மனிதர்களைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
மனிதர்களைப் பற்றிய பொன்மொழிகள்
மனிதன் ஒரு பரிணாமமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு படைப்பாக இருந்தாலும் சரி மனிதன் எப்பொழுதும் ஒரு விசித்திரமான விலங்கு என்பது மட்டும் முற்றிலும் உண்மை. நீங்கள் இந்த மனிதப் பிறவியை வரமாக நினைக்கலாம் அல்லது சாபமாகக் கூட நினைக்கலாம் ஆனாலும் நமக்குத் தெரிந்து இந்த பிரபஞ்சத்தில் மனிதனை விட சிறந்த ஒரு படைப்பை நாம் என்னும் கண்டுபிடிக்கவில்லை.
இந்த உலகில் உள்ள எந்த விலங்கின் நடத்தைகளையும் நம்மால் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும் ஆனால் ஒரு மனிதன் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வான் என்பதை கணிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இருந்தபோதிலும் சமூக விலங்கான நாம் நம் வாழ்வை இந்த உலகின் நிலைநிறுத்திக்கொள்ள மனிதனின் இயல்புகளை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Human quotes in Tamil
- இரண்டு விடயங்கள் மட்டுமே எல்லையற்றவை, இந்த பிரபஞ்சம் மற்றும் மனிதனின் முட்டாள்தனம். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- மனித இயல்பைப் பற்றி எனக்குத் தெரிந்த மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், நாம் அனைவரும் வாழ்வதைத் தள்ளிப் போட முனைகிறோம். இன்று நம் ஜன்னல்களுக்கு வெளியே பூக்கும் ரோஜாக்களை ரசிக்காமல், அடிவானத்தில் ஏதோ ஒரு மந்திர ரோஜா தோட்டத்தை கனவு காண்கிறோம். --டேல் கார்னகி
- இயற்கையில் ஒரு அருவருப்பான கம்பளிப்பூச்சி ஒரு அழகான பட்டாம்பூச்சியாக மாறும். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை இது நேர்மாறானது: ஒரு அழகான பட்டாம்பூச்சி ஒரு அருவருப்பான கம்பளிப்பூச்சியாக மாறும். --ஆண்டன் செக்கோவ்
- நாம் அனைவருக்கும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள். நீங்கள் இன்னொரு மனிதனை வெறுத்தால், நீங்கள் உங்களில் ஒரு பகுதியை வெறுக்கிறீர்கள். --எல்விஸ் பிரெஸ்லி
- மனித இயல்பைப் பற்றி ஒருவருக்குத் தெரிந்த ஒரே விடயம் அது மாறுகிறது என்பது மட்டுமே. --ஆஸ்கார் வைல்ட்
- மனிதர்கள் மூன்று வெவ்வேறு திறன்களைக் கொண்டவர்கள்: ஒருவர் உள்ளுணர்வால் புரிந்துகொள்கிறார், மற்றொருவர் விளக்கினால் புரிந்துகொள்கிறார், மூன்றாமவர் தானாகவும் புரிந்து கொள்வதில்லை விளக்கினாலும் புரிந்து கொள்வதில்லை. முதலாமவர் சிறந்தவர், இரண்டாமவர் பாராட்டுக்குரியவர், மூன்றாமவர் முற்றிலும் பயனற்றவர். --நிக்கோலோ மாக்கியவெல்லி
- மனிதர்கள் இரண்டு முக்கிய தூண்டுதல்களால் இயக்கப்படுகிறார்கள். ஒன்று அன்பினால் அல்லது பயத்தால். --நிக்கோலோ மாக்கியவெல்லி
- மனிதர்கள் பொதுவாக யதார்த்தத்தை விட வெளித்தோற்றத்தை வைத்தே அதிகமாக மதிப்பிடுகிறார்கள். எல்லா மனிதர்களுக்கும் கண்கள் உண்டு, ஆனால் சிலருக்கே ஊடுருவிப் பார்க்கும் பாக்கியம் உண்டு. --நிக்கோலோ மாக்கியவெல்லி
- மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது. --அன்னை தெரேசா
- மனிதர்களான நாம் விசித்திரமான உயிரினங்கள், நமக்காக சிந்திக்கும் உரிமையை இன்னும் நாமே வைத்திருக்கிறோம். --மர்லின் மன்றோ
- கிட்டத்தட்ட எல்லா மனிதர்களாலும் துன்பத்தைத் தாங்க முடியும், ஆனால் நீங்கள் ஒரு மனிதனின் குணத்தை மதிப்பிட விரும்பினால், அவனுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள். --ஆபிரகாம் லிங்கன்
- ஒரு மனிதனின் மேன்மையை எது அவனைக் கோபப்படுத்துகிறது என்பதை வைத்துக் கூற முடியும். --ஆபிரகாம் லிங்கன்
- சரியான ஒன்றுக்காக துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். நீதிக்கு துணைநிற்க மறுக்கும்போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். உண்மைக்கு துணைநிற்க மறுக்கும் போது ஒரு மனிதன் இறந்துவிடுகிறான். --மார்டின் லூதர் கிங்
- அமைதியான மனிதர்கள் சத்தமான மனங்களைக் கொண்டவர்கள். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
- நாங்கள் ஒரு சராசரி நட்சத்திரத்தின், ஒரு சிறிய கிரகத்தில் வசிக்கும், குரங்குகளை விட மேம்பட்ட இனமாகும். ஆனால் எங்களால் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். இதுவே எங்களை மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக மாற்றுகிறது. --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
- பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- ஒரு மேசை, ஒரு கதிரை, ஒரு கிண்ணம் நிறைய பழங்கள் மற்றும் ஒரு வயலின், ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேறு என்ன வேண்டும்?. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- இந்த உலகம் இரண்டு வகையான மனிதர்களைக் கொண்டுள்ளது, மதம் இல்லாத புத்திசாலிகள், மற்றும் புத்திசாலித்தனம் இல்லாத மதவாதிகள். --அபு அல்-அலா அல்-மாரி
- மனிதர்களின் செயல்கள் அவர்களின் எண்ணங்களின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள். --ஜான் லாக்
- ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்ந்து, அவனது மனதால் அறியக்கூடிய பல உண்மைகளை அறியாமல் கூட கடைசியில் இறக்கலாம். --ஜான் லாக்
- ஒரு நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று வாதிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். நீங்களே ஒரு நல்ல மனிதனாக இருங்கள். --மார்கஸ் அரேலியஸ்
- மரணம் நம் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது, ஒரு மனிதனால் செய்யக்கூடியதெல்லாம் திரும்பிச் சிரிப்பதுதான். --மார்கஸ் அரேலியஸ்
- எந்தவொரு மனிதனுக்கும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாத எதுவும் நேராது. --மார்கஸ் அரேலியஸ்
- ஒரு மனிதனின் உண்மையான மகிழ்ச்சி, அவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வதே. --மார்கஸ் அரேலியஸ்
- மனிதன் ஒரு பேரம் பேசும் விலங்கு, வேறு எந்த விலங்கும் இதைச் செய்யாது. எந்த நாயும் மற்றொரு நாயுடன் எலும்புகளை பரிமாறிக்கொள்ளாது. --ஆடம் ஸ்மித்
- மனிதர்கள் பணத்தை விரும்புவது பணத்துக்காக அல்ல, அவர்கள் அதைக் கொண்டு வாங்கக் கூடியவற்றிற்காக. --ஆடம் ஸ்மித்