ஹென்றி ஃபோர்ட்டின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஹென்றி ஃபோர்ட்டின் பொன்மொழிகள்

Henry Ford

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும், ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் (Ford Motor Company) நிறுவனரும்தான் ஹென்றி ஃபோர்ட் (Henry Ford). உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, குறைந்த விலையில் மோட்டார் வாகனங்களை (Car) வழங்கியதன் மூலம் போக்குவரத்தில் ஒரு புரட்சியையும், மேலும் தொழிலாளர்களுக்கு அதிக கூலியை வழங்கியதன் மூலம் தொழில்துறையிலும் புரட்சியை எற்படுத்தினார் ஹென்றி ஃபோர்ட்.

இன்று உலகளாவிய ரீதியில் 200,000 இற்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் ஃபோர்ட் மோட்டார் கம்பனியை உருவாக்கியவர் என்ற வகையில் உலக பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் (Henry Ford). ஒரு தொழிலதிபராக இருந்த போதும் ஒரு தத்துவஞானி போல் எதிலும் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டவர் ஹென்றி ஃபோர்ட். அவரின் சிந்தனைகள் நம் வாழ்க்கைக்கு புதிய கண்ணோட்டத்தை வழங்கும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Henry Ford quotes in Tamil

 

  • நீங்கள் வெற்றிபெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடையப் போகிறீர்களா என்பதை உங்கள் சிந்தனையே தீர்மானிக்கிறது.

 

  • தோல்வி என்பது வெறுமனே மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பாகும், இந்த முறை இன்னும் அதிக புத்திசாலித்தனமாக.

 

  • சாத்தியமில்லை என்றால் நீங்கள் இன்னும் தீர்வு காணவில்லை என்று அர்த்தமாகும்.

 

  • எதுவும் குறிப்பிடும் அளவுக்குக் கடினம் இல்லை. நீங்கள் அதை சிறிய வேலைகளாகப் பிரித்தால்.

 

  • தவறில் இருந்து நாம் எதுவும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அது மட்டுமே ஒரு உண்மையான தவறு.

 

  • கற்றலை நிறுத்தும் எவரும், இருபது அல்லது எண்பது வயதினராக இருந்தாலும் வயதானவரே. கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயம் உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.

 

  • குறை கண்டுபிடிக்காதீர்கள், ஒரு தீர்வைக் கண்டுபிடியுங்கள்.

 

  • ஒரு மனிதனை காயப்படுத்தாமல் நீங்கள் அவனுக்கு கொடுக்கக்கூடிய ஒரே விடயம் ஒரு வாய்ப்பு.

 

  • கடவுளுடன் நடப்பவர்கள் எப்பொழுதும் தங்கள் இலக்கை அடைவார்கள்.

 

  • எல்லோரும் ஒன்றாக முன்னேறினால், வெற்றி தன்னைத் தானே கவனித்துக்கொள்ளும்.

 

  • ஒரு மனிதனின் உண்மையான கல்வி அவன் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே தொடங்குகிறது. உண்மையான கல்வி ஒழுக்கமான வாழ்க்கையின் மூலம் பெறப்படுகிறது.

 

 

  • வேலையில் இருப்பதற்கும் வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் என் தொழிற்சாலைகளை எடுத்துக் கொள்ளலாம், என் கட்டிடங்களை எரிக்கலாம், ஆனால் என் மக்களை எனக்குக் கொடுங்கள், நான் மீண்டும் என் வணிகத்தை உருவாக்குவேன்.

 

  • கூலி கொடுப்பவர் முதலாளி அல்ல. முதலாளிகள் பணத்தை மட்டுமே கையாளுகிறார்கள். வாடிக்கையாளர் தான் கூலி கொடுக்கிறார்.

 

  • பணம் மனிதர்களை மாற்றாது, அது வெறுமனே அவர்களின் மாறுவேடங்களை கலைத்து விடுகிறது. ஒரு மனிதன் இயல்பாகவே சுயநலவாதியாக அல்லது ஆணவம் உள்ளவனாக அல்லது பேராசை கொண்டவனாக இருந்தால், பணம் அதை வெளியே கொண்டு வருகிறது, அவ்வளவுதான்.

 

  • என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டு வருபவரே எனது சிறந்த நண்பர்.

 

  • பணத்தை மிச்சப்படுத்த சந்தைப்படுத்தலை நிறுத்துபவர்கள், நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை நிறுத்துபவர்களைப் போன்றவர்கள்.

 

  • இந்த உலகம் உங்களுக்குச் செய்ததை விட நீங்கள் இந்த உலகத்திற்காக அதிகம் செய்ய வேண்டும். அதுவே வெற்றி.

 

  • நேர்மையான தோல்வியில் எந்த அவமானமும் இல்லை, தோல்விக்குப் பயப்படுவதே அவமானமாகும்.

 

  • போரிலிருந்து யார் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதை எனக்குக் காட்டுங்கள், போரை எவ்வாறு நிறுத்துவது என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.


  • பெரிய பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை, நிறைய சிறிய பிரச்சினைகள் மட்டுமே உள்ளன.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.