பில் கேட்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
பில் கேட்ஸின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும், மென்பொருள் வடிவமைப்பாளரும், முதலீட்டாளரும், எழுத்தாளரும், உலக பணக்காரர் வரிசையில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தவரும் மற்றும் மைக்ரோசாப்ட் ( Microsoft Corporation) நிறுவனத்தின் நிறுவனரும் தான் பில் கேட்ஸ் (Bill Gates). விண்டோஸ் (Windows) எனப்படும் கணினி இயங்குதளத்தை (Operating System) வடிவமைத்ததன் மூலம் தொழிநுட்ப உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் தான் பில் கேட்ஸ்.
மனிதன் இந்த நூற்றாண்டில் எட்டி இருக்கும் தொழிநுட்ப வளர்ச்சிக்கும் மற்றும் தொழிநுட்ப வளர்ச்சியால் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் இந்த அதீத வளர்ச்சிக்கும் உதவியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கும் மற்றும் பில் கேட்ஸ் இன் (Bill Gates) பங்கும் மிகப்பெரியது. உலக பணக்காரர்களில் ஒருவராக இருந்தாலும் தனது பணத்தில் 35 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக பல ஏழை மாணவர்களின் கல்விக்கும், பல ஏழை நாடுகளில் வாழும் ஏழைகளுக்கும் வாரி வழங்கியுள்ளார் பில் கேட்ஸ்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Bill Gates quotes in Tamil
- நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு.
- கடினமான வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி அதைச் செய்ய ஒரு எளிதான வழியைக் கண்டுபிடிப்பார்.
- நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடவில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்.
- இந்த உலகை மாற்றக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆற்றல் புத்தாக்கம் என்று நான் நம்புகிறேன்.
- எங்களுடன் உடன்படுவோரிடமிருந்து நாங்கள் ஆறுதலைப் பெறுகிறோம், ஆனால் எங்களுடன் உடன்படாதவர்களிடமிருந்து மட்டுமே நாம் வளர்ச்சியைப் பெறுகிறோம்.
- நான் எனது பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெறவில்லை, ஆனால் முதலிடம் பெற்றவர்கள் அனைவரும் எனது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள்.
- தேர்வில் சில பாடங்களில் நான் தோல்வியடைந்தேன், ஆனால் என் நண்பர் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். இப்போது அவர் மைக்ரோசாப்டில் ஒரு பொறியியலாளர், நான் மைக்ரோசாப்டின் உரிமையாளர்.
- உங்களிடம் பணம் இருக்கும்போது, நீங்கள் யார் என்பதை நீங்கள் மட்டுமே மறந்துவிடுவீர்கள். ஆனால் உங்களிடம் பணம் இல்லாதபோது, நீங்கள் யார் என்பதை இந்த முழு உலகமும் மறந்துவிடுகிறது. இதுதான் வாழ்க்கை.
- நீங்கள் சும்மா இருக்கும்போது கடிகாரத்தைப் பாருங்கள். ஆனால் நீங்கள் வேலை செய்யும் போது ஒருபோதும் கடிகாரத்தைப் பார்க்காதீர்கள்.
- நீங்கள் பணம் சம்பாதிக்கலாம் மற்றும் நீங்கள் சாக்குப்போக்குகளை உருவாக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் சாக்குப்போக்கிலிருந்து பணம் சம்பாதிக்க முடியாது.
- மென்பொருள் என்பது மாயமான விடயம், அதன் முக்கியத்துவம் காலப்போக்கில் மட்டுமே அதிகரிக்கும்.
- சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தது எனது அதிர்ஷ்டம். ஆனால் பலரும் அந்த இடத்தில் இருந்தார்கள். வித்தியாசம் என்னவென்றால் நான் நடவடிக்கை எடுத்தேன்.
- உங்களால் அதை நன்றாக உருவாக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதை அழகாக உருவாக்குங்கள்.
- நான் கடினமாக உழைக்கிறேன் ஏனெனில் நான் என் வேலையை நேசிக்கின்றேன்.
- நான் எல்லாவற்றையும் படித்தேன், ஆனால் ஒருபோதும் முதலிடம் பெறவில்லை. ஆனால் இன்று சிறந்த பல்கலைக்கழகங்களில் முதலிடம் பிடித்தவர்கள் எனது ஊழியர்கள்.
- ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் பணத்தினால் எனக்கு எந்த உபயோகமும் இல்லை.
- வெற்றியைக் கொண்டாடுவது நல்லது, ஆனால் தோல்வியின் படிப்பினைகளுக்கு செவிசாய்ப்பது மிகவும் முக்கியமானது.
- தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதும், தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதும் அனைத்து வெற்றிகரமான நிறுவனங்களுக்கும் முக்கியமானதாகும்.
- ஏழைகளின் உடல்நலம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எதிர்காலத்தில் இந்த உலகில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த முதலீடுகளில் ஒன்றாகும்.
- மக்கள் எப்பொழுதும் மாற்றத்துக்கு அஞ்சுகிறார்கள். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் அஞ்சினர், இல்லையா?.
- நான் அலுவலகத்திலோ, வீட்டிலோ, சாலையிலோ இருந்தாலும், நான் படிக்க விரும்பும் புத்தகங்களின் அடுக்கு எப்பொழுதும் என்னிடம் உள்ளன.
- நீங்கள் பெரும்பாலும் உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும்.