புரூஸ் லீயின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

 புரூஸ் லீயின் பொன்மொழிகள் 

Bruce Lee

தற்காப்புக் கலை என்றதுமே நம் நினைவுக்கு வரும் ஒரே பெயர் புரூஸ் லீ (Bruce Lee) ஆகத்தான் இருக்கும். உலகில் அதிகமாக தற்காப்புக் கலைப் பள்ளிகள் தொடங்கப்பட்ட ஆண்டு புரூஸ் லீ (Bruce Lee) இன் என்ட த டிராகன் (Enter the Dragon) எனும் திரைப்படம் வெளியான ஆண்டாகும். புரூஸ் லீயின் திரைப்படங்களின் தாக்கம் எந்தளவிற்கு இருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்.

தற்காப்புக் கலையை அதிகமாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்த பெருமை புரூஸ் லீயையே (Bruce Lee) சாரும். இன்றும் கூட புரூஸ் லீயின் பல சாதனைகள் முறியடிக்கப்படாமலே உள்ளது. அவரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அன்றைய காலத்தில் கமெராக்களின் வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டது. புரூஸ் லீ தற்காப்புக் கலையில் மட்டுமல்ல தத்துவத்திலும் சிறந்து விளங்கியவர். அவரின் சிந்தனைகள் நாம் வாழ்வில் முன்னேறுவதற்கு துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


 

Bruce Lee quotes in Tamil

 

  • தாங்கள் இருளில் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வுவே இல்லாதவர்கள் ஒருபோதும் ஒளியயைத் தேடிச்செல்ல மாட்டார்கள்.

 

  • 10000 அடிமுறைகளை ஒருதடவை பயிற்சி செய்தவனைப் பார்த்து நான் அஞ்சவில்லை. ஆனால் ஒரு அடிமுறையை 10000 தடவைகள் பயிற்சி செய்தவனைப் பார்த்து நான் அஞ்சுகிறேன்.

 

  • நீங்கள் எதையாவது சாத்தியமற்றது என்று கூறும்போது, நீங்கள் அதை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளீர்கள்.

 

  • வெற்றியடைவது எப்படி என்பதை அறிய எல்லோரும் விரும்புகிறார்கள், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அறிய யாரும் விரும்புவதில்லை.

 

  • வாழ்க்கையே உங்கள் ஆசிரியர், நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறீர்கள்.

 

  • மகிழ்ச்சியாக இருங்கள், ஆனால் ஒருபோதும் திருப்தி அடையாதீர்கள்.

 

  • எளிமையே திறமைக்கான திறவுகோல்.

 

  • நாம் பிரச்சனைகளை ஆராயும்போது தீர்வைக் கண்டுபிடிக்கிறோம். பிரச்சனை வேறு தீர்வு வேறல்ல, பிரச்சனையே தீர்வாகும். பிரச்சனையை புரிந்துகொள்வது பிரச்சனையை கரைந்துபோகச் செய்கிறது.

 

  • என்னைப் பொறுத்தவரை எதையாவது தோற்கடித்தல் என்பது வெறுமனே தற்காலிகமானது. தோற்கடித்தல் என்பது நான் செய்வதில் எதோ தவறு உள்ளது என்பதைச் சொல்கிறது.

 

  • தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படக்கூடியவை, அவற்றை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால்.

 

  • துன்பங்கள் எங்கள் சிறந்த ஆசிரியர். ஒரு மனிதன் தொலைநோக்கியைக் காட்டிலும் கண்ணீர் மூலம் கூடுதலாகப் பார்க்க முடியும்.

 

  • உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அமைதியாகக் கவனித்துக் கொண்டிருங்கள்.

 

  • நீங்கள் நினைப்பது போல், நீங்கள் ஆகிறீர்கள்.

 

  • கற்றுக்கொள்வது மட்டுமே போதாது அதை உபயோகிக்க வேண்டும்.

 

  • எப்பொழுதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள், உங்களை வெளிப்படுத்துங்கள். வெளியில் சென்று வெற்றிகரமான மனிதரை பார்த்து அவரைப் போலவே இருக்க முயற்சிக்காதீர்கள்.

 

  • உங்களைத் தவிர உங்களுக்கு வேறு யாரும் உதவ முடியாது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் உங்களுக்குள் இருக்கும் போது அதை எப்படி அடைவது என்று என்னால் கூற முடியாது.

 

  • ஆறாவது அறிவிற்கான தேடலில், ஐந்து புலன்களைப் புறக்கணிக்காதீர்கள்.

 

  • நீங்கள் வழக்கமாக என்ன நினைக்கிறீர்கள் என்பது பெரும்பாலும் நீங்கள் இறுதியில் என்ன ஆகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.

 

  • தோல்விக்கு அஞ்சாதீர்கள். தோல்வி ஒரு குற்றமல்ல, ஆனால் சிறிய இலக்கே குற்றமாகும். பெரும் முயற்சிகள் தோல்வியுற்றாலும் கூட அவை போற்றத்தக்கவை.

 

  • விரக்தியடையாமல், உங்களால் எதையாவது செய்யமுடியும் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கமாட்டீர்கள். போராட்டங்கள் மூலமே நாங்கள் வளர்ச்சியடைகிறோம்.

 

  • மக்கள் ஒரேமாதிரியாக இருக்க முயற்சிசெய்கிறார்கள். இதுவே அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

 

  • உங்கள் மனதை வெறுமையாக்குங்கள், தண்ணீரைப் போன்று உருவமற்று வடிவமற்று இருங்கள். நீங்கள் தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றினால் அது கோப்பையாக மாறும். நீங்கள் தண்ணீரை ஒரு போத்தலில் ஊற்றினால் அது போத்தலாக மாறும். நீங்கள் அதை ஒரு குடுவையில் ஊற்றினால் அது குடுவையாக மாறும். தண்ணீரால் தடைகளை கடந்து செல்லவும் முடியும் அல்லது அதை உடைத்து எறியவும் முடியும். தண்ணீரைப் போன்று இருங்கள் நண்பா.

 

  • இலகுவான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யாதீர்கள், கடினமான வாழ்க்கையை தாங்கிக்கொள்வதற்கான வலிமைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

  • ஒரு புத்திசாலித்தனமான பதிலில் இருந்து ஒரு முட்டாள் கற்றுக்கொள்வதை விட, ஒரு முட்டாள்தனமான கேள்வியிலிருந்து ஒரு புத்திசாலி அதிகமாக கற்றுக்கொள்ள முடியும்.




உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.