பிலைஸ் பாஸ்கலின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

பிலைஸ் பாஸ்கலின் பொன்மொழிகள்

Blaise Pascal

பிரான்சு (France) நாட்டைச் சேர்ந்த கணிதவியலாளரும் கூட்டல், கழித்தல் ஆகிய கணிதச் செயல்களைச் செய்யக்கூடிய பாஸ்கலைன் (Pascaline) எனும் கருவியை கண்டுபிடித்தவரும் தான் பிலைஸ் பாஸ்கல் (Blaise Pascal). கணிதத் துறையில் பிலைசு பாஸ்கலின் பங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக 'பாஸ்கலின் தேற்றம்' மற்றும் 'பாஸ்கல் முக்கோணம்' என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இவரைப் பெருமைப்படுத்துவதற்காகத்தான் அழுத்தத்தின் அலகுக்கு பாஸ்கல் (pascal) எனும் இவரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி மொழி ஒன்றுக்கும் இவரின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்த பிலைஸ் பாஸ்கல் (Blaise Pascal) இன் சிந்தனைகள் எப்படி இருந்தன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Blaise Pascal quotes in Tamil

 

  • மற்றவர்கள் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், எதுவும் பேசாதீர்கள்.

 

  • நீங்கள் உண்மையைத் தேடுபவராக இருக்க விரும்பினால், உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது, அனைத்தையும் உங்களால் முடிந்தவரை சந்தேகிக்க வேண்டும்.

 

  • கனிவான சொற்களுக்கு செலவு அதிகம் இல்லை. ஆனாலும் அவை அதிகமாகச் சாதிக்கின்றன.

 

  • இங்கே இரண்டு வகையான மனிதர்கள் மட்டுமே உள்ளனர்: தாங்கள் பாவிகள் என்று நினைக்கும் நேர்மையாளர்கள், தாங்கள் நேர்மையாளர்கள் என்று நினைக்கும் பாவிகள்.

 

  • இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் சட்டங்களை எழுதுபவர்கள் அல்ல. பாடல்களை எழுதுபவர்கள்தான்.

 

  • கவனச்சிதறல் மட்டுமே எங்கள் துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் அதுவே நம்முடைய துன்பங்களில் மிகப்பெரியது.

 

  • உள்ளுணர்வும் தர்க்கமும் ஒத்துப்போகும் போது, நீங்கள் சொல்வது எப்பொழுதும் சரிதான்.

 

  • மனிதனின் மகத்துவம் அவன் சிந்திக்கும் திறனில் உள்ளது.

 

  • கற்பனையே அனைத்தையும் தீர்மானிக்கிறது.

 

  • நீங்கள் அளவுக்கு அதிகமாக நேசிக்கவில்லை என்றால், நீங்கள் போதுமான அளவு நேசிக்கவில்லை.

 

  • நீங்கள் எப்பொழுதும் உண்மையில் உங்களால் புரிந்து கொள்ள முடியாததை போற்றுகிறீர்கள்.

 

  • எங்களின் அனைத்துப் பகுத்தறிவும் உணர்ச்சிகளுக்கு சரணடைவதில் முடிவடைகிறது.

 

  • நாங்கள் ஒருபோதும் ஒரு நபரை நேசிப்பதில்லை, ஆனால் அவரின் குணங்களை மட்டுமே நேசிக்கின்றோம்.

 

  • விதிவிலக்கு இன்றி அனைவருமே, மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள்.

 

  • காதலுக்கு காரணங்கள் உள்ளன, அந்தக் காரணத்தை புரிந்து கொள்ள முடியாது.

 

  • ஞானம் மீண்டும் நம்மை குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது.

 

  • நம்பிக்கை என்பது கடவுளின் பரிசு.

 

  • கடவுள் இல்லை என்றால், அவரை நம்புவதன் மூலம் ஒருவர் எதையும் இழக்க மாட்டார், அதே நேரத்தில் அவர் இருக்கிறார் என்றால், அவரை நம்பாததால் ஒருவர் அனைத்தையும் இழக்க நேரிடும்.

 

  • நாங்கள் எங்கள் எண்ணங்களை ஆராய்ந்தால், அவை எப்பொழுதும் கடந்த காலத்தாலோ அல்லது எதிர்காலத்தாலோ ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவோம்.

 

  • நமது இன்றைய சாதனைகள், நமது நேற்றைய எண்ணங்களின் கூட்டுத்தொகை தான்.

 

  • மகிழ்ச்சியை நமக்கு வெளியே தேட உள்ளுணர்வு நமக்குக் கற்பிக்கிறது.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.