அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் பொன்மொழிகள்
இன்றைய காலத்தை குறிப்பிடும் போது பலர் "இணைய யுகம்" என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இணைய யுகம் என்று குறிப்பிடுவதை விட கைபேசி யுகம் என்று குறிப்பிடுதே சரியாக இருக்கும் என்று கூறும் அளவுக்கு கைபேசிகளின் ஆதிக்கமே அதிகம்.
என்னதான் கைபேசிகளின் தொழில்நுட்பம் தற்போது உச்சத்தைத் தொட்டிருந்தாலும், இவை அனைத்துக்கும் அடித்தளமிட்டது தொலைபேசிகளே, தொலைதூரத்தில் உள்ளவர்களையும் நினைத்தமாத்திரத்தில் தொடர்புகொள்ள வைத்தது தொலைபேசிகளே.
இந்த சாதனைகளுக்கெல்லம் சொந்தக்காரர், இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரான அலெக்சாண்டர் கிரஹாம் பெல் (Alexander Graham Bell) அவர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Alexander graham bell quotes in Tamil
- எப்பொழுதும் பொதுவான பாதையிலேயே பயணிக்காதீர்கள். மற்றவர்களைப் பின்தொடர்ந்து ஆட்டு மந்தைகளைப் போல் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லாதீர்கள். இந்தத் தேய்ந்து போன பாதையை விட்டு விலகி அவ்வப்போது காடுகளுக்குள் குதியுங்கள்.
- ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கப்படுகிறது. ஆனால் நாம் மீண்டும் மீண்டும் மூடிய கதவையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதால், நமக்காக திறக்கப்பட்ட கதவைப் பார்ப்பதில்லை.
- வேறு எதற்கும் முதல், முன்னேற்பாடே வெற்றிக்கான சாவியாகும்.
- தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் மனிதன் தொலைதூரத்திலிருந்து தன்னுடன் பேசும் நபர் யார் என்று பார்க்கக்கூடிய ஒரு நாள் வரும்.
- வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் உள்ள ஒரே வேறுபாடு செயலாற்றும் திறனாகும்.
- ஒரு இலக்கை அடைதல் மற்றொரு இலக்கின் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்.
- சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பல மனங்களின் கூட்டிணைப்பால் உருவானது.
- உங்களால் யோசனைகளைக் பலவந்தப்படுத்த முடியாது. வெற்றிகரமான யோசனைகள் மெதுவான வளர்ச்சியின் விளைவாகும். அவற்றை நீங்கள் எவ்வளவு ஆராய்ந்தாலும், யோசனைகள் ஒரு நாளில் முழுமையடையாது.
- கடவுள் நம் பாதைகளை அதிசயங்களால் நிரப்பியுள்ளார், வாழ்க்கைப் பாதையில் நிச்சயமாக நாம் கண்களை மூடிக்கொண்டு செல்லக்கூடாது.
- வேலை செய்வதற்கு ஏற்ற மிகவும் அமைதியான நேரம் இரவு. இது சிந்தனைக்குத் துணைபுரிகிறது.
- கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுகிறான்.
- இந்தச் சக்தி என்ன என்பதை என்னால் கூற முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், அது இருக்கிறது என்பது மட்டுமே.
- நான் எப்பொழுதும் என்னை ஒரு அஞ்ஞானவாதி என்றே கருதுகிறேன்.
- கவனியுங்கள், நினைவில் கொள்ளுங்கள், ஒப்பிடுங்கள்.
- தந்தி அனுப்பப்பட்டிருப்பதை மக்களுக்கு தெரிவிக்க தொலைபேசி பயன்படுத்தப்படும்.
- தொலைபேசி மற்ற அனைத்து வகையான மின்சார சாதனங்களையும் விட அதிக நன்மைகளைக் கொண்டுள்ளது, உண்மையில் அதை இயக்க எந்தத் திறமையும் தேவையில்லை.