முஹம்மது அலியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
முஹம்மது அலியின் பொன்மொழிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரும், மூன்று முறை குத்துச்சண்டையில் மிகுஎடை (Heavyweight) பிரிவில் வெற்றி பெற்றவரும் தான் முஹம்மது அலி (Muhammad Ali). மேலும் தனது 18 வயதில் 1960 இல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக்லில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
நீங்கள் குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு முஹம்மது அலி (Muhammad Ali) இன் பெயர் பரீச்சயமாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு குத்துச்சண்டைகளில் முகம்மது அலியின் தாக்கம் அளப்பெரியது. அப்படிப்பட்ட தலைசிறந்த வீரன் முகம்மது அலியின் கருத்துக்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Muhammad Ali quotes in Tamil
- பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், ஆனால் நான் சொல்லிக்கொண்டேன், விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்படு, பின் உன் வாழ்நாள் முழுவதும் ஒரு வெற்றியாளனாக வாழ்.
- அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்.
- நீங்கள் 20 வயதில் இருந்தபோது இந்த உலகை எப்படிப் பார்த்தீர்களோ அப்படியே நீங்கள் 50 வயதாக இருக்கும்போதும் பார்த்தால், நீங்கள் 30 வருடங்களை வீணடித்துவிட்டீர்கள்.
- நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
- ஓய்வெடுங்கள், ஆனால் ஒருபோதும் வெளியேறிவிடாதீர்கள். சூரியன் கூட ஒவ்வொரு நாள் மாலையும் மறைந்து போகிறது. ஆனால் அது எப்போதும் மறுநாள் காலையில் உதிக்கின்றது. சூரிய உதயத்தில், ஒவ்வொரு ஆத்மாவும் மீண்டும் பிறக்கிறது.
- வெற்றியாளர்களுக்கு திறமையும் விருப்பமும் இருக்க வேண்டும். ஆனால் விருப்பம் திறமையை விட வலுவாக இருக்க வேண்டும்.
- நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்லது கடினம்.
- நான் தெரிந்து கொள்ள வேண்டியதுடன் ஒப்பிடும்போது எனக்கு எதுவும் தெரியாது என்பதால் என்னால் முடிந்தவரை நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.
- நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் போது, யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் சொல்வது தவறாக இருக்கும்போது, யாரும் மறக்க மாட்டார்கள்.
- உலகில் பில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவரும் சிறப்புடையவர்கள். உலகில் உங்களைப் போன்றவர்கள் வேறு யாரும் இல்லை.
- ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள்.
- மற்றவர்களுக்குச் செய்யும் சேவை என்பது பூமியில் உள்ள உங்கள் அறைக்கு நீங்கள் செலுத்தும் வாடகையாகும்.
- என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.
- எனது எல்லா வெற்றிகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் குறிப்பாக என் தோல்விகளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் அவை மட்டுமே என்னைக் கடுமையாக உழைக்க வைத்தன.
- பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் நீங்கள் மகிழ்வுடன் அனுபவிக்கப் போவதில்லை, ஆனால் இறுதியில் நீங்கள் காணும் வெற்றி, எல்லாவற்றையும் மதிப்புக்குரியதாக மாற்றும்.
- எனது ஒரே தவறு என்னவென்றால், நான் உண்மையில் எவ்வளவு சிறந்தவன் என்பதை நான் உணரவில்லை.
- உங்களால் ஒரு நல்ல பதிலை யோசிக்க முடியாதபோது, அமைதி பொன்னானது.
- என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது என் குறிக்கோள்களே.
- எனது முக்கிய சண்டை சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கானது.
- நீங்கள் எத்தனை தண்டால் செய்கிறீர்கள்? எனக்குத் தெரியாது. வலிக்கத் தொடங்கும் போதுதான் நான் அதை எண்ணத் தொடங்குகிறேன்.
- நான் ஏன் உலகின் அதிவேக குத்துச்சண்டை வீரன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீருக்கடியில் பயிற்சி செய்யும் ஒரே குத்துச்சண்டை வீரன் நான் தான்.