பாப் மார்லியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
பாப் மார்லியின் பொன்மொழிகள்
ஜமைக்காவைச் (Jamaica) சேர்ந்த உலகப்புகழ் மிக்க இசைக் கலைஞரும், பாடகர் மற்றும் பாடலாசிரியரும் தான் பாப் மார்லி (Bob Marley). இவரது பல இசைத் தட்டுக்கள் மில்லியன் கணக்கில் விற்பனையாகி விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தி வெயிலிங் வெயிலர்ஸ் (The Wailing Wailers), சோல் றெபெல்ஸ் (Soul Rebels) போன்றன இவரது இசைத்தட்டுக்களாகும் (albums).
இசைக்கு மொழி இல்லை என்பார்கள் அதற்குச் சான்றாக உலகம் முழுவதும் பல்வேறு மொழி பேசும் மக்களும் பாப் மார்லியின் (Bob Marley) இசைக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் தனது இசைக்காக கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது (Grammy Lifetime Achievement Award) உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இசை ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Bob Marley quotes in Tamil
- வலிமையாக இருப்பது மட்டுமே உங்கள் ஒரே தேர்வாகும் வரை, நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று உங்களுக்குத் தெரியாது.
- உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், உங்களைச் சுற்றி இருட்டாக இருக்கும்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும்.
- பணம் என்பது வெறும் எண்களே மேலும் எண்கள் ஒருபோதும் முடிவடையாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பணம் தேவை என்றால், மகிழ்ச்சிக்கான உங்கள் தேடல் ஒருபோதும் முடிவடையாது.
- ஒரு பெண்ணின் உடலில் உள்ள மிக அழகான வளைவு அவளின் புன்னகை.
- ஒரு மனிதனின் மேன்மை அவன் எவ்வளவு செல்வத்தைச் சம்பாதிக்கிறான் என்பதில் இல்லை, ஆனால் அவனது நேர்மை மற்றும் அவனைச் சுற்றியுள்ளவர்களை நேர்மறையாகத் தூண்டும் திறனில் உள்ளது.
- மிக அழகான விடயங்கள் பூரணமானவை அல்ல, அவை சிறப்பானவை.
- நீங்கள் வாழும் வாழ்க்கையை நேசியுங்கள், நீங்கள் நேசிக்கும் வாழ்க்கையை வாழுங்கள்.
- நீங்கள் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கவில்லை என்றால், நீங்கள் எங்கும் செல்லப் போவதில்லை.
- மன அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், நம்மைத் தவிர வேறு யாராலும் நம் மனதை விடுவிக்க முடியாது.
- என்றாவது ஒரு நாள் உடைக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்தும் உங்கள் இதயத்தைத் திறக்கிறீர்கள், மேலும் உங்கள் இதயத்தைத் திறக்கும்போது, நீங்கள் ஒருபோதும் கனவில் கூட காண்டிராத ஒரு அன்பையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறீர்கள்.
- வாழ்க்கையில் உள்ள எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான காரணத்தைக் கண்டறியுங்கள்.
- ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த தலைவிதியைத் தீர்மானிக்க உரிமை உண்டு.
- குறை கூறுதல் என்பது சாத்தான்களுக்கு செய்யப்படும் பிரார்த்தனை.
- உங்கள் கஷ்டங்களை மறந்து நடனமாடுங்கள், உங்கள் கவலைகளை மறந்து நடனமாடுங்கள், உங்கள் நோய்களை மறந்து நடனமாடுங்கள், உங்கள் பலவீனங்களை மறந்து நடனமாடுங்கள்.
- இசையைப் பற்றிய ஒரு நல்ல விடயம், அது உங்களைத் தாக்கும் போது, நீங்கள் எந்த வலியையும் உணர மாட்டீர்கள்.
- ஒரு தீர்வை உருவாக்க, ஒரு புரட்சி தேவைப்படுகிறது.
- உங்கள் வாழ்க்கை முழுவதும் கைதியாக இருப்பதை விட, சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது மேலானது.
- அரசியல் மற்றும் தேவாலயம் இரண்டும் ஒன்றே. இரண்டும் மக்களை அறியாமையில் வைத்திருக்கின்றன.
- ஒரு முட்டாள் நாய், பறக்கும் பறவையைப் பார்த்துக் குரைக்கிறது.
- மனிதன் தனக்குள்ளேயே ஒரு பிரபஞ்சத்தைக் கொண்டுள்ளான்.
- கண்களைத் திறவுங்கள், உள்நோக்கிப் பாருங்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையில் திருப்தி அடைகிறீர்களா?
- கடவுள் என்னைப் பூமிக்கு அனுப்பினார், அவர் என்னை ஏதாவது செய்வதற்காக அனுப்பினார், என்னை யாரும் தடுக்க முடியாது. கடவுள் என்னைத் தடுக்க விரும்பினால், நான் நிறுத்துகிறேன். மனிதனால் ஒருபோதும் முடியாது.
- உங்கள் மனதைச் சிக்கலாக்காதீர்கள். வெறுப்பு, கேலி மற்றும் பொறாமை ஆகியவற்றிலிருந்து தப்பி ஓடுங்கள்.