மனதைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

மனதைப் பற்றிய பொன்மொழிகள்

Mind

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நம் கட்டுப்பாட்டில் உள்ளன ஆனால் நம்மயே அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு சூட்சுமமான, எளிதில் விளக்கிவிடமுடியாத உறுப்புதான் இந்த மனம். பல நூற்றாண்டுகளாக ஞானிகளும் துறவிகளும் நாட்டை துறந்து, சொந்த பந்தங்களை துறந்து ,காட்டில் வசித்து, உடலை வருத்தி பல தவங்களை மேற்கொண்டது கூட இந்த மனம் எனும் மாயக்காரனை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரவே.

உங்களால் உங்கள் மனதை ஆள முடிந்தால் உங்களால் இந்த உலகை கூட ஆள முடியும். இந்த உலகின் தோன்றிய எந்த ஒரு கண்டுபிடிப்பும் ஒரு மனதில் தோன்றிய எண்ணங்களின் வருவிளைவே ஆகும்.  மேலும் இந்த உலகில் உண்டான பேரழிகளுக்கும் பெரும் போர்களுக்கும் கூட காரணம் ஒரு மனதில் உண்டான எண்ணங்களே. ஒரு குதிரையை கடிவாளம் கொண்டு கட்டுப்படுத்துவது போல உங்கள் மனதையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் உங்களால் சாத்தியமற்றது என்று எதுவுமில்லை.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Mind quotes in Tamil


  • மனிதர்களால் தங்கள் மனப்பான்மையை மாற்றுவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். --வில்லியம் ஜேம்ஸ்


  • நீங்கள் ஒரு மனிதனின் மனதை அறிய விரும்பினால், அவனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள். --ஜோஹன் வொல்ப்காங் வான் கோதே


  • சிறந்த கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் பெரும்பாலும் பல மனங்களின் கூட்டிணைப்பால் உருவானது. --அலெக்சாண்டர் கிரஹாம் பெல்


  • உங்கள் மனதை வெறுமையாக்குங்கள், தண்ணீரைப் போன்று உருவமற்று வடிவமற்று இருங்கள். நீங்கள் தண்ணீரை ஒரு கோப்பையில் ஊற்றினால் அது கோப்பையாக மாறும். நீங்கள் தண்ணீரை ஒரு போத்தலில் ஊற்றினால் அது போத்தலாக மாறும். நீங்கள் அதை ஒரு குடுவையில் ஊற்றினால் அது குடுவையாக மாறும். தண்ணீரால் தடைகளை கடந்து செல்லவும் முடியும் அல்லது அதை உடைத்து எறியவும் முடியும். தண்ணீரைப் போன்று இருங்கள் நண்பா. --புரூஸ் லீ 


  • உடல் உழைப்பு உடலைப் பலப்படுத்துவதைப் போலவே, சோதனைகளும் மனதைப் பலப்படுத்துகின்றன. --செனிக்கா


  • உலகம் ஒரு கண்ணாடி போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த எண்ணங்களின் உண்மையான பிரதிபலிப்பைக் காட்டுகிறது. உங்கள் மனதை ஆளுங்கள் இல்லையெனின் அது உங்களை ஆளும். --கெளதம புத்தர்


  • உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.  --கெளதம புத்தர்


  • அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனத்தால் அனைத்தையும் மாற்ற முடியும். --கெளதம புத்தர்


  • வானில், கிழக்கு மற்றும் மேற்கு என்ற பாகுபாடு இல்லை, மக்கள் தங்கள் மனதினால் வேறுபாடுகளை உருவாக்கி, பின்னர் அவற்றை உண்மை என்று நம்புகிறார்கள். --கெளதம புத்தர்


  • மனமே எல்லை. உங்களால் எதையாவது செய்ய முடியும் என்ற உண்மையை மனம் கற்பனை செய்யும் வரை, நீங்கள் 100 சதவிகிதம் உண்மையிலேயே அதை நம்பும் வரை, உங்களால் அதைச் செய்ய முடியும். --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்


  • உடல் மிகவும் முக்கியமானது, ஆனால் உடலை விட மனம் முக்கியமானது. --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்


  • உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். வேறு எண்ணங்கள் உங்கள் மனதில் நுழைய அனுமதிக்காதீர்கள். நீங்கள் அவற்றை அனுமதித்தால், வேறு விடயங்களில் நீங்கள் கவனம் செலுத்தினால் அவை உங்களை உங்கள் இறுதி இலக்கைவிட்டு வெளியேற்றிவிடும். --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்


  • உள்ளுணர்வுள்ள மனம் ஒரு புனிதமான பரிசு மற்றும் பகுத்தறிவுள்ள மனம் ஒரு உண்மையுள்ள ஊழியர். நாங்கள் ஊழியரை மதிக்கும் மற்றும் பரிசை மறந்துவிட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


  • வெற்றியானது ஆர்வம், மனதை ஒருமுகப்படுத்தல், விடாமுயற்சி மற்றும் சுய மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து வருகிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


  • மதம் என்பது ஒரு போதைப்பொருள் போன்றது, அது சிந்தனை செய்யும் மனதை அழிக்கிறது. --ஜார்ஜ் கார்லின்


  • ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்ந்து, அவனது மனதால் அறியக்கூடிய பல உண்மைகளை அறியாமல் கூட கடைசியில் இறக்கலாம். --ஜான் லாக்


  • பயிற்சி மட்டுமே மனதின் சக்திகளையும், உடலின் சக்திகளையும் அவற்றின் பரிபூரண நிலைக்கு கொண்டுவருகிறது. --ஜான் லாக்


  • உங்கள் மனதின் மீதே உங்களுக்கு அதிகாரம் உள்ளது, வெளிப்புற நிகழ்வுகள் மீது அல்ல. இதை உணர்ந்து கொண்டால், நீங்கள் வலிமையடைவீர்கள். --மார்கஸ் அரேலியஸ்


  • நீங்கள் நினைக்கும் விடயங்கள் உங்கள் மனதின் தரத்தை தீர்மானிக்கிறது. --மார்கஸ் அரேலியஸ்


  • வேறு யாரோ ஒருவரது மனதில் நடக்கும் எதுவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. --மார்கஸ் அரேலியஸ்


  • மக்களின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ள, நீங்கள் அவர்களின் மனதை கவனிக்க வேண்டும். --மார்கஸ் அரேலியஸ்


  • ஒரு சிறிய தத்துவம் மனிதனின் மனதை நாத்திகத்தின் பக்கம் சாய்க்கிறது, ஆனால் தத்துவத்தின் ஆழம் மனிதர்களின் மனதை மதத்தின்பால் கொண்டு வருகிறது. --பிரான்சிஸ் பேகன்


  • நீங்கள் என்னை சங்கிலியால் பிணைக்கலாம், நீங்கள் என்னை சித்திரவதை செய்யலாம், நீங்கள் இந்த உடலை கூட அழிக்கலாம், ஆனால் உங்களால் ஒருபோதும் என் மனதை சிறைப்படுத்த முடியாது. --மகாத்மா காந்தி


  • நான் யாரையும் அவர்களின் அழுக்கு கால்களால் என் மனதில் நடக்க விடமாட்டேன். --மகாத்மா காந்தி


  • வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதில் உங்கள் மனதை நிலைநிறுத்துங்கள், உங்களுக்கு என்ன வேண்டாமோ அதில் அல்ல. --நெப்போலியன் ஹில்


  • பேசுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள், ஏனெனில் உங்கள் வார்த்தைகளும் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் மற்றொருவரின் மனதில் வெற்றிக்கான அல்லது தோல்விக்கான விதையை விதைக்கும். --நெப்போலியன் ஹில்


  • உங்கள் எண்ணங்கள் ஒன்றின் மீது மட்டுமே உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. இந்த தெய்வீகப் பரிசுதான் உங்கள் விதியைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி. உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தவறினால், நீங்கள் வேறு எதையுமே கட்டுப்படுத்த மாட்டீர்கள். --நெப்போலியன் ஹில்


  • எதிர்மறை எண்ணங்களுக்கு உங்கள் மனக்கதவை மூடும்போது, ​​உங்களுக்கு வாய்ப்பின் கதவு திறக்கிறது. --நெப்போலியன் ஹில்


  • ஒரே நேரத்தில் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் இரண்டும் மனதை ஆக்கிரமிக்க முடியாது. --நெப்போலியன் ஹில்


  • நேர்மறை உணர்ச்சிகள் உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. --நெப்போலியன் ஹில்


  • கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும். --மால்கம் ஃபோர்ப்ஸ்


  • தியானம் என்பது உங்கள் மனதை அமைதிப்படுத்துவதற்கான ஒரு வழி அல்ல. அது ஏற்கனவே அங்கே இருக்கும் அமைதிக்குள் நுழைவதற்கான ஒரு வழியாகும். --தீபக் சோப்ரா


  • உடல் மனதை உருவாக்குவதில்லை, மனம்தான் உடலை உருவாக்குகிறது. --தீபக் சோப்ரா


  • தியானம் என்பது மனதைத் தூய்மைப்படுத்துவதற்கும் அமைதிப்படுத்துவதற்குமான ஒரு முக்கிய வழியாகும். --தீபக் சோப்ரா


  • அன்பும் இரக்கமும் நிறைந்த இதயமே மன வலிமை, மன உறுதி, மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கான முக்கிய ஆதாரமாகும். --தலாய் லாமா


  • வெற்றி என்பது மனதின் நிலை. நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாரளாக நினைக்கத் தொடங்குங்கள். --ஜாய்ஸ் பிரதர்ஸ்


  • சரியான மனநிலை கொண்ட மனிதன், தனது இலக்கை அடைவதை எதனாலும் தடுக்க முடியாது, தவறான மனநிலை கொண்ட மனிதனுக்கு இந்தப் பூமியில் எதனாலும் உதவ முடியாது. --தாமஸ் ஜெபர்சன்


  • யதார்த்தம் மனதினால் உருவாக்கப்பட்டது, நம் மனதை மாற்றுவதன் மூலம் நம் யதார்த்தத்தை மாற்ற முடியும். --பிளேட்டோ


  • யாருடைய மனம் தன்னைத்தானே கவனிக்கின்றதோ அவரே புத்திசாலி. --ஆல்பர்ட் காமுஸ்


  • ஒரு புத்திசாலியால் தன் மனதை மாற்றிக்கொள்ள முடியும், பிடிவாத குணம் உள்ளவனால் ஒருபோதும் முடியாது. --இம்மானுவேல் கான்ட்


  • கற்றலை நிறுத்தும் எவரும், இருபது அல்லது எண்பது வயதினராக இருந்தாலும் வயதானவரே. கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள். வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயம் உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான். --ஹென்றி ஃபோர்ட்


  • மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, மனதை மாற்ற முடியாதவர்களால் எதையும் மாற்ற முடியாது. --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா


  • நாங்கள் மனரீதியாகவும் ஆன்மீகரீதியாகவும் வளர்வது பிரச்சனைகளால் மட்டுமே. --எம். ஸ்காட் பெக்


  • உங்கள் சொந்த மனதை அறிந்துகொள்வதே எங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வாகும். --தப்டன் யெஷே


  • எல்லாப் பிரச்சனைகளும் மனதின் மாயைகளே. --எக்கார்ட் டோல்


  • மன அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், நம்மைத் தவிர வேறு யாராலும் நம் மனதை விடுவிக்க முடியாது. --பாப் மார்லி


  • உங்கள் மனதைச் சிக்கலாக்காதீர்கள். வெறுப்பு, கேலி மற்றும் பொறாமை ஆகியவற்றிலிருந்து தப்பி ஓடுங்கள். --பாப் மார்லி


  • உங்களுக்காக பெரிதாக எதையும் செய்யாதவர்கள், உங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த அனுமதிப்பதை நிறுத்துங்கள். --வில் ஸ்மித்