ஜே. கே. ரௌலிங்கின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஜே. கே. ரௌலிங்கின் பொன்மொழிகள்

J. K. Rowling

ஆங்கில புதினக் கதை எழுத்தாளரும், ஹாாிபாட்டர் (Harry Potter) என்ற உலகப் புகழ் மிக்க கதையை உருவாக்கியவருமான உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜே. கே. ரௌலிங் (J. K. Rowling). 1997 இல் வெளியான இவரின் புத்தகமான ஹாாிபாட்டரின் முதல் பாகம் விற்பனையில் சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து வந்த ஹாாிபாட்டரின் அனைத்துப் பாகங்களும் விற்பனையிலும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றன.

இதுவரை 73 மொழிகளுக்கும் மேலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது  ஜே.கே.ரவுலிங்கின் (J. K. Rowling) புத்தகங்கள். புத்தகங்களாக மட்டுமல்லாமல் திரைப்படமாகவும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன ஜே. கே. ரௌலிங்கின் படைப்புக்கள். இவரின் சிறந்த படைப்புகள் இவரை உலகின் பணக்கார பெண்களில் ஒருவராகவும் மாற்றியது. வாழ்வில் ஏதாவது ஒன்றைச் சாதிக்கப் போராடும் அனைத்துப் பெண்களுக்கும் ஜே.கே.ரவுலிங் ஒரு முன்னோடி.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

J. K. Rowling quotes in Tamil

 

  • நீங்கள் ஒரு மனிதனின் உண்மையான தரத்தைக் காண விரும்பினால், அவன் தனதுக்குக் கீழ் உள்ளவர்களை எவ்வாறு நடத்துகிறான் என்பதைப் பாருங்கள், அவனுக்குச் சமமானவர்களை எவ்வாறு நடத்துகிறான் என்பதை அல்ல.

 

  • நம் உலகை மாற்றுவதற்கு நமக்கு மந்திரம் தேவையில்லை. நமக்குத் தேவையான எல்லாச் சக்தியையும் நாம் ஏற்கனவே நமக்குள் சுமந்து செல்கிறோம்.

 

  • தோல்வி வேடிக்கையானது அல்ல, அது மோசமானதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஒருபோதும் தோல்வியடையக் கூடாது என மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்வது மோசமானது.

 

  • இந்த உலகம் நீங்கள் இதுவரை கண்டிராத அற்புதமான விடயங்களால் நிறைந்துள்ளது. அவற்றைக் காணும் வாய்ப்பை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.

 

  • எது சரியானது, மற்றும் எது எளிதானது, இவற்றுக்கு இடையில் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

 

  • நாம் அனைவரும் நமக்குள் அதிசயங்களை வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது.

 

  • உங்களைத் தவறான திசையில் வழிநடத்தியதற்காக உங்கள் பெற்றோரை குற்றம் சாட்டுவதற்கு காலாவதி தேதி உள்ளது, உங்களுக்கு வண்டி ஓட்டப் போதுமான வயதாகிவிட்டால், பொறுப்பு உங்களிடம் தான் உள்ளது.

 

  • தோல்வி மிகவும் முக்கியமானது, நாங்கள் எப்பொழுதுமே வெற்றியைப் பற்றிப் பேசுகிறோம். தோல்வியைத் தாங்குவதற்கான திறன் அல்லது தோல்வியைப் பயன்படுத்துவது பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுக்கிறது. தோல்வியடைந்து விடுவோமோ  என்ற பயத்தில் முயற்சி செய்ய விரும்பாதவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

 

  • அடையக்கூடிய குறிக்கோள்கள் சுய முன்னேற்றத்திற்கான முதல் படியாகும்.

 

  • வாழ்க்கை மிகவும் குறுகியது. எனக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விடயங்களை அல்லது நான் நல்லது என நினைக்கும் விடயங்களை அல்லது மதிப்பு மிக்க விடயங்களை மட்டுமே செய்ய விரும்புகிறேன்.

 

  • அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் கற்பனைதான் அடித்தளம்.

 

  • வார்த்தைகள் பெரும்பாலும் விவரிக்க முடியாத அற்புதத்தின் மூலமாகும் என்பது என் மிகவும் தாழ்மையான கருத்து. வார்த்தைகள் காயத்தை ஏற்படுத்தும் திறனும் மற்றும் அதைச் சரிசெய்யும் திறனும் கொண்டவை.

 

  • அலட்சியம் மற்றும் புறக்கணிப்பு பெரும்பாலும் வெளிப்படையான வெறுப்பைக் காட்டிலும் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

 

  • நான் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன், பெரும்பாலும் இரண்டாவதை அடைவதற்கு முதலாவது வழிநடத்துகிறது.

 

  • எல்லாவற்றையும் விட மிகவும் சக்திவாய்ந்த விடயம் அன்பு என்பதை நிச்சயமாக நான் அறிந்துள்ளேன்.

 

  • மக்களை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய கதைகளுக்கு எப்போதும் இங்கே ஓர் இடமுண்டு.

 

  • இளமையாக இருக்கும்போது நீங்கள் வாசித்த புத்தகங்கள் எப்பொழுதும் உங்களுடன் வாழ்கின்றன என்று நான் நினைக்கின்றேன்.

 

  • மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால், நான் செய்ததைப் போலவோ உங்களால் முடிந்தவரை வாசிக்க வேண்டும். இது நல்ல எழுத்தை உருவாக்குவது பற்றிய புரிதலை உங்களுக்குத் தரும், மேலும் இது உங்கள் சொல்வளத்தை விரிவாக்கும்.

 

  • அநேகமாக அதிகாரத்தை  அடைவதற்கு மிகவும் பொருத்தமானவர்கள், ஒருபோதும் அதை நாடிச்செல்லாதவர்களே.

 

  • நிறைய வாசியுங்கள். வாசிப்பு உண்மையில் உதவுகிறது. உங்கள் கைகளில் கிடைக்கும் எதையும் வாசியுங்கள்.

 

  • எங்களை நேசிப்பவர்கள், ஒருபோதும் எங்களை விட்டுச் செல்ல மாட்டார்கள்.

 

  • இளைஞர்களுக்கு இணையம் ஒரு வரமாகவும் மற்றும் சாபமாகவும் இருந்து வருகிறது.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.