அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் பொன்மொழிகள்
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஆஸ்திரியாவில் உள்ள தாள் (Thal) என்ற சிறிய ஊரில் பிறந்து தனது கடின உழைப்பால் திரு.ஒலிம்பியா ( Mr. Olympia) ஆணழகன் பட்டதை ஏழு முறை வென்றவர். 15 ஆவது வயதிலிருந்தே உடற்பயிச்சிகளை மேற்கொண்ட இவர் தனது 20 ஆவது வயதிலேயே உலக ஆணழகன் பட்டத்தினை வென்றார்.
தன் உடலை வளப்படுத்த உடற்பயிச்சி செய்யும் அனைவருக்கும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஒரு முன்னோடி. ஆணழகன் போட்டிகளில் மட்டுமல்லாமல் பல ஹாலிவுட் (Hollywood) படங்களிலும் வெற்றியைக் குவித்தவர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் கருத்துக்கள் உங்களுக்கு பயனளிக்கும் என்பது தின்னம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Arnold Schwarzenegger quotes in Tamil
- நம்பிக்கை வெற்றியிலிருந்து வருகிறது, ஆனால் வலிமை போராட்டத்திலிருந்து வருகிறது.
- வலி என்னை வளரச்செய்கிறது. எனக்கு வேண்டியது வளர்ச்சியே. ஆகவே, வலி எனக்கு இன்பமானது.
- சட்டைப் பைகளில் கைகளை வைத்துக்கொண்டு வெற்றி எனும் ஏணியில் ஏற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
- ஏதேனும் ஒன்றுக்கு ஆசைப்படுங்கள், அதை அடைவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
- ஒருபோதும் கூட்டத்தைப் பின்தொடராதீர்கள். வெறுமையாக இருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள்.
- வலிமையும் மனஉறுதியும் இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் செய்யலாம், உங்களை நீங்கள் நம்பும் வரை, ஏனென்றால் நீங்களே உங்களை நம்பாவிட்டால், வேறு யாரும் உங்களை நம்பமாட்டார்கள்.
- நீங்கள் இலகுவான வழியைத் தேடினால் அது கடினமானதாக இருக்கும், ஏனென்றால் இலகுவான வழி மிகவும் அரிதானது. கடின உழைப்புக்கு இணையானது எதுவும் இல்லை.
- சிறிய வெற்றிகளைத் தேடுங்கள், அதை உருவாக்குங்கள். ஒவ்வொரு சிறிய வெற்றியும் உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. இந்த சிறிய வெற்றிகள் உங்களை நன்றாக உணரவைக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
- தோல்வி பயத்தால் முடங்கிப்போய் இருப்பது தோல்வியை விட மோசமானது.
- நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றிய ஒரு காட்சியை உருவாக்குங்கள், பின்னர் அந்தக் காட்சி ஏற்கனவே உண்மை என்பது போல வாழுங்கள்.
- மனமே எல்லை. உங்களால் எதையாவது செய்ய முடியும் என்ற உண்மையை மனம் கற்பனை செய்யும் வரை, நீங்கள் 100 சதவிகிதம் உண்மையிலேயே அதை நம்பும் வரை, உங்களால் அதைச் செய்ய முடியும்.
- தோல்வியடைவதற்குப் பயப்படாதீர்கள். நான் முயற்சித்த எதிலும் எப்போதும் தோல்வியடையத் தயாராக இருந்தேன். உங்களால் எப்போதும் வெல்ல முடியாது, ஆனால் முடிவுகளை எடுக்கப் பயப்படாதீர்கள்.
- எல்லோரையும் போலவே நீங்களும் இருக்கப் போகிறீர்கள் என்றால் இந்தப் பூமியில் நீங்கள் இருப்பதால் பயன் என்ன?
- உடல் மிகவும் முக்கியமானது, ஆனால் உடலை விட மனம் முக்கியமானது.
- நீங்கள் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், உங்களால்ச் சோர்வடைய முடியாது. அதுவே முக்கிய விடயம்.
- நீங்கள் இதை நினைவில் வைத்திருங்கள்: எல்லோரும் பலவீனமானவர்களுக்காக பரிதாபப்படுகிறார்கள், நீங்கள் சம்பாதிக்க வேண்டியது பொறாமையை.
- பணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை, இப்போது என்னிடம் 50 மில்லியன் டாலர் உள்ளது, ஆனால் என்னிடம் 48 மில்லியன் டாலர் இருந்தபோது உள்ள மகிழ்ச்சியே இப்போதும் உள்ளது.
- உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். வேறு எண்ணங்கள் உங்கள் மனதில் நுழைய அனுமதிக்காதீர்கள். நீங்கள் அவற்றை அனுமதித்தால், வேறு விடயங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் அவை உங்களை உங்கள் இறுதி இலக்கைவிட்டு வெளியேற்றிவிடும்.
- என்னால் அதைப் பார்க்க முடிந்தால் மேலும் நம்ப முடிந்தால், என்னால் அதை அடைய முடியும்.
- என் வாழ்க்கை ஒரு திரைப்படமாக இருந்தால், யாரும் அதை நம்ப மாட்டார்கள்.
- பசியுடன் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒரு பண்பாளராக இருங்கள், உங்களை நீங்கள் உறுதியாக நம்புங்கள், வரம்புகளுக்கு அப்பால் செல்லுங்கள்.