நெல்சன் மண்டேலாவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவரும், தென்னாப்பிரிக்காவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் தான் நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela). தென்னாப்பிரிக்காவின் குலு என்னும் சிறு கிராமத்தில் சோசா பழங்குடி இன மக்கள் தலைவரின் மகனாகப் பிறந்த இவர் நிறவெறிக்கு எதிராகப் போராடியதால் தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்கள் அங்கு பெரும்பான்மையாக இருந்த கறுப்பினத்தவர்களை அடிமைப்படுத்தி ஆண்டனர். இதை எதிர்த்து கறுப்பினத்தவர்களின் உரிமைக்காக முதலில் அறவழியிலும் பின்னர் ஆயுதப்போராட்டம் மூலமாகவும் போராடியவர் நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela). பல ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக மட்டுமல்லாமல் தான் ஒரு அடிமை என்றே அறியாமல் வாழும் தமிழர்களுக்கு நெல்சன் மண்டேலாவின் கருத்துக்கள் மிகவும் அவசியமானவை.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Nelson Mandela quotes in Tamil
- என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.
- தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல, ஆனால் பயத்தை வெற்றி கொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன், பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.
- பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.
- இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது.
- ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும்.
- செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும்.
- இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.
- அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போலவே, வறுமையும் இயற்கையானது அல்ல. இது மனிதனால் உருவாக்கப்பட்டதாகும், மேலும் மனிதர்களின் செயல்கள் மூலம் இதை வெல்லவும் மேலும் இல்லாமல் ஒழிக்கப்படவும் முடியும்.
- தாங்கள் செய்வதில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், சூழ்நிலைகளைக் கடந்து வந்து அனைவராலும் வெற்றியடைய முடியும்.
- நீங்கள் உங்கள் கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது, ஆனாலும் உங்கள் எதிராளியை அவமானப்படுத்தக்கூடாது. அவமானப்படுத்தப்பட்டவரை விட ஆபத்தானவர்கள் வேறு யாரும் இல்லை.
- ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது.
- நீங்கள் ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவருடைய மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்.
- பின்னால் இருந்து வழிநடத்துங்கள் - மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.
- மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல - உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது.
- நம் உலகில் வறுமை, அநீதி மற்றும் அதிகப்படியான சமத்துவமின்மை நீடிக்கும் வரை, நாம் எவரும் உண்மையிலேயே ஓய்வெடுக்க முடியாது.
- குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் அபிவிருத்தியடைய முடியாது.
- வரலாற்றைப் படைப்பது மன்னர்களும் தளபதிகளும் அல்ல, மாறாக வெகுஜன மக்களே.
- மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை.
- உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.
- நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.
- கடந்த கால விடயங்களை குறை கூறுவதால், அவை சிறந்ததாக மாறிவிடாது.
- பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது.
- மக்களால் தங்கள் வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால், அவர்களுக்கு ஒரு இருப்பிடம் இல்லாவிட்டால், அறியாமை மற்றும் நோய்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தால், சுதந்திரம் என்பது அர்த்தமற்றது.
- நீங்கள் ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களானால், நீங்கள் அதை நல்லிணக்க மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், இறுதி எச்சரிக்கை விடுக்கும் கண்ணோட்டத்தில் அல்ல.