உசைன் போல்ட்டின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
உசைன் போல்ட்டின் பொன்மொழிகள்
ஜமைக்காவின் ஷெர்வூட் கான்டென்ட் எனும் சிறு நகரில் பிறந்து, தனது மின்னல் வேக ஓட்டத்தால் பல உலக சாதனைகளைப் படைத்து, ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்த சாதனை வீரன் தான் உசைன் போல்ட் (Usain St Leo Bolt). 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் யாராலும் தகர்க்க முடியாத 9.58 நொடிகளில் கடந்து உலக சாதனை படைத்தவர் உசைன் போல்ட்.
மளிகைக் கடை நடத்தி வந்த வறிய குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பாலும், விடாமுயற்ச்சியாலும் இன்று சாதனையாளராகத் திகழும் உசைன் போல்ட்டின் (Usain St Leo Bolt) ஊக்கம் மிக்க கருத்துக்கள் உங்கள் வாழ்விலும் புதிய சிந்தனைகளைத் தூண்டி வாழ்வில் நீங்கள் வெற்றி பெற உறுதுணையாக அமையும். உசைன் போல்ட்டின் கருத்துக்களின் தொகுப்பை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Usain Bolt quotes in Tamil
- பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள்.
- உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும்.
- என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், எனவே என்னை நானே ஒருபோதும் சந்தேகிக்ததில்லை.
- இங்கே என்னை விட சிறந்த தொடக்க வீரர்கள் உள்ளனர், ஆனால் நான் ஒரு வலுவான முடிக்கும் வீரன்.
- கடவுள் செய்த எல்லாவற்றிற்கும் நான் அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன், அவர் இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை.
- நான் சில விஷயங்களை ஏற்றுக்கொள்கிறேன், அதனால் அது எளிதாக மாறுகிறது. நான் காயமடையக் கூடும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எல்லாப் பந்தயத்திலும் என்னால் வெல்ல முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அப்படி நடப்பதற்கான வாய்ப்புகளை குறைக்க நான் கடுமையாக உழைக்கிறேன், ஆனால் அவை நடக்கும் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். பலர் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
- என்னைப் பொறுத்தவரை, நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதில் கவனம் செலுத்துகிறேன். ஒரு முதன்மை வீரனாக இருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும், எனவே நான் அதற்காக உழைக்கிறேன்.
- நான் தொடக்கத்தைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தினேன், முடிவுதான் முக்கியமானது.
- என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், அதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது சூழ்நிலை குறித்த அவர்களின் கருத்துக்கள் என்னைத் தொந்தரவு செய்யாது.
- நான் கடினமாக உழைக்கிறேன், நான் நல்லது செய்கிறேன், என்னை நானே ரசிக்கப் போகிறேன். என்னை கட்டுப்படுத்த உங்களை நான் அனுமதிக்கப் போவதில்லை.
- பழக்கவழக்கங்கள் முக்கியமானவை. உதாரணமாக, நீங்கள் வளர்ந்து வரும் போது, நீங்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள், எல்லோருக்கும் காலை வணக்கம் சொல்ல வேண்டும். வணக்கம் சொல்லாமல் ஒருவரை கூட கடந்து செல்ல முடியாது.
- நான் என் வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ முயற்சிக்கிறேன், ஆனால் நீங்கள் எப்போதுமே கடினமாக உழைத்து உங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நான் உங்களை எப்போதும் அறிவுறுத்துகிறேன்.
- நான் போட்டியிடுவதை விரும்புகிறேன், நான் மிகவும் போட்டித்திறன் உடையவன், நான் நிச்சயமாக வெல்ல வேண்டும், ஏனெனில் நான் தோற்பதை வெறுக்கிறேன். நான் தோற்பேன் என்று தெரிந்தால் நான் போட்டியிட மாட்டேன்.
- நீங்கள் பந்தயத்தைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும்.
- மீண்டும் செய்வது எல்லாவற்றையும் விட கடினமானது.
- சில நேரங்களில் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கத் தவறிவிடுகிறீர்கள்.
- நான் என் வாழ்க்கையை 200 மீற்றர் போட்டிக்கு அர்ப்பணித்துள்ளேன், 200 மீற்றர் போட்டியை நான் மிகவும் நேசிக்கிறேன்.
- நான் சிறந்த உடல்த் தோற்றத்துடன் இருக்கும்வரை நிச்சயமாக என்னை யாரும் வெல்ல முடியாது.
- ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த கருத்தைக்கொண்டிருக்க உரிமை உண்டு.
- இதைத்தான் நான் செய்யப் போகிறேன் என்றால், இதை நன்றாகச் செய்வதற்கு, மதுவைத் தவிர்க்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.
- மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு நான் முதலிடம் கொடுத்துள்ளேன்.