சாக்ரடீஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
சாக்ரடீஸின் பொன்மொழிகள்
கி.மு 470 – கி.மு 399 காலப்பகுதியில் கிரேக்க நகரமான ஏதென்ஸ் எனும் நகரில் வாழ்ந்த உலகத்தின் முதல் தத்துவஞானி என்று போற்றப்படும் உலகப்புகழ் மிக்க தத்துவஞானி தான் சாக்ரடீஸ் (Socrates). மூடநம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த அந்தக் காலத்திலேயே எதையும் கேள்வி கேக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் சாக்கிரட்டீஸ்.
மூடப் பழக்கங்களில் மூழ்கியிருந்த மக்களை சிந்திக்கத் தூண்டினார். சாக்ரடீசின் கேள்விகளால் பொதுமக்களும் இளைஞர்கள் பலரும் கவரப்பட்டனர். அவ்வாறு கவரப்பட்ட அவரின் சீடர்களில் ஒருவர் தான் உலக புகழ் பெற்ற தத்துவஞானி பிளேட்டோ (Plato). விஷம் வைத்து கொல்லப்பட்டாலும் என்றும் அழியாதவை சாக்ரடீஸின் (Socrates) சிந்தனைகள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Socrates quotes in Tamil
- நான் ஒரு புத்திசாலி என்று எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்குத் தெரியும்.
- விவாதத்தில் தோற்றுப்போகும் போது, தோற்றவரின் கருவியாக 'அவதூறு' மாறுகிறது.
- வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்த இடத்திலேயே நீங்கள் வீழ்ந்தே கிடக்கும் போது தான் தோல்வி வரும்.
- தன்னிடம் இருப்பதில் திருப்தியடையாதவன், அவன் வைத்திருக்க விரும்புவதிலும் திருப்தியடைய மாட்டான்.
- அமைதி என்பது ஒரு ஆழமான மெல்லிசை, எல்லாச் சத்தங்களையும் தாண்டி அதைக் கேட்கக்கூடியவர்களுக்கு.
- இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது.
- உங்களுக்கு காற்று தேவைப்படும் அளவுக்கு வெற்றி தேவைப்படும் போது, நீங்கள் அதை அடைவீர்கள். வெற்றிக்கு வேறு எந்த ரகசியமும் இல்லை.
- நான் ஒரு முட்டாள், ஆனால் நான் ஒரு முட்டாள் என்று எனக்குத் தெரியும், மேலும் அது என்னை உங்களை விட புத்திசாலி ஆக்குகிறது.
- ஒரு பெண் அழும் போது அவளை நம்பாதே, ஏனென்றால் விரும்பியதை அடைவதற்காக அழுவது அவளுடைய இயல்பு.
- திடீரென்று மாறும் ஒருவருக்காக கவலைப்படாதீர்கள். அவர் தனது நடிப்பைக் கைவிட்டு, தனது உண்மையான சுயத்திற்குத் திரும்பியிருக்கலாம்.
- எல்லாப் போர்களும் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகவே நடத்தப்படுகின்றன.
- ஆதாரங்களும் செயல் விளக்கமும் இல்லாமல் ஒன்றை நம்புவது அறியாமை மற்றும் முட்டாள்தனமான செயல்.
- ஒரு நேர்மையான மனிதன் எப்பொழுதும் ஒரு குழந்தை.
- ஒரு நல்ல மற்றும் உண்மையுள்ள நண்பரை விட மதிப்புமிக்க சொத்து எதுவும் இல்லை.
- வாழ்க்கையில் உண்மையான ஆபத்து மரணம் அல்ல, ஒரு தீய வாழ்க்கையை வாழ்வதே.
- பொறாமை என்பது ஆன்மாவின் ஏற்பட்ட புண்.
- ஒரு கோடு வளைந்திருப்பதை, அதன் அருகில் நேரான ஒரு கோடு இடப்படும் வரையில் நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்.
- உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் உச்சம்.
- மனநிறைவு என்பது இயற்கையான செல்வம்.
- தெரியாதவர் அமைதியாக இருந்தால், கருத்து வேறுபாடு நின்றுவிடும்.
- உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதே உண்மையான ஞானம்.