காதலைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

 காதலைப் பற்றிய பொன்மொழிகள்

Love

நாம் வாழ்வில் ஒருமுறை விழுவதற்காக மகிழ்ச்சியடைகிறோம் என்றால் அது காதலில் விழுவதற்காக மட்டுமே . காதல் என்பது வாழ்க்கை முழுதும் நாம் பரிமாற வேண்டிய உன்னதமான உணர்வு. ஐந்தறிவு படைத்த விலங்குகள் தொடங்கி, ஆறறிவு படைத்த மனிதன் வரை காதலே (Love) பிரதானமானது.

காதற்கண் கொண்டு பார்த்தால் காக்கை கூட கானமயிலாகத்தான் தெரியும். ஏனெனில் காதல் புறக்கண்ணால் பார்ப்பதில்லை, அகக்கண்ணால் மட்டுமே பார்க்கிறது. காதல் எனும் விடயத்தில் மட்டுமே யாரும் கஞ்சர்கள் இல்லை நாம் அனைவருமே வாரி வழங்கும் வள்ளல்களே.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவான உணர்வு காதல். நீரின்றி அமையாது உலகு என்பார்கள், காதலின்றியும் அமையாது இந்த உலகு. இந்த உன்னதமான உணர்வைப் (Love) பற்றி அறிஞர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Love quotes in Tamil


  • காதல் என்பது வெறும் வார்த்தையே, யாரோ ஒருவர் வந்து அதற்கு அர்த்தம் கொடுக்கும் வரை. --பாலோ கோயல்ஹோ


  • ஒரு பெண்ணின் முதற் காதலனாக இருந்தால் அந்த ஆண் அதிர்ஷ்டசாலி. ஒரு ஆணின் கடைசிக் காதலியாக இருந்தால் அந்தப் பெண் அதிர்ஷ்டசாலி. --சார்லஸ் டிக்கன்ஸ்

 

  • முதிர்ச்சியற்ற காதல் கூறுகிறது: "நான் உன்னைக் காதலிக்கிறேன், ஏனெனில் நீ எனக்குத் தேவை". முதிர்ச்சியடைந்த காதல் கூறுகிறது: "நீ எனக்குத் தேவை. ஏனெனில் நான் உன்னைக் காதலிக்கிறேன்". --எரிச் ஃப்ரோம்

 

  • இந்த முழு உலகிற்கும் நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள் தான் முழு உலகமுமாக இருக்கலாம். --பப்லோ கேசல்கள்

 

  • நீங்கள் காதலில் விழுந்ததற்குப் புவி ஈர்ப்பைக் குறை சொல்ல முடியாது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 

  • எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாங்கள் காதலித்தோம், நாங்கள் காதலில் விழுந்ததும், ஒரு அரிதான மற்றும் அழகான விடயம் உருவானது. என்னைப் பொறுத்தவரை, அது போன்ற காதல் ஒரு முறை மட்டுமே ஏற்படும், அதனால்தான் நாங்கள் ஒன்றாகக் கழித்த ஒவ்வொரு நிமிடமும் என் நினைவில் பதிந்திருக்கிறது. அந்த ஒரு கணத்தைக் கூட ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. --நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்

 

  • நாம் ஒருவரை நேசிக்கும்போது, நம்மை விட சிறந்த நபராக மாற முயற்சி செய்கிறோம். நம்மை விட சிறந்த நபராக மாற நாம் முயற்சிக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் சிறப்பாகின்றன. --பாலோ கோயல்ஹோ

 

  • உங்களால் நேசிக்கப்படுபவரும், உங்களை நேசிப்பவரும், எப்பொழுதும் ஒரே நபராக இருப்பதில்லை. --சக் பலஹ்னியுக்

 

  • உங்களைச் சாதாரண நபர்போல் நடத்தும் யாரையும் காதலிக்காதீர்கள்.  --ஆஸ்கார் வைல்ட்

 

  • ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது உங்களுக்குப் பலத்தைத் தருகிறது, அதே நேரத்தில் ஒருவரை ஆழமாக நேசிப்பது உங்களுக்குத் தைரியத்தைத் தருகிறது --லாவோ சூ

 

  • காதலில் எப்போதுமே கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு எப்போதும் சில காரணம் இருக்கிறது. --ப்ரீட்ரிக் நீட்சே

 

  • காதல் ஒரு நெருப்புப் போன்றது. ஆனால் அது உங்கள் அடுப்பைச் சூடேற்றுமா அல்லது உங்கள் வீட்டை எரிக்கப் போகிறதா என்பதை, உங்களால் ஒருபோதும் கூற முடியாது.  --ஜோன் க்ராஃபோர்ட்

 

  • காதல் பைத்தியக்காரத்தனமாக இல்லாதபோது அது காதல் இல்லை. -- பெட்றோ கால்டெரான் டி லா பார்கா

 

  • உண்மையான காதல் அரிதானது, அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது. --நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ்

 

  • காதல் என்பது இரண்டு உடல்களில் வசிக்கும் ஒற்றை ஆத்மாவால் ஆனது. --அரிஸ்டாட்டில்

 

  • நாம் சிறந்த காதலை உருவாக்குவதற்குப் பதிலாக, சிறந்த காதலரைத் தேடுவதில் நேரத்தை வீணடிக்கிறோம். --டாம் ராபின்ஸ்

 

  • எதிரிகள் மட்டுமே உண்மையைப் பேசுகிறார்கள், நண்பர்களும் காதலர்களும் முடிவில்லாமல் பொய் பேசுகிறார்கள், கடமையின் வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். --ஸ்டீபன் கிங்

 

  • காதலர்களுக்கு யார் சட்டம் போடுவார்கள்? காதலே ஒரு உயர்ந்த சட்டம். --போதியஸ்

 

  • வெறுமனே உங்கள் தலையைத் தொடுவதன் மூலமோ, அல்லது உங்கள் கண்களை நோக்கி சிரிப்பதன் மூலமோ, அல்லது வெறுமனே வானத்தை அண்ணாந்து பார்ப்பதன் மூலமோ, உங்களை கிளர்ச்சியடையச் செய்யக்கூடிய நபரே உங்கள் உண்மையான காதலன். --மர்லின் மன்றோ

 

  • வாழ்க்கையின் மிகச்சிறந்த மகிழ்ச்சியே, நாம் ஒருவரால் நேசிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை தான். --விக்டர் ஹ்யூகோ

 

  • என்றாவது ஒரு நாள் உடைக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்தும் உங்கள் இதயத்தைத் திறக்கிறீர்கள், மேலும் உங்கள் இதயத்தைத் திறக்கும்போது, நீங்கள் ஒருபோதும் கனவில் கூட காண்டிராத ஒரு அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறீர்கள். --பாப் மார்லி

 

  • காதலுக்கு காரணங்கள் உள்ளன, அந்தக் காரணத்தை புரிந்து கொள்ள முடியாது. --பிலைஸ் பாஸ்கல் 

 

  • காதல் ஒரு தீவிரமான மன நோய். --பிளேட்டோ 

 

  • காதல் கண்களால் பார்ப்பதில்லை, ஆன்மாவால் பார்க்கின்றது. --வில்லியம் ஷேக்ஸ்பியர்

 

  • ஒரு பெண் காதலிக்க அதிக நேரமும் வெறுக்க சில வினாடிகளும் எடுக்கிறாள். ஆனால் ஒரு ஆண் காதலிக்க சில வினாடிகளும் வெறுக்க அதிக நேரமும் எடுக்கிறான். --வில்லியம் ஷேக்ஸ்பியர்

 

  • காதல் என்பது கனவுகளில் மிகச்சிறந்தது, இருப்பினும் கனவுகளில் மிக மோசமானது. --வில்லியம் ஷேக்ஸ்பியர்

 

  • ஒரு ஆண் எந்தப் பெண்ணுடனும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், அவன் அவளை காதலிக்காதவரை. --ஆஸ்கார் வைல்ட் 

 

  • காதல் என்பது இரண்டு முட்டாள்களுக்கு இடையிலான தவறான புரிதல். --ஆஸ்கார் வைல்ட் 

 

  • உண்மையான காதல் ஒருபோதும் மகிழ்ச்சியான முடிவைக் கொண்டிருக்காது, ஏனெனில் உண்மையான காதலுக்கு முடிவே இல்லை. --மாவீரன் அலெக்சாண்டர் 


  • காதலில், பெண்கள் தொழில் வல்லுநர்கள், ஆண்கள் கற்றுக்குட்டிகள். --பிராங்கோயிஸ் ட்ரஃபாட்


  • காதல் ஒரு மணற்கடிகாரம் போன்றது, மூளை காலியாகும்போது இதயம் நிரம்புகிறது. --ஜூல்ஸ் ரெனார்ட்


  • காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமே, ஆனால் நீங்கள் தான் அதற்கு பொருள் கொடுக்கிறீர்கள். --எமினெம்


  • முதற் காதல் என்பது சிறு முட்டாள்தனமும் நிறைய ஆர்வமும் மட்டுமே. --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


  • காதல் இல்லாத வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. --லியோனார்டோ டா வின்சி


  • காதலில் மற்றவர் முக்கியம், காமத்தில் நீங்கள் முக்கியம். --ஓஷோ


  • பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. --கலீல் ஜிப்ரான்


  • பருவகாலங்களின் துணையின்றி வளர்ந்து, பூக்கும் ஒரே மலர் காதல். --கலீல் ஜிப்ரான்


  • காதல் என்பது ஒரு தற்காலிக மனநோய் நிலை. --சிக்மண்ட் பிராய்ட்


  • காதலிக்கும்போது ஒருவர் மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறார். --சிக்மண்ட் பிராய்ட்

  • காதலின் வலி மிகவும் இனிமையானது. --பெர்சி பைஷ் ஷெல்லி



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.