வாழ்க்கையைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
வாழ்க்கையைப் பற்றிய பொன்மொழிகள்
நீங்கள் உங்கள் இலட்சியத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கலாம் அல்லது உங்கள் குடும்பத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை எதற்காக அர்ப்பணித்திருந்தாலும் நீங்கள் செல்லும் பாதையில் வரும் சிறு சிறு விடயங்களையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது ஒருவழிப்பாதையில் பயணிப்பதைப் போன்றது. கடந்து வந்து விட்ட பிறகு கவலைப்பட்டு பயனில்லை.
உங்களுக்கு மறுபிறப்பு மேல் நம்பிக்கை இல்லாத பட்சத்தில் இந்த வாழ்க்கை உங்களுக்கு கிடைத்த ஒரு இறுதி வாய்ப்பு. என்னும் தாமதமாகவில்லை கடந்த கால தவறுகளை மறந்துவிடுங்கள். அதை மாற்ற நம்மால் முடியாது ஆனால் நம் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் சரி இன்றிலிருந்து வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். உயிரோடு இருப்பதற்கும் வாழ்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நம்மில் பலரும் வெறுமனே உயிரோடு உள்ளோமே தவிர என்னும் நம் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவில்லை. இன்றிலிருந்து வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Life quotes in Tamil
- புத்திசாலிகளுக்கு வாழ்க்கை ஒரு கனவு, முட்டாள்களுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு, பணக்காரர்களுக்கு வாழ்க்கை ஒரு நகைச்சுவை, ஏழைகளுக்கு வாழ்க்கை ஒரு சோகம். --ஷோலெம் அலிச்செம்
- உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது. --மார்கஸ் அரேலியஸ்
- இந்த கணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். இந்த கணமே உங்கள் வாழ்க்கை. --உமர் கயாம்
- பள்ளியில் உங்களுக்கு முதலில் பாடம் கற்பிக்கப்படுகிறது, பின்னர் பரீட்சை வைக்கப்படுகிறது. வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பாடத்தை கற்றுத்தரும் பரீட்சை வைக்கப்படுகிறது. --டாம் போடெட்
- நாங்கள் எப்பொழுதும் எங்கள் வாழ்நாள் குறைவாக உள்ளது என்று புலம்புகிறோம், ஆனால் இந்த வாழ்க்கை முடிவே இல்லாதது என்பது போல் செயற்படுகிறோம். --செனிக்கா
- ஒரு கணத்தால் ஒரு நாளை மாற்ற முடியும், ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும், ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும். --கெளதம புத்தர்
- சிலர் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாக வருகிறார்கள். சிலர் உங்கள் வாழ்க்கையில் பாடங்களாக வருகிறார்கள். --அன்னை தெரேசா
- நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும். --கெளதம புத்தர்
- சில நேரங்களில் வாழ்வது கூட துணிச்சலான செயலாகிறது. --செனிக்கா
- எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விடயங்களுக்காக கவலைப்பட வேண்டும். --கெளதம புத்தர்
- வாழ்க்கையே உங்கள் ஆசிரியர், நீங்கள் எப்போதும் கற்கும் நிலையிலேயே இருக்கிறீர்கள். --புரூஸ் லீ
- வேலை உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் தருகிறது, அது இல்லாமல் வாழ்க்கை வெறுமையானது. --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
- ஒரு கதையை போலவே வாழ்க்கையும் கூட அது எவ்வளவு நீளமானது என்பது முக்கியமல்ல. அது எவ்வளவு சிறப்பானது என்பதே முக்கியமானது. --செனிக்கா
- உங்கள் கவனத்தைப் போட்டியிடுவதிலிருந்து பங்களிப்புச்செய்வதற்கு நகர்த்தும்போது, வாழ்க்கை கொண்டாட்டமாக மாறுகிறது. மனிதர்களைத் தோற்கடிக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்களின் இதயங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள். --கெளதம புத்தர்
- வாழ்க்கை நிகழ்காலத்தில் மட்டுமே நிகழ முடியும். நிகழ்காலத்தை நீங்கள் இழந்தால். வாழ்க்கையை இழக்கிறீர்கள். --கெளதம புத்தர்
- சில நேரங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் கல்லால் அடிக்கும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். --ஸ்டீவ் ஜாப்ஸ்
- நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணையுங்கள், மக்களுடனோ அல்லது பொருட்களுடனோ அல்ல. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- வாழ்க்கை ஒரு வாய்ப்பு, அதிலிருந்து பயனடையுங்கள். வாழ்க்கை ஒரு அழகு, அதைப் போற்றுங்கள். வாழ்க்கை ஒரு கனவு, அதைப் புரிந்து கொள்ளுங்கள். --அன்னை தெரேசா
- வாழ்க்கை எங்களைக் கீழே தள்ளிவிடும், ஆனால் மீண்டும் எழுந்து நிற்க வேண்டுமா இல்லையா என்பதை எங்களால் தேர்வு செய்ய முடியும். --ஜாக்கி சான்
- இலகுவான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்யாதீர்கள், கடினமான வாழ்க்கையை தாங்கிக்கொள்வதற்கான வலிமைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். --புரூஸ் லீ
- என் வாழ்க்கை ஒரு திரைப்படமாக இருந்தால், யாரும் அதை நம்ப மாட்டார்கள். --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- வாழ்க்கை என்பது உங்களை நீங்களே கண்டுபிடிப்பதைப் பற்றியது அல்ல, வாழ்க்கை என்பது உங்களை நீங்களே உருவாக்குவதைப் பற்றியது. --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
- சில நேரங்களில் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அன்பு மற்றும் அக்கறையே போதுமானது. --ஜாக்கி சான்
- வாழ்க்கை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அங்கே உங்களால் செய்யக்கூடிய மற்றும் வெற்றியடையக்கூடிய ஒன்று எப்போதும் இருக்கும். --ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங்
- அற்புதங்களுக்காக காத்திருக்காதீர்கள், உங்கள் முழு வாழ்க்கையே ஒரு அற்புதம் தான். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- உங்கள் ஒட்டுமொத்த எண்ணங்களின் வெளிப்பாடே உங்கள் வாழ்க்கை. --மார்கஸ் அரேலியஸ்
- நம் எண்ணங்கள் உருவாக்குவதுதான் நம் வாழ்க்கை. --மார்கஸ் அரேலியஸ்
- ஒரு நபரின் வாழ்க்கை அவரது கற்பனையின் நிறத்தில் வண்ணம் பூசப்படுகிறது. --மார்கஸ் அரேலியஸ்