னம்பிக்கையே வெற்றிக்கான முதல் ரகசியம். --ரால்ப் வால்டோ எமர்சன்
- ஆசையே எல்லா சாதனைகளுக்கும் தொடக்கப் புள்ளி. --நெப்போலியன் ஹில்
- மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால், நீங்கள் ஏற்கனவே வெற்றிக்கான முதற் படியை கடந்துவிட்டீர்கள். --பாலோ கோயல்ஹோ
- வெற்றி என்பது ஒன்பது முறை விழுந்து பத்தாவது முறை எழுவது. --ஜான் பான் ஜோவி
- எந்தவொரு மனிதனும் அவன் விரும்பாத ஒரு முயற்சியில் வெற்றியடைய முடியாது. --நெப்போலியன் ஹில்
- மற்றவர்கள் தன்மீது எறிந்த செங்கற்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தை அமைப்பவனே ஒரு வெற்றிகரமான மனிதன். --டேவிட் பிரிங்க்லி
- வெற்றி என்பது பொதுவாக அதைத் தேட முடியாத அளவுக்கு அதிக வேலையாக இருப்பவர்களுக்கே வரும். --ஹென்றி டேவிட் தோரே
- இந்த உலகில் வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி, மற்றவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகளின்படி நீங்களே செயல்படுவதுதான். --நெப்போலியன் ஹில்
- வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி. --நெப்போலியன் போனபார்ட்