நிக்கோலோ மாக்கியவெல்லியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
நிக்கோலோ மாக்கியவெல்லியின் பொன்மொழிகள்
இத்தாலியைச் சேர்ந்த அரசியல் இராஜதந்திரியும், எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும் மற்றும் ஒரு அரசியல் ஞானியும்தான் நிக்கோலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli). இவர் எழுதிய தி பிரின்ஸ் ( The Prince) எனும் நூல் உலகப் புகழ் வாய்த இவரின் நூல்களில் ஒன்றாகும்.
இந்தியாவுக்கு எப்படி ஒரு சாணக்கியரோ அது போலவே இத்தாலிக்கு ஒரு நிக்கோலோ மாக்கியவெல்லி. இவரின் தி பிரின்ஸ் எனும் நூல் அரசியல் கோட்பாடாகவே பார்க்கப்படுகிறது. மற்றும் இந்த நூலை இந்த உலகை ஆண்ட மற்றும் ஆள்கின்ற பல தலைவர்களும் படித்ததாக கூறப்படுகிறது.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Niccolo Machiavelli quotes in Tamil
- ஒரு இளவரசன் நரியிடமும் சிங்கத்திடமும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பொறிகளை அடையாளம் காண நரியாகவும், ஓநாய்களை விரட்ட சிங்கமாகவும் இருக்க வேண்டும். வெறுமனே சிங்கமாக மட்டும் செயல்படுபவர்கள் முட்டாள்கள்.
- நிலையான வெற்றியை விரும்பும் எவரும் காலத்திற்கு ஏற்ப தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
- நீங்கள் விரும்பும் போது போர்கள் தொடங்குகின்றன, ஆனால் நீங்கள் விரும்பும் போது அவை முடிவடைவதில்லை.
- அரசியலுக்கும் நல்லொழுக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
- பொறாமையாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ, உங்களுக்கு எதிராக வன்மம் கொண்ட திமிர்பிடித்தவர்களிடம், அடக்கமும் பணிவும் எந்த நன்மையும் தராது, ஆனால் அவை தீங்கு விளைவிக்கும்.
- ஒரு ஆட்சியாளரின் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவதற்கான முதல் முறை, அவரைச் சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பது.
- ரோம் நானூறு ஆண்டுகளாகவும், ஸ்பார்டா எண்ணூறு ஆண்டுகளாகவும் சுதந்திரமாக இருந்தது, இருப்பினும் அவர்களின் குடிமக்கள் எல்லா நேரத்திலும் ஆயுதம் ஏந்தியிருந்தனர், ஆனால் நிராயுதபாணியாக்கப்பட்ட பல அரசுகள் நாற்பது ஆண்டுகளுக்குள் தங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டன.
- சுதந்திரமாக இருக்க விரும்பும் மக்களை அடிமைப்படுத்துவது போல் அடிமையாக இருக்க விரும்பும் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்க முயற்சிப்பதும் கடினமானது மற்றும் ஆபத்தானது.
- மனிதர்கள் மூன்று வெவ்வேறு திறன்களைக் கொண்டவர்கள்: ஒருவர் உள்ளுணர்வால் புரிந்துகொள்கிறார், மற்றொருவர் விளக்கினால் புரிந்துகொள்கிறார், மூன்றாமவர் தானாகவும் புரிந்து கொள்வதில்லை விளக்கினாலும் புரிந்து கொள்வதில்லை. முதலாமவர் சிறந்தவர், இரண்டாமவர் பாராட்டுக்குரியவர், மூன்றாமவர் முற்றிலும் பயனற்றவர்.
- நீங்கள் வெல்லும் ஒரு போர் நீங்கள் செய்த எல்லாத் தவறுகளையும் இல்லாமல் செய்துவிடுகிறது.
- மனிதர்கள் இரண்டு முக்கிய தூண்டுதல்களால் இயக்கப்படுகிறார்கள். ஒன்று அன்பினால் அல்லது பயத்தால்.
- மனிதர்கள் பொதுவாக யதார்த்தத்தை விட வெளித்தோற்றத்தை வைத்தே அதிகமாக மதிப்பிடுகிறார்கள். எல்லா மனிதர்களுக்கும் கண்கள் உண்டு, ஆனால் சிலருக்கே ஊடுருவிப் பார்க்கும் பாக்கியம் உண்டு.
- எதிர்காலத்தை முன்னுணர விரும்புவோர் கடந்த காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் மனிதனால் ஏற்படும் நிகழ்வுகள் எப்பொழுதும் முந்தைய கால நிகழ்வுகளை ஒத்திருக்கும்.
- ஒரு புத்திசாலி எப்பொழுதும் உயர்ந்த மனிதர்கள் தடம் பதித்த பாதைகளைப் பின்தொடர வேண்டும்.
- ஒரு ஏமாற்றுக்காரன் எப்போதும் ஏமாற்றத் தயாராக இருப்பவர்களைக் கண்டுபிடிப்பான்.
- ஒரு புத்திசாலித்தனமான ஆட்சியாளர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதையே சார்ந்திருக்க வேண்டும், மற்றவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதை அல்ல.
- உண்மையைச் சொல்வதால் உங்கள் மனது புண்படாது என்பதை மனிதர்களுக்குப் புரிய வைப்பதைத் தவிர முகஸ்துதியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்கு வேறு வழி இல்லை.
- விருப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில், சிரமங்கள் அதிகமாக இருக்க முடியாது.
- யாரேனும் ஒருவரை அச்சுறுத்தும் மற்றும் அவமதிக்கும் வார்த்தைளை தவிர்ப்பதை மனிதர்களின் மிகுந்த விவேகத்தின் சான்றாக நான் கருதுகிறேன்.
- ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த விடயங்களை ஒருபோதும் அடைய முடியாது.
- ஒருவரின் சொந்த அறியாமையைப் பற்றிய விழிப்புணர்வே புத்திசாலித்தனத்தின் அடையாளமாகும்.
- நிக்கோலோ மாக்கியவெல்லியின் பொன்மொழிகளை முழுமையாகப் படிக்க நமது செயலியை பதிவிறக்குங்கள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.