மதத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

மதத்தைப் பற்றிய பொன்மொழிகள்

Religion

மதம் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தலாம் அல்லது அவனை மிருகமாக்கலாம் இரண்டுக்கும் சாத்தியமுண்டு. ஆனாலும் மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலேயே உருவாக்கப்பட்டது.

அடுத்தவர் மதம் குறித்து விவாதம் செய்யாமல் இருப்பதும், அடுத்தவர் மத நம்பிக்கைகளை விமர்சனம் செய்யாமல் இருப்பதுமே எப்பொழுதும் ஒரு உயர்ந்த பண்பாகும். மேலும் அதுவே உங்களை ஒரு முதிர்ச்சியடைந்த நபராக காட்ட உதவும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Religion quotes in Tamil


  • அறம் என்பது உங்களுக்கு என்ன சொல்லப்பட்டாலும் சரியானதைச் செய்வது. மதம் என்பது எது சரியாக இருந்தாலும் உங்களுக்கு சொல்லப்பட்டதை செய்வது. --ஹென்றி லூயிஸ் மென்கென்


  • இந்த உலகம் இரண்டு வகையான மனிதர்களைக் கொண்டுள்ளது, மதம் இல்லாத புத்திசாலிகள், மற்றும் புத்திசாலித்தனம் இல்லாத மதவாதிகள். --அபு அல்-அலா அல்-மாரி


  • ஒரு நபரின் மதக் கருத்துக்கள் உங்கள் சொந்த கருத்துடன் ஒத்துப்போகவில்லை என்றாலும் கூட அவரை நேசியுங்கள். --பெர்சி பைஷ் ஷெல்லி


  • மதத்தின் இரட்டை சகோதரி சுயநலம். --பெர்சி பைஷ் ஷெல்லி


  • ஒருவன் மதவாதி என்று நான் கேள்விப்பட்டால், நான் அவன் ஒரு அயோக்கியன் என்ற முடிவுக்கு வருகிறேன். --டேவிட் ஹியூம்


  • அனைத்து மதங்களும் பலரின் பயத்தினாலும் சிலரின் புத்திசாலித்தனத்தினாலும் உருவாக்கப்பட்டவை. --ஸ்டெண்டால்


  • மதத்தால் மனித குலத்தை சீர்திருத்த முடியாது ஏனெனில் மதம் என்பது ஒரு அடிமைத்தனம். --ராபர்ட் கிரீன் இங்கர்சால்


  • அனைத்து மதங்களும் ஒரே மாதிரியானவை - கட்டுக்கதைகளாலும் புராணங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. --தாமஸ் ஜெபர்சன்


  • மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நல்லவர்கள் நல்லதைச் செய்வார்கள், தீயவர்கள் தீயதைச் செய்வார்கள். ஆனால் நல்லவர்கள் தீயதைச் செய்வதற்கு மதம் தேவை. --ஸ்டீவன் வெயின்பெர்க்


  • மதம் என்பது ஒரு போதைப்பொருள் போன்றது, அது சிந்தனை செய்யும் மனதை அழிக்கிறது. --ஜார்ஜ் கார்லின்


  • வானத்தில் ஒரு கண்ணுக்கு தெரியாத மனிதன் வாழ்கிறான் என்று மதம் உண்மையில் மக்களை நம்ப வைத்துள்ளது. --ஜார்ஜ் கார்லின்


  • அறிவு முடிவடையும் இடத்தில், மதம் தொடங்குகிறது. --பெஞ்சமின் டிஸ்ரேலி


  • மதம் என்பது ஒரு நரம்பியல் கோளாறு என்று நான் நினைக்கிறேன். --பில் மஹர்


  • ஒரு சிறிய தத்துவம் மனிதனின் மனதை நாத்திகத்தின் பக்கம் சாய்க்கிறது, ஆனால் தத்துவத்தின் ஆழம் மனிதர்களின் மனதை மதத்தின்பால் கொண்டு வருகிறது. --பிரான்சிஸ் பேகன்


  • மதம் இல்லாத அறிவியல் ஒரு நொண்டி, அறிவியல் இல்லாத மதம் ஒரு குருடு. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


  • மதம் என்பது சாதாரண மக்களால் உண்மையாகவும், புத்திசாலிகளால் பொய்யாகவும், ஆட்சியாளர்களால் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது. --செனிக்கா


  • பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவி செய்யும் கரங்கள் சிறந்தவை. --ராபர்ட் கிரீன் இங்கர்சால்


  • தங்கள் மதக் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் நபர்கள் பெரும்பாலும், உங்களுடைய மதக் கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதை விரும்புவதில்லை. --டேவ் பேரி


  • நல்லதைச் செய்யும் போது நான் நன்றாக உணர்கிறேன், கெட்டதைச் செய்யும் போது நான் மோசமாக உணர்கிறேன், அதுவே என் மதம். --ஆபிரகாம் லிங்கன்


  • மதம் என்பது ஒரு ஜோடி காலணிகளைப் போன்றது. உங்களுக்கு பொருந்தக்கூடிய ஒன்றைக் கண்டுபிடியுங்கள், ஆனால் என்னை உங்கள் காலணிகளை அணிய வைக்காதீர்கள். --ஜார்ஜ் கார்லின்


  • மதம் என்பது மனிதகுலத்திற்கு ஒரு சாபமாக இருந்துகொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். --ஹென்றி லூயிஸ் மென்கென்