புத்தரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

 புத்தரின் பொன்மொழிகள்

Gautama Buddha


இந்த உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை, இந்த உலகம் மேன்மை அடைவதற்காக பல பேர் பாடுபட்டுள்ளனர். ஆனால் தன் பிறப்பாலேயே இந்த உலகை மேன்மையடையச் செய்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் தான் கெளதம புத்தர் (Gautama Buddha). அவரின் உபதேசங்களும், அறிவுரைகளும் அன்று மட்டும் அல்ல என்றும் நம் மானுட சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய உண்மைகளாகும். 

வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ புத்தரின் உபதேசங்கள் இன்றியமையாதது. புத்தரின் (Gautama Buddha) போதனைகள் உங்கள் வாழ்வை மேம்படுத்த உதவும் என்பதில் ஐயமில்லை. புத்தரின் மிகச்சிறந்த பொன்மொழிகளைத் தொகுத்து வழங்கியுள்ளோம் படித்துப் பயனடையுங்கள்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Buddha quotes in Tamil


  • ஒரு கணத்தால் ஒரு நாளை மாற்ற முடியும், ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும், ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும்.

 

  • நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.

 

  • நமக்கு நடக்கும் அனைத்குக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாங்கள் மட்டுமே பொறுப்பு.

 

  • நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள்.

 

  • மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.

 

  • எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.

 

  • உலகம் ஒரு கண்ணாடி போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த எண்ணங்களின் உண்மையான பிரதிபலிப்பைக் காட்டுகிறது. உங்கள் மனதை ஆளுங்கள் இல்லையெனின் அது உங்களை ஆளும்.

 

  • எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விடயங்களுக்காக கவலைப்பட வேண்டும்.

 

  • உங்கள் கவனத்தைப் போட்டியிடுவதிலிருந்து பங்களிப்புச்செய்வதற்கு நகர்த்தும்போது, வாழ்க்கை கொண்டாட்டமாக மாறுகிறது. மனிதர்களைத் தோற்கடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்.

 

  • நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், எங்கள் செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.

 

  • வெளியிலிருந்து நம்மை யாரும் ஆள முடியாது. இந்த உண்மை எமக்குத் தெரிந்தவுடன், நாம் சுதந்திரமாகிவிடுகிறோம்.

 

  • உங்கள் கடந்த காலத்தை அறிய விரும்பினால், உங்கள் நிகழ்காலத்தைப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தை அறிய விரும்பினால், உங்கள் நிகழ்காலத்தைப் பாருங்கள்.

 

  • உண்மையைப் பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.

 

  • வாழ்க்கை நிகழ்காலத்தில் மட்டுமே நிகழ முடியும். நிகழ்காலத்தை நீங்கள் இழந்தால். வாழ்க்கையை இழக்கிறீர்கள்.

 

  • உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.

 

  • மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். உங்களுக்கு மனநிறைவு, தெளிவு மற்றும் அமைதியைத் தரக்கூடியதை நீங்களே கண்டுணருங்கள். அதுவே நீங்கள் பின்பற்ற வேண்டிய பாதை.

 

  • யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள்.

 

  • இந்தப் பூமிக்கு அமைதியைக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, நம் சொந்த வாழ்க்கையை அமைதியானதாக மாற்றக் கற்றுக்கொள்வதுதான்.

 

  • வாழ்வில் நிலையான ஒரே விடயம் மாற்றம் மட்டுமே என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

 

  • தங்களை தாமே நம்பி, யாரிடமும் உதவி எதிர்பார்க்காமல், தங்களுக்கு தாமே உதவிகரமாக இருப்பவர் யாரோ அவரே வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைகிறார்.

 

  • பெரியவர்களை எப்பொழுதும் மரியாதையாக நடத்துபவர்களுக்கு இந்த நான்கும் அதிகரிக்கும். வாழ்க்கை , அழகு, மகிழ்ச்சி , வலிமை.


  • நல்லதைச் செய்ய உங்கள் இதயத்தை தயார் செய்யுங்கள். அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள், நீங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள்.


  • அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனத்தால் அனைத்தையும் மாற்ற முடியும்.


  • உங்கள் உடல் விலைமதிப்பற்றது. அது எங்கள் விழிப்புணர்வுக்கான வாகனம். அதை கவனமாகக் கையாளுங்கள்.


  • வானில், கிழக்கு மற்றும் மேற்கு என்ற பாகுபாடு இல்லை, மக்கள் தங்கள் மனதினால் வேறுபாடுகளை உருவாக்கி, பின்னர் அவற்றை உண்மை என்று நம்புகிறார்கள்.


  • தான் ஒரு ஞானி என்று நினைக்கும் ஒரு முட்டாள் வெறும் முட்டாள். தான் ஒரு முட்டாள் என்று தெரிந்த முட்டாள் உண்மையில் ஒரு ஞானி.


  • உங்கள் செயல்கள் மட்டுமே உங்கள் உண்மையான உடமைகள்.


  • உங்களுடன் நடக்க ஒரு நல்ல துணையை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காட்டில் சுற்றித்திரியும் யானையைப் போல தனியாக நடந்து செல்லுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களுடன் இருப்பதை விட தனியாக இருப்பதே நல்லது.


  • மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் அல்லது செய்யத் தவறுகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தாதீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லது செய்யத் தவறுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.