மார்கஸ் அரேலியஸ்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

மார்கஸ் அரேலியஸ்ஸின் பொன்மொழிகள்

Marcus Aurelius

உரோமப் பேரரசரும் மற்றும் புகழ் பெற்ற தத்துவஞானிகளில் ஒருவரும்தான் மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius). ஐந்து நல்ல பேரரசர்கள் என்று அழைக்கப்படும் பேரரசர்களில் கடைசி அரசன் இவராவார்.

இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது தந்தை இறந்துவிட்டதால். இவரது தாயார் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்பட்டார். மேலும் மார்கஸ் அரேலியஸ் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராவார்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Marcus Aurelius quotes in Tamil


  • நாம் அனைவரும் மற்றவர்களை விட நம்மை நாம் அதிகமாக நேசிக்கிறோம், ஆனால் நம்முடைய கருத்துக்களை விட மற்றவர்களின் கருத்துக்களைப் பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம்.


  • ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று வாதிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்களே ஒரு நல்ல மனிதனாக இருங்கள்.


  • உங்கள் ஒட்டுமொத்த எண்ணங்களின் வெளிப்பாடே உங்கள் வாழ்க்கை.


  • உங்கள் மனதின் மீதே உங்களுக்கு அதிகாரம் உள்ளது, வெளிப்புற நிகழ்வுகள் மீது அல்ல. இதை உணர்ந்து கொண்டால், நீங்கள் வலிமையடைவீர்கள்.


  • உங்கள் நேரத்திற்கு ஒரு வரையறை உண்டு. ஒவ்வொரு கணத்தையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்.


  • நீங்கள் நினைக்கும் விடயங்கள் உங்கள் மனதின் தரத்தை தீர்மானிக்கிறது.


  • மற்றவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருங்கள், உங்களுடன் நீங்கள் கண்டிப்புடன் இருங்கள்.


  • மரணம் நம் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது, ஒரு மனிதனால் செய்யக்கூடியதெல்லாம் திரும்பிச் சிரிப்பதுதான்.


  • யாராவது என்னை இகழ்ந்தால், அது அவருடைய பிரச்சனை.  நான் இழிவான எதையும் செய்யாமலும் பேசாமலும் இருக்க வேண்டும் என்பதே என் கவலை.


  • வேறு யாரோ ஒருவரது மனதில் நடக்கும் எதுவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்காது.


  • நம்மை கோபப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் விடயங்களை விட நமது கோபமும் எரிச்சலும் நமக்கு அதிக தீங்கு விளைவிக்கும்.


  • நம் எண்ணங்கள் உருவாக்குவதுதான் நம் வாழ்க்கை.


  • பிரபலமாக இருக்க விரும்புவோரின் மகிழ்ச்சி மற்றவர்களைச் சார்ந்துள்ளது.


  • நாம் சொல்வதிலும் செய்வதிலும் பெரும்பாலானவை அவசியமற்றவை. உங்களால் அதை தவிர்க்க முடிந்தால், உங்களுக்கு அதிக நேரமும், அதிக அமைதியும் கிடைக்கும். ஒவ்வொரு கணமும் "இது அவசியமானதா" என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.


  • மக்களின் உண்மையான குணத்தை புரிந்து கொள்ள, நீங்கள் அவர்களின் மனதை கவனிக்க வேண்டும்.


  • ஒரு நபரின் வாழ்க்கை அவரது கற்பனையின் நிறத்தில் வண்ணம் பூசப்படுகிறது.


  • ஒரு மனிதனின் உண்மையான மகிழ்ச்சி, அவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வதே.


  • எந்தவொரு மனிதனுக்கும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாத எதுவும் நேராது.


  • உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது.