ஸ்டீவ் ஜாப்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழிகள்

Steve Jobs

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தொழிநுட்ப ஜாம்பவானும், ஆப்பிள் நிறுவனத்தை (Apple Inc) நிறுவியவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகளைத் தொகுத்து வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொழில்நுட்ப உலகில் யாராலும் தவிர்க்க முடியாத முடிசூடா மன்னன் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve jobs). மிக இளம் வயதிலேயே தொழிநுட்பத்தில் பல புரட்சிகளைச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

அவரது புதிய மாறுபாடான சிந்தனைகள் மூலம், தொழிநுட்ப உலகில் பல சாதனைகளைச் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve jobs). அவரது கருத்துக்கள் சாதிக்கப் போராடும் அனைவருக்கும், ஒரு தூண்டுகோலாகவும், புதிய கோணத்தில் சிந்தனைகளை உருவாக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை. உங்கள் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றிகளை அடைய, ஸ்டீவ் ஜாப்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகளைப் படித்துப் பயனடையுங்கள்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Steve Jobs quotes in Tamil


  • பிரச்சனையை சரியாக வரையறுத்துவிட்டாலே கிட்டத்தட்ட தீர்வு உங்களிடம் இருக்கும்.

 

  • எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். ஒரு விடயத்தைச் சிறப்பாகச் செய்யுங்கள்.

 

  • புத்திசாலிகளை வேலைக்கு அமர்த்தி அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் அவர்களிடம் சொல்வதில் அர்த்தமில்லை. நாம் புத்திசாலிகளை வேலைக்கு அமர்த்துகிறோம், நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் எம்மிடம் சொல்கிறார்கள்.

 

  • வியாபாரத்தில் மிகச்சிறந்த விடயங்கள் ஒருபோதும் தனி மனிதரால் செய்யப்படுவதில்லை. அவை ஒரு குழுவினரால் செய்யப்படுகின்றது.

 

  • மற்றவர்களின் கூச்சல் மற்றும் கருத்துக்கள் உங்கள் உட்குரலை மூழ்கடிக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள்.

 

  • முகாமைத்துவம் என்பது மக்கள் செய்ய விரும்பாத விடயங்களைச் செய்ய அவர்களைத் தூண்டுவதாகும். அதே சமயம் தலைமைத்துவம் என்பது மக்கள் தங்களால் செய்ய முடியாது என நினைக்கும் விடயங்களைச் செய்ய அவர்களை ஊக்குவித்தலாகும்.

 

  • வெற்றி பெற்ற தொழில் முனைவோரையும், வெற்றி பெறாத தொழில் முனைவோரையும் வேறுபடுத்துவது "விடாமுயற்சி" என்று நான் நம்புகிறேன்.

 

  • நீங்கள் எதை அடைய முயற்சி செய்கிறீர்கள் என்ற தெளிவான திட்டம் இல்லாமல், ஒரு கூட்டத்துக்குச் செல்லவோ  அல்லது ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவோ கூடாது.

 

  • புத்தாக்கம் என்பது மாற்றத்தை ஒரு வாய்ப்பாகக் காணும் திறனாகும், மாற்றத்தை அச்சுறுத்தலாக காண்பதல்ல.

 

  • எதையாவது எளிமையாக மாற்றியமைப்பதற்கு, ஏராளமான கடின உழைப்புத் தேவைப்படுகிறது.

 

  • உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உங்களைப் பற்றிய அக்கறையில்லை. உங்கள் பொருட்கள், சேவைகளைப் பற்றிய அக்கறையில்லை. அவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் கனவுகளைப் பற்றியும், தங்கள் குறிக்கோள்களைப் பற்றியுமே அக்கறை கொண்டவர்கள். அவர்களின் இலக்குகளை அடைய நீங்கள் அவர்களுக்கு உதவினால் அவர்கள் மிகவும் அக்கறை காட்டுவார்கள். அதற்கு நீங்கள் அவர்களின் இலக்குகளையும் மற்றும் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.


  • நீங்கள் எடுக்கும் முக்கியமான தீர்மானங்கள், நீங்கள் செய்ய வேண்டும் என்று தீர்மானித்த விடயங்கள் அல்ல, நீங்கள் செய்யக் கூடாது என தீர்மானித்த விடயங்களாகும்.


  • உங்கள் இதயத்தையும் உள்ளுணர்வையும் பின்தொடர தைரியம் வேண்டும்.


  • அறிவார்ந்த தர்க்கரீதியான பகுப்பாய்வைவிட உள்ளுணர்வு சார்ந்த புரிதல் முக்கியத்துவம் வாய்ந்தது  என்பதை நான் உணர ஆரம்பித்தேன். உள்ளுணர்வு மிகவும் சக்திவாய்ந்தது. அறிவாற்றலை விட மிகவும் சக்திவாய்ந்தது. அது எனது வேலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே என் கருத்து.


  • உங்களுக்குப் பேரார்வம் இல்லையெனில், உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.


  • உங்கள் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளில், நீங்கள் உங்கள் பழக்கவழக்கங்களை உருவாக்குகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் கடைசி 30 ஆண்டுகளில், உங்கள் பழக்கவழக்கங்கள் உங்களை உருவாக்குகின்றன.


  • தன்னால் இந்த உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்குப் பைத்தியக்காரத்தனம் உடையவர்கள்தான், இந்த உலகை மாற்றுகிறார்கள்.


  • தோல்விக்குப் பயந்தால் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்.


  • வாடிக்கையாளர்கள் நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சித்தீர்கள் என்பதை அளவீடு செய்ய மாட்டார்கள், உங்களால் என்ன வழங்கப்பட்டதோ அதையே அளவீடு செய்கிறார்கள்.


  • கணினி மொழியை அனைவரும் கற்க வேண்டும். ஏனெனில் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை அது கற்றுத்தருகிறது.


  • உண்மையான திருப்தியை அடைய ஒரே வழி, சிறந்த வேலை என நீங்கள் நம்பும் வேலையைச் செய்வதாகும்.


  • சில நேரங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் கல்லால் அடிக்கும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள்.


  • எங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும்.


  • மிகச் சிறந்த வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசித்துச் செய்வதாகும்.


  • சிறிதாகத் தொடங்குங்கள், பெரிதாகச் சிந்தியுங்கள். ஒரே நேரத்தில் பல விடயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.


  • உங்கள் வேலை உங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை நிரப்பப் போகிறது, எனவே நீங்கள் செய்வதை நேசியுங்கள். உங்கள் நேரம் வரையறுக்கப்பட்டது, எனவே அதை வீணாக்காதீர்கள்.


  • படைப்பாற்றல் என்பது விடயங்களை இணைப்பது மட்டுமே. படைப்பாளிகளிடம் நீங்கள் அதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டால், அவர்கள் குற்ற உணர்ச்சியடைகிறார்கள், ஏனெனில் உண்மையில் அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்கள் எதோ ஒன்றைப் பார்த்தார்கள். சிறிது நேரம் கழித்து அது அவர்களுக்கு மிகத்தெளிவாகத் தெரிந்தது. அதற்குக் காரணம் அவர்கள் பெற்ற அனுபவங்களை இணைத்து புதிய விடயங்களை ஒருங்கிணைக்க அவர்களால் முடிந்தது.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.