செனிக்காவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
செனிக்காவின் பொன்மொழிகள்
உரோம தத்துவஞானி செனிக்கா (Lucius Annaeus Seneca) 4 BC – AD 65 இல் உரோமனில் வாழ்ந்த உலக புகழ் மிக்க தத்துவஞானி ஆவார். இவர் ஹிஸ்பானியாவில் (Hispania) கோர்டூபா (Corduba) எனும் இடத்தில் பிறந்தார். உரோம் (Rome) இல் வளர்ந்தார். செனிக்கா சொல்லாட்சிக் கலை (Rhetoric), மற்றும் மெய்யியல் (Philosophy) பயின்றவர் ஆவார்.
செனிக்கா (Lucius Annaeus Seneca) உறுதிப்பாட்டுவாதம் (Stoicism) எனப்படும் ஒரு மெய்யியல் (philosophy) கோட்பாட்டை பின்பற்றியவர் ஆவார். செனிக்காவின் தத்துவங்கள், உபதேசங்கள், பொன்மொழிகள் இந்தப் பதிவில் தமிழில் தரப்பட்டுள்ளது. வாழ்வை மேம்படுத்த செனிக்காவின் தத்துவங்கள் உதவும். செனிக்காவின் சிந்தனைத் துளிகள் உங்கள் சிந்தனையை தூண்டும்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Seneca quotes in Tamil
- எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை அறிவதே மிகப்பெரிய விடயம்.
- ஒரு பாதையைக் கண்டுபிடியுங்கள் அல்லது ஒரு பாதையை உருவாக்குங்கள்.
- அழகைக் கண்டு திகைக்காதீர்கள், ஆனால் என்றும் நீடித்திருக்கும் அந்த உள்ளார்ந்த குணங்களைத் தேடுங்கள்.
- கடவுள் உங்களுக்கு அருகில் இருக்கிறார், உங்களுடன் இருக்கிறார், உங்களுக்குள் இருக்கிறார்.
- வளர்ச்சிக்கான பாதை மெதுவானது, ஆனால் அழிவுக்கான பாதை விரைவானது.
- ஒரு வழக்கை மறுதரப்பை விசாரிக்காமல் தீர்ப்பளிப்பவர், அவர் நியாயமாக தீர்ப்பளித்தாலும், அதை நியாயமாகக் கருத முடியாது.
- நான் பேசியதை நினைத்துப் பார்க்கும் போது, நான் ஊமைகளின் மேல் பொறாமை கொள்கிறேன்.
- பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இல்லாவிட்டால், எந்த நல்ல விடயமும் இனிமையானது அல்ல.
- ஞானத்தைத் தேடுபவர் ஒரு புத்திசாலி, அதைக் கண்டறிந்ததாக நினைப்பவர் ஒரு பைத்தியம்.
- சூழ்நிலை மாறும்போது, திட்டத்தை மாற்றுவதில் தவறில்லை.
- தன்னைத்தானே ஆளக்கூடியவரே மிகவும் சக்திவாய்ந்தவர்.
- உங்களுக்குத் தெரியாவிட்டால், கேளுங்கள். அந்தக் கணத்தில் நீங்கள் ஒரு முட்டாளாக இருப்பீர்கள், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு புத்திசாலியாக இருப்பீர்கள்.
- உங்களைத் துன்புறுத்தும் விஷயங்களிலிருந்து நீங்கள் உண்மையிலேயே தப்பிக்க விரும்பினால், நீங்கள் வேறு இடத்துக்கு மாறவேண்டியதில்லை, வேறு நபராக மாறவேண்டும்.
- ஒவ்வொரு இரவும் தூங்கச் செல்வதற்கு முன் இன்று நான் என்ன பலவீனத்தை வெற்றிகொண்டேன், என்ன நல்லொழுக்கத்தைப் பெற்றுக்கொண்டேன். என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
- உடல் உழைப்பு உடலைப் பலப்படுத்துவதைப் போலவே, சோதனைகளும் மனதைப் பலப்படுத்துகின்றன.
- நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாழ்நாள் குறைவாக உள்ளது என்று புலம்புகிறோம், ஆனால் இந்த வாழ்க்கை முடிவே இல்லாதது என்பது போல் செயற்படுகிறோம்.
- மனிதன் நிகழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் அவன் அவற்றைப் பார்க்கும் விதத்தினால் பாதிக்கப்படுகிறான்.
- அவர்கள் இரவை எதிர்பார்த்து பகலையும், விடியலுக்குப் பயந்து இரவையும் இழக்கிறார்கள்.
- நாம் யதார்த்தத்தை விட கற்பனையினாலேயே அடிக்கடி துன்பப்படுகிறோம்.
- ஒருவன் தான் எந்தத் துறைமுகத்துக்குப் பயணிக்கிறேன் என்று தெரியவில்லை என்றால், எந்தக் காற்றும் சாதகமாக இருக்காது.
- அனைத்துக் கொடூரங்களும் பலவீனத்திலிருந்தே ஊற்றேடுக்கின்றன.
- செல்வம் ஞானிகளின் அடிமை. முட்டாள்களின் எஜமான்.
- சில நேரங்களில் வாழ்வது கூட துணிச்சலான செயலாகிறது.
- ஒரு கதையை போலவே வாழ்க்கையும் கூட அது எவ்வளவு நீளமானது என்பது முக்கியமல்ல. அது எவ்வளவு சிறப்பானது என்பதே முக்கியமானது.
- உண்மையான மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பதே.