சுன் சூ வின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
சுன் சூ வின் பொன்மொழிகள்
சுன் சூ ( Sun Tzu ) என்பவர் சீனாவைச் சேர்ந்த தலைசிறந்த படைத்தளபதி மற்றும் தத்துவஞானி ஆவார். இவர் போர்க்கலை ( The art of war ) தி ஆர்ட் ஆப் வார் எனும் போரின் நுட்பங்களையும் போரில் வெற்றி பெறும் வழிமுறைகளைப் பற்றியும் கூறும் நூலை எழுதியுள்ளார். இன் நூலால் எல்லோராலும் அறியப்படுகிறார்.
இவரின் போர்த் தந்திரங்களாலும் போர் யுக்திகளாலும் சிஜி எனும் மன்னர் போர்களில் வெற்றி பெற்றார். பின் சிஜி மன்னர் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க போர்க்கலை ( The art of war ) தி ஆர்ட் ஆப் வார் எனும் நூலை எழுதினார். இவரின் இந்த புத்தகம் அனைவராலும் தலைசிறந்த புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுன் சூ ( Sun Tzu ) வின் சிந்தனைகள் போரில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெற உதவும்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Sun Tzu quotes in Tamil
- தன் எதிரியையும் தன்னையும் நன்கு அறிந்தவனை எளிதில் தோற்கடிக்க முடியாது.
- நீங்கள் புலியின் குகைக்குள் நுழையாவிட்டால், உங்களால் புலிக்குட்டிகளைப் பிடிக்க முடியாது.
- எதிரியைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பு எதிரியாலேயே வழங்கப்படுகிறது.
- வெற்றி என்பது பிரச்சினைகளிலிருந்து வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பதில் இருந்து வருகிறது.
- எப்பொழுது சண்டையிட வேண்டும், எப்பொழுது சண்டையிடக்கூடாது என்று யாருக்குத் தெரியுமோ அவரே வெல்வார்.
- சமாதானத்தின் போது அதிக வியர்வை சிந்துங்கள், போரின் போது குறைந்த இரத்தம் சிந்துங்கள்.
- காற்றைப் போல வேகமாக இருங்கள். காட்டைப் போல அமைதியாக இருங்கள். நெருப்பைப் போல வெல்லுங்கள். மலையைப் போல உறுதியாக இருங்கள்.
- உங்கள் தவறைக் கண்டறிந்தவுடன் விரைவில் அதைச் சரிசெய்யுங்கள்.
- நல்ல சேவைக்கான வெகுமதிகளை ஒரு நாள் கூட தள்ளிப் போடக்கூடாது.
- பாதுகாப்பு மூலம் உங்கள் எதிரி உங்களைத் தோற்கடிப்பதைத் தடுக்க முடியும், ஆனால் தாக்குதல் நடத்தாமல் அவரை உங்களால் தோற்கடிக்க முடியாது.
- உங்களையும் உங்கள் எதிரியையும் நீங்கள் அறிந்திருந்தால், ஒரு இழப்புக் கூட இல்லாமல், நூறு போர்களை உங்களால் வெல்ல முடியும்.
- நீங்கள் பலமாக இருக்கும்போது பலவீனமாகவும், பலவீனமாக இருக்கும்போது பலமாகவும் தோற்றமளியுங்கள்.
- உறுதியான வாள் கூட உப்பு நீரில் மூழ்கினால் இறுதியில் துருப்பிடிக்கும்.
- சண்டையிடாமலே எதிரிகளை தோற்கடிப்பதே உச்சபட்ச போர்க்கலையாகும்.
- உங்கள் எதிரியை பற்றி அறிய, நீங்களே உங்கள் எதிரியாக மாற வேண்டும்.
- ஒரு சிறந்த போர்வீரனுக்கு அடையாளம் அவன் தனது சொந்த விதிமுறைகளின் படி போரிடுவான் அல்லது போரிடவே மாட்டான்.
- வெற்றி பெற்ற வீரர்கள் முதலில் வென்றுவிட்டு பின்னர் போருக்குச் செல்கிறார்கள், அதேசமயம் தோற்கடிக்கப்பட்ட வீரர்கள் முதலில் போருக்குச் சென்று பின்னர் வெற்றி பெற முற்படுகிறார்கள்.
- குழப்பங்களுக்கு மத்தியில், வாய்ப்பும் உள்ளது.
- போரே இல்லாமல் கிடைக்கும் வெற்றிதான் மிகச்சிறந்த வெற்றி.
- போரிட விரும்புகிறவன் முதலில் போரால் ஏற்படப்போகும் சேதத்தை கணக்கிட வேண்டும்.
- உங்களை நீங்களே அறிந்து கொண்டால், நீங்கள் எல்லா போர்களிலும் வெற்றி பெறுவீர்கள்.