ஆடம் ஸ்மித்தின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஆடம் ஸ்மித்தின் பொன்மொழிகள்

Adam Smith

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவஞானியும் மற்றும் பொருளாதார நிபுணரும்தான் ஆடம் ஸ்மித் (Adam Smith). இவரே "பொருளியலின் தந்தை" எனவும் "முதலாளித்துவத்தின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார்.

பொருளியல் நிபுணரான ஆடம் ஸ்மிதே அரசியல் பொருளாதாரத்திற்கு முன்னோடியாவார். மேலும் இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். இவரின் "நாடுகளின் செல்வம்" எனும் நூல் தற்கால பொருளியலின் மிக முக்கியமான நூலாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Adam Smith quotes in Tamil


  • முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உங்களைத்தான். தன்னை அறிந்த ஒரு மனிதன் தன்னை விட்டு வெளியில் வந்து, ஒரு பார்வையாளனைப் போல தனது சொந்த எதிர்வினைகளைப் பார்க்க முடியும்.


  • தனிப்பட்ட இலட்சியம் பொது நன்மைக்கும் உதவுகிறது.


  • ஒரு சமூகத்தின் பெரும் பகுதியினர் ஏழைகளாகவும் துன்பத்திலும் இருக்கும் போது. எந்தவொரு சமூகமும் நிச்சயமாக செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது.


  • குற்றவாளிகளுக்குக் கருணை காட்டுவது அப்பாவிகளுக்குக் கொடுமைபண்ணுவதாகும்.


  • மனிதன் ஒரு பேரம் பேசும் விலங்கு, வேறு எந்த விலங்கும் இதைச் செய்யாது. எந்த நாயும் மற்றொரு நாயுடன் எலும்புகளை பரிமாறிக்கொள்ளாது.


  • எல்லா பணமும் நம்பிக்கை சார்ந்த விடயம்.


  • எங்கெல்லாம் அதிக சொத்து இருக்குமோ அங்கெல்லாம் அதிக ஏற்றத்தாழ்வு இருக்கும்.


  • கற்றறிந்தவர்கள் தங்கள் கற்பனைக் கருத்துக்களின் ஒத்திசைவைப் பாதுகாப்பதற்காக தங்கள் புலன்களின் ஆதாரங்களை புறக்கணிக்கிறார்கள்.


  • பெண்கள் விளையாடும் விளையாட்டு ஆண்கள்.


  • சமுதாயத்தின் ஒரு பகுதியினருக்கு மட்டுமே நன்மை பயக்கும் செலவில் முழு சமூகமும் பங்களிக்க வேண்டும் என்பது நியாயமற்றது.


  • மனிதர்கள் பணத்தை விரும்புவது பணத்துக்காக அல்ல, அவர்கள் அதைக் கொண்டு வாங்கக் கூடியவற்றிற்காக.


  • பாதுகாப்பு செல்வச் செழிப்பை விட மேலானது.


  • அடிமைகள் செய்யும் வேலைகளை விட சுதந்திரமானவர்கள் செய்யும் வேலைகள் இறுதியில் மலிவானவை என்று நான் நம்புகிறேன்.


  • அனைத்து உற்பத்திகளினதும் ஒரே முடிவும் நோக்கமும் நுகர்வுதான்.


  • நாம் நம்மை மதிப்பது போல் நம்மை மதிக்கும் ஒரு நபரைக் கண்டறிவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.


  • பொருட்கள் பணத்தை வாங்குவதை தவிர வேறு பல நோக்கங்களுக்கும் பயன்படும், ஆனால் பணம் பொருட்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படாது.