ஜாக்கி சானின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஜாக்கி சானின் பொன்மொழிகள்

Jackie Chan

ஜாக்கி சான் (Jackie Chan) பன்முகத் திறமை கொண்ட ஒரு ஹாலிவுட் நடிகராவார். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு ஹாலிவுட் நடிகர் என்றால் அது ஜாக்கி சான் ஆகத்தான் இருக்க முடியும். சண்டைக் காட்சிகளில் நகைச்சுவையை புகுத்தி ஒரு புதிய பானியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர்  ஜாக்கி சான்.

நடிப்பு மட்டுமல்லாது இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர் மற்றும் பாடகர் எனும் பல்வேறு துறைகளிலும் தனது திறமையால் வெற்றி கண்டார் ஜாக்கி சான் (Jackie Chan). நீங்கள் சினிமா ரசிகராக இருந்தால் ஒரு தடவையாவது ஜாக்கி சானை ரசித்திருப்பீர்கள். ஜாக்கி சானின் சிந்தனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Jackie Chan quotes in Tamil

 

  • சூழ்நிலைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றியமையுங்கள்.

 

  • வாழ்க்கை எங்களைக் கீழே தள்ளிவிடும், ஆனால் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமா இல்லையா என்பதை எங்களால் தேர்வு செய்ய முடியும்.

 

  • ஏதோ ஒன்றைச் சாத்தியமற்றது என்று என்னிடம் யாராவது சொல்வதை விட என் வெற்றியை உறுதி செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை.

 

  • நான் ஒருபோதும் அடுத்த புரூஸ் லீ ஆக இருக்க விரும்பவில்லை. நான் முதல் ஜாக்கி சானாக மட்டுமே இருக்க விரும்பினேன்.

 

  • சிறந்த சண்டைகளானது நாம் தவிர்த்த சண்டைகள் தான்.

 

  • சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையே போதுமானது.

 

  • நீங்கள் யாரோ ஒருவருக்கு நல்லவராக இருப்பதற்கு, உங்களுக்குக் காரணம் ஒன்றும் தேவையில்லை.

 

  • ஒரு கதை முடிவடைந்தவுடன், மற்றொரு கதை தொடங்குகிறது.

 

  • நான் சிறிய விடயங்களைச் செய்கிறேன். ஒவ்வொரு நாளும் நல்ல விடயங்களைச் செய்ய முயற்சிக்கிறேன். எல்லோரும் ஏதாவது நல்லது செய்தால், இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

 

  • அமைதியாக இருப்பது மற்றும் எதுவும் செய்யாமல் இருப்பது, இரண்டும் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள்.

 

  • வலி என்பது எனது அன்றாட வழக்கம். நான் மருத்துவமனைக்குச் செல்லாதவரை, அது எனக்கு ஒன்றுமில்லை.

 

  • நான் ஏன் ஜாக்கி சான் ஆனேன்? எனெனில் பெரும்பாலான மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். நான் இன்னும் பயிற்சி செய்கிறேன்.

 

  • நான் சிறு வயதில் நிறைய பயிற்சி செய்தேன். நான் என் மனதைப் பயிற்றுவித்தேன், என் கண்களைப் பயிற்றுவித்தேன், என் சிந்தனைக்குப் பயிற்சி அளித்தேன், மக்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும். அத்துடன் அது எனக்கு நெருக்கடிகளை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக் கொடுத்தது.

 

  • தற்காப்புக் கலைகள் மக்களைத் துன்புறுத்துவதற்காக அல்ல, அது மக்களைப் பாதுகாப்பதற்கு. 

 

  • நான் மக்களை சிரிக்க வைக்க விரும்புகிறேன், உலக அமைதியை ஊக்குவிக்க முயற்சிசெய்ய விரும்புகிறேன்.

 

  • நான் மனச்சோர்வடைந்தால், புரூஸ் லீயின் திரைப்படங்களைப் பார்ப்பேன். நான் புரூஸ் லீயிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

 

  • இன்று எனக்கு பணம் உண்மையில் ஒரு பொருட்டல்ல.

 

  • பழைய தலைமுறையினருடன் எவ்வாறு பேச வேண்டும் என்பதை இளம் தலைமுறையினருக்கு நாங்கள் கற்பிக்க வேண்டும்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.