ஜான் லாக்கின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஜான் லாக்கின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

John Locke

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தத்துவஞானிகளில் ஒருவரும் "தாராளமயத்தின் தந்தை" (father of liberalism) என அழைக்கப்படுபவரும் தான் ஜான் லாக் (John Locke). இவரே இங்கிலாந்தின் முதலாவது அனுபவவாத (Empiricism) கோட்பாட்டாளராகக் கருதப்படுகிறார்.

மனிதனின் அறிவு அவனது பட்டறிவினாலேயே வந்தது. அதாவது நெருப்பு சுடும் என்ற அறிவு அவனை நெருப்பு எற்கனவே சுட்டதனால் தான் வந்தது என்ற கோட்பாடே அனுபவவாத கோட்பாடாகும். மேலும் ஜான் லாக் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


John Locke quotes in Tamil


  • உனக்காகப் பொய் சொல்பவன் உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.


  • பெரியவர்களின் சொற்பொழிவுகளை விட ஒரு குழந்தையின் எதிர்பாராத கேள்விகளில் இருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது.


  • புதிய கருத்துகள் எப்பொழுதும் சந்தேகிக்கப்படுகின்றன மற்றும் பொதுவாக எதிர்க்கப்படுகின்றன.


  • உங்களிடம் இல்லாத விடயங்கள் உங்களிடம் இருப்பதைப் பயன்படுத்துவதைத் தடுக்க விடாதீர்கள்.


  • சட்டம் இல்லாத இடத்தில் சுதந்திரம் இல்லை.


  • எல்லா செல்வங்களிலும் மிகவும் விலைமதிப்பற்றது நமக்கு நம்மீதுள்ள அதிகாரமாகும்.


  • சட்டம் எங்கு முடிகிறதோ, அங்கு கொடுங்கோன்மை தொடங்குகிறது.


  • மனிதர்களின் செயல்கள் அவர்களின் எண்ணங்களின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்.


  • செல்வத்திற்கு ஆயிரம் வழிகள் உள்ளன, ஆனால் சொர்க்கத்திற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உண்டு.


  • பயத்தின் மிகப் பெரிய அடித்தளமே வலிதான் என்பதால், பயம் மற்றும் ஆபத்துக்கு எதிராக குழந்தைகளை வலுப்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்குமான வழி, வலியை அனுபவிக்க அவர்களை பழக்கப்படுத்துவதுதான்.


  • கிளர்ச்சி என்பது மக்களின் உரிமை.


  • நீரூற்றுக்கு அவர்களே விசம் கலந்து விட்டு, நீரோடைகள் ஏன் கசப்பாக இருக்கின்றன என்று பெற்றோர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.


  • இந்த உலகிற்கு எதிரான ஒரே வேலி அதைப் பற்றிய முழுமையான அறிவே.


  • ஒரு மனிதன் நீண்ட காலம் வாழ்ந்து, அவனது மனதால் அறியக்கூடிய பல உண்மைகளை அறியாமல் கூட கடைசியில் இறக்கலாம்.


  • எல்லாச் செல்வங்களும் உழைப்பின் விளைபொருள்.


  • பயிற்சி மட்டுமே மனதின் சக்திகளையும், உடலின் சக்திகளையும் அவற்றின் பரிபூரண நிலைக்கு கொண்டுவருகிறது.


  • குழந்தைகளிடத்தில் இருக்கும் ஆர்வம் என்பது அறிவுக்கான பசியாகும்.


  • உண்மையில் உழைப்புதான் எல்லாவற்றிலும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.


  • மக்கள் எப்போதுமே ஒரே இடத்தில் நடப்பதால், ஒரு பாதை தோன்றுகிறது.


  • இங்குள்ள எந்த மனிதனின் அறிவும் அவனது அனுபவத்தைத் தாண்டிச் செல்ல முடியாது. --ஜான் லாக்