பெர்சி பைஷ் ஷெல்லியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
பெர்சி பைஷ் ஷெல்லியின் பொன்மொழிகள்
இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்தான் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley). வாழ்ந்த காலத்திலேயே இவர் புகழ் அடையாவிட்டாலும், அவர் மறைந்த பின்பு அவரது படைப்புகளுக்காக பெரும் புகழ் அடைந்தார்.
ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லியின் தாக்கம் மிகப் பெரியது. ஓசிமாண்டியாஸ், ஓட் டூ எ வெஸ்ட் விண்ட், டூ எ ஸ்கைலார்க் போன்றவை ஷெல்லியின் புகழ் பெற்ற படைப்புகளில் சிலவாகும். மேலும் பல மேடை நாடகங்களையும் கூட இவர் எழுதியுள்ளார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Percy Bysshe Shelley quotes in Tamil
- ஒரு ஒழுக்கமுள்ள மனிதன் கட்டளையிடுவதுமில்லை, கீழ்ப்படிவதுமில்லை.
- ஒரு நபரின் மதக் கருத்துக்கள் உங்கள் சொந்த கருத்துடன் ஒத்துப்போகவில்லை என்றாலும் கூட அவரை நேசியுங்கள்.
- சகிப்புத்தன்மை ஒரு தகுதி அல்ல, ஆனால் சகிப்பற்றதன்மை ஒரு குற்றம்.
- நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொள்கிறோமோ, நாம் அவ்வளவு அதிகமாக நம் அறியாமையை அறிந்துகொள்கிறோம்.
- மனிதனின் உழைப்பைத் தவிர உண்மையான செல்வம் எதுவும் இல்லை.
- இரத்தம் தோய்ந்த கையை விட கடினமான இதயம் மோசமானது.
- கவிதை என்பது மகிழ்ச்சியான சிறந்த மனதின் சிறந்த மகிழ்ச்சியான தருணங்களின் பதிவு.
- மனிதனாக இருக்க விரும்பும் மனிதன், தன்னைத் தானே ஆள வேண்டும்.
- காதலின் வலி மிகவும் இனிமையானது.
- அன்பு, அழகு மற்றும் மகிழ்ச்சிக்கு, மரணமும் இல்லை மாற்றமும் இல்லை.
- எதிர்காலத்திற்கு பயப்படாதீர்கள், கடந்த காலத்திற்காக அழாதீர்கள்.
- ஆழமான உண்மை உருவமற்றது.
- விசித்திரமான எண்ணங்கள் விசித்திரமான செயல்களை உருவாக்குகின்றன.
- மதத்தின் இரட்டை சகோதரி சுயநலம்.
- ஞானமுள்ளவர்கள் அன்பை விரும்புகிறார்கள், அன்புள்ளவர்கள் ஞானத்தை விரும்புகிறார்கள்.