லாவோ சீ வின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

 லாவோ சீ வின் பொன்மொழிகள்

Lao Tzu

 

லாவோ சீ Laozi (Lao Tzu) சீனாவைச் சேர்ந்த தத்துவஞானி, மெய்யியலாளர் ஆவார். லாவோ சீ  Laozi (Lao Tzu) தாவோ தே ஜிங் (Tao Te Ching) எனும் தத்துவ நூலை எழுதியவர் ஆவார். லாவோ சீ Laozi (Lao Tzu) வின் தாவோயியம் (Taoism) எனும் தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் வாய்ந்தது.

தாவோயிசம் (டாவோயிசம்) (Taoism) என்பது சீன சமய தத்துவக் கோட்பாடாகும். மாற்றம் தானாக நிகழும் என்பதே அடிப்படை தாவோயிச (Taoism) கோட்பாடாகும். உங்கள் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் காண லாவோ சீ Laozi (Lao Tzu) தத்துவங்கள் துணைபுரியும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Lao Tzu Quotes in Tamil 


  • தன் மீது நம்பிக்கை உள்ளவனுக்கு, மற்றவர்களை நம்ப வைக்க வேண்டிய அவசியமில்லை.

 

  • ஒருவர் பெற்றுக்கொள்ள விரும்பினால் முதலில் கொடுக்க வேண்டும். இதுவே ஆழ்ந்த புரிதல் என்று அழைக்கப்படுகிறது.

 

  • உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள், அவைகள் சொற்களாகின்றன. உங்கள் சொற்களைக் கவனியுங்கள், அவைகள் செயல்களாகின்றன. உங்கள் செயல்களைக் கவனியுங்கள், அவைகள் பழக்கமாகின்றன.

 

  • ஒரு புத்திசாலி, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்ட பிறகு, தனது முதல் பாடத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வரை, மேலும் எதையாவது கற்றுக்கொள்வதற்குப் பயப்படுகிறார்.

 

  • தெரிந்தவர்கள் பேசுவதில்லை, பேசுபவர்களுக்குத் தெரியாது.

 

  • நீங்கள் எல்லா இடங்களிலும் தேடினாலும், நீங்கள் தேடுவதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் நீங்கள் தேடுவது ஏற்கனவே உங்கள் வசம் உள்ளது.

 

  • நாம் அனைவரும் நாம் நினைப்பதை விட அதிக திறன் கொண்டவர்கள்.

 

  • உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளும் சக்தி, உங்கள் வாழ்நாளின் இறுதி வரை தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

 

  • இருமடங்கு பிரகாசமாக எரியும் சுடர், அரை மடங்கு குறைவான நேரம் தான் எரியும்.

 

  • அறிவு ஒரு புதையல் போன்றது. ஆனால் பயிற்சியே அதற்கான சாவியாகும்.

 

  • நீங்கள் வெறுமனே நீங்களாகவே இருங்கள், யாரோடும் உங்களை ஒப்பிடவோ, போட்டியிடவோ செய்யாதீர்கள். எல்லோரும் உங்களை மதிப்பார்கள்.

 

  • மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அக்கறையோடு இருந்தால் நீங்கள் எப்போதும் அவர்களின் கைதியாகத்தான் இருப்பீர்கள்.

 

  • ஒருவரால் ஆழமாக நேசிக்கப்படுவது உங்களுக்குப் பலத்தைத் தருகிறது, அதே நேரத்தில் ஒருவரை ஆழமாக நேசிப்பது உங்களுக்குத் தைரியத்தைத் தருகிறது.

 

  • உங்களுக்குக் கற்றுத்தர மூன்று விஷயங்கள் உள்ளன: எளிமை, பொறுமை, கருணை. இந்த மூன்றும் உங்கள் மிகப்பெரிய பொக்கிஷங்கள்.

 

  • உங்கள் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதை விட பெரிய ஆபத்து எதுவும் இல்லை.

 

  • ஆரோக்கியமே மிகப் பெரிய சொத்து. மனநிறைவே மிகப்பெரிய புதையல். நம்பிக்கையே மிகச்சிறந்த நண்பன்.

 

  • உங்களுக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்து கொள்வது ஒரு நல்லொழுக்கமாகும், உங்களுக்குப் புரியவில்லை என்பதை உணராமல் இருப்பது ஒரு குறைபாடாகும்.

 

  • உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும்போது, இந்த உலகம் முழுவதும் உங்களை ஏற்றுக்கொள்கிறது.

 

  • ஆயிரம் மைல் பயணம் கூட ஒரு அடியுடன் தான் தொடங்குகிறது.

 

  • நீர் மிகவும் மென்மையானது  ஆனால் அது மலைகளையும் பூமியையும் ஊடுருவிச் செல்லும். கடினத்தை மென்மை வெல்லும் என்பதையே இது காட்டுகிறது.

 

  • உங்கள் கிண்ணத்தை விளிம்புக்கு மேலும் நிரப்பினால் அது கீழே கொட்டும். உங்கள் கத்தியைத் தொடர்ந்து கூர்மைப்படுத்திக்கொண்டே இருந்தால், அது மழுங்கிப்போகும்.

 





உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.