மர்லின் மன்றோவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
மர்லின் மன்றோவின் பொன்மொழிகள்
மர்லின் மன்றோ (Marilyn Monroe) இவர் ஒரு அமெரிக்க நடிகையாவார். 1926 இல் ஐக்கிய அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் இடத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே பல இன்னல்களைச் சந்தித்திருந்தாலும். தனது திறமையாலும் உழைப்பாலும் 1950 களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகையாக வலம்வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த இவர் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதையும் பெற்றுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவித்த மர்லின் மன்றோ (Marilyn Monroe) தனது திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்தார். மர்லின் மன்றோவின் மிகச்சிறந்த பொன்மொழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Marilyn Monroe quotes in Tamil
- நான் நல்லவள், ஆனால் ஒரு தேவதை அல்ல. நான் பாவம் செய்கிறேன், ஆனால் நான் ஒரு பிசாசு அல்ல. இந்தப் பெரிய உலகில், அன்பு செய்ய யாரயாவது தேடும் சிறிய பெண் மட்டுமே நான்.
- தனிமையில் இருக்கும் போது என்னை நான் புதுப்பித்துக்கொள்கிறேன்.
- நாம் அனைவரும் நட்சத்திரங்கள், நாம் பிரகாசிக்கத் தகுதியுடையவர்கள்.
- சிரித்துக் கொண்டே இருங்கள், ஏனெனில் வாழ்க்கை மிகவும் அழகானது, மேலும் இங்கே சிரிப்பதற்கு நிறைய இருக்கிறது.
- எனக்கு நடந்த சிறந்த விடயம் என்னவென்றால், நான் ஒரு பெண் என்பதுதான். எல்லாப் பெண்களும் அப்படித்தான் உணர வேண்டும்.
- உங்கள் வெற்றி பலரை உங்களை வெறுக்க வைக்கிறது. அப்படி இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கண்களில் உள்ள பொறாமையைப் பார்க்காமல், வெற்றியை அனுபவிப்பதே சிறந்ததாகும்.
- வெறுமனே உங்கள் தலையைத் தொடுவதன் மூலமோ, அல்லது உங்கள் கண்களை நோக்கி சிரிப்பதன் மூலமோ, அல்லது வெறுமனே வானத்தை அண்ணாந்து பார்ப்பதன் மூலமோ, உங்களை கிளர்ச்சியடையச் செய்யக்கூடிய நபரே உங்கள் உண்மையான காதலன்.
- எனக்கும் உணர்ச்சிகள் உண்டு. நான் இன்னும் மனிதன்தான். எனக்கு வேண்டியதெல்லாம், எனக்காகவும், என் திறமைகளுக்காகவும் நான் நேசிக்கப்பட வேண்டும்.
- என்னை நான் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் அது எளிதானதாக இருப்பதில்லை.
- நான் சிறுமியாக இருந்தபோது நான் அழகாக இருக்கிறேன் என்று என்னிடம் யாரும் கூறவில்லை, எல்லாச் சிறுமிகளுக்கும் அவர்கள் அழகாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் அழகானவர்கள் என்று கூறப்பட வேண்டும்.
- எனக்குப் பிடித்த விடயம் தூக்கம். அப்போது குறைந்த பட்சம் என்னால் கனவு காண முடியும்.
- உண்மை என்னவென்றால், நான் யாரையும் முட்டாளாக்கவில்லை. நான் சில நேரங்களில் ஆண்கள் தங்களை தாங்களே முட்டாளாக்க அனுமதித்தேன்.
- நிச்சயமாக நான் ஒரு பெண், மேலும் நான் அதை இரசிக்கிறேன்.
- மனிதர்களான நாம் விசித்திரமான உயிரினங்கள், நமக்காக சிந்திக்கும் உரிமையை இன்னும் நாமே வைத்திருக்கிறோம்.
- ஒரு நடிகையாக இருப்பதைவிட, ஒரு நடிகையாக இருப்பதைப் போல் கனவுகாண்பது உற்சாகமளிக்கக்கூடியது.
- நண்பர்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்கிறார்கள்.
- உங்களால் ஒரு பெண்ணைச் சிரிக்க வைக்க முடிந்தால், உங்களால் அவளை எதையும் செய்ய வைக்க முடியும்.
- ஒரு ஆண் உங்களை முக்கியமானவளாக உணர வைக்கிறான் - நீங்கள் ஒரு பெண் என்பதில் மகிழ்ச்சியடைய வைக்கிறான்.
- நான் எனது வேலையில் இன்னும் ஒழுக்கமாக இருக்க விரும்புகிறேன்.
- நீங்கள் பிரபலமாக இருக்கும்போது உங்கள் பலவீனங்கள் ஒவ்வொன்றும் மிகைப்படுத்தப்படும் என நான் நினைக்கிறேன்.
- ஒரு பெண்ணின் கடந்தகால காதல், தங்கள் மீதான அன்பைக் குறைக்கும் என்று நினைக்கும் ஆண்கள் பொதுவாக முட்டாள்கள் மேலும் பலவீனமானவர்கள்.
- நீங்கள் ஒரு முறை தோல்வியடைந்ததால், நீங்கள் எல்லாவற்றிலும் தோல்வியடைவீர்கள் என்று அர்த்தமல்ல.
- ஒரு பெண் தனக்கு எது சிறந்தது என்பதை தன் உள்ளுணர்வால் அறிவாள்.