முட்டாள்தனத்தைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
முட்டாள்தனத்தைப் பற்றிய பொன்மொழிகள்
வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் எந்த ஒரு விடயத்தையும் புத்திசாலித்தனமாக அணுக வேண்டும். ஆனால் புத்திசாலித்தனமாக இருப்பதற்கு புத்திசாலித்தனம் பற்றி மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அதன் மறுபக்கமான முட்டாள்தனத்தையும் (Foolishness) அறிந்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் நாம் புத்திசாலித்தனமாக செயற்படுகிறோம் என்ற நினைப்பில் செயற்படுவோம் ஆனால் இறுதியில்தான் நாம் எவ்வளவு முட்டாள்தனமாக செயற்பட்டோம் என்பது நமக்கே புரியவரும். இந்த உலகில் யாரும் முழுமையான புத்திசாலிகளும் இல்லை, யாரும் முழுமையான முட்டாள்களும் இல்லை என்பதே நிதர்சனம்.
என்று நாம் நம் முட்டாள்தனங்களை விழிப்புணர்வுடன் புரிந்துகொள்ள ஆரப்பிக்கிறோமோ அன்றிலிருந்துதான் நம்மில் ஞானம் துளிர்விட ஆரம்பிக்கும். நம் அறியாமையை ஏற்றுக்கொண்டு ஆறறிவுடன் செயற்பட ஆரம்பிக்கும் போது நமக்கான ஞானக் கதவு திறக்கும்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Foolishness quotes in Tamil
- ஒரு முட்டாள் தனது நண்பர்களிடமிருந்து பெறும் பயனை விட, ஒரு புத்திசாலி தனது எதிரிகளிடமிருந்து அதிக பயன் பெறுகிறார். --பால்டாசர் கிரேசியன்
- புத்திசாலிக்கு வாழ்க்கை ஒரு பிரச்சனை, முட்டாளுக்கு வாழ்க்கை ஒரு தீர்வு. --மார்கஸ் ஆரேலியஸ்
- ஒரு புத்திசாலித்தனமான பதிலில் இருந்து ஒரு முட்டாள் கற்றுக்கொள்வதை விட, ஒரு முட்டாள்தனமான கேள்வியிலிருந்து ஒரு புத்திசாலி அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். --புரூஸ் லீ
- ஒரு முட்டாள்தனமான விடயத்தை ஐம்பது மில்லியன் மக்கள் சொன்னாலும், அது முட்டாள்தனமான விடயம்தான். --அனடோல் பிரான்ஸ்
- ஒரு முட்டாளின் இதயம் அவன் வாயில் உள்ளது, ஆனால் ஒரு புத்திசாலியின் வாய் அவன் இதயத்தில் உள்ளது. --பெஞ்சமின் பிராங்க்ளின்
- முட்டாள் என்பவன் வெறும் முட்டாள்தனமான செயல்களைச் செய்பவன் அல்ல. முட்டாள் என்பவன் தன் முட்டாள்தனத்தைப் பணமாக்கத் தெரியாதவன். --எல்பர்ட் ஹப்பார்ட்
- ஒரு முட்டாள் மட்டுமே எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். --ராபர்ட்சன் டேவிஸ்
- இந்த உலகில் வெற்றிபெற வேண்டுமானால் ஒருவன் முட்டாளைப் போன்று தோற்றமளிக்க வேண்டும், ஆனால் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதை நான் எப்போதும் கவனித்திருக்கிறேன். --மான்டெஸ்கியூ
- ஒரு முட்டாளின் சொர்க்கம் ஒரு புத்திசாலியின் நரகம். --தாமஸ் புல்லர்
- பாம்பு, அரசன், புலி, கொட்டும் குளவி, சிறு குழந்தை, பிறருக்குச் சொந்தமான நாய், முட்டாள் இந்த ஏழு பேரையும் தூக்கத்திலிருந்து எழுப்பக் கூடாது. --சாணக்யா
- ஒரு முட்டாள் தன்னைத்தானே புகழ்கிறான், ஒரு புத்திசாலி முட்டாளைப் புகழ்கிறான். --எட்வர்ட் புல்வர் லிட்டன்
- அழாத இளைஞன் ஒரு காட்டுமிராண்டி, சிரிக்காத முதியவன் ஒரு முட்டாள். --ஜார்ஜ் சாந்தயானா
- ஒரு முட்டாள் உன்னை முத்தமிடவோ, அல்லது ஒரு முத்தம் உன்னை முட்டாளாக்கவோ அனுமதிக்காதே. --ஜோயி ஆடம்ஸ்
- ஒருவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தாலும், அவனைப் போற்றுவதற்கு அவனை விட பெரிய முட்டாள் ஒருவன் எப்போதும் இருப்பான். --நிக்கோலஸ் பொய்லியூ டெஸ்ப்ரேக்ஸ்
- காதல் என்பது முட்டாள்களின் புத்திசாலித்தனம் மற்றும் புத்திசாலிகளின் முட்டாள்தனம். --சாமுவேல் ஜான்சன்
- முன்னோர்களால் அடையப்பெற்ற அறிவை இகழும் மருத்துவர் ஒரு முட்டாள். --ஹிப்போகிரட்டீஸ்
- நீங்களே உங்கள் மருத்துவராக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு முட்டாள். --ஹிப்போகிரட்டீஸ்
- தான் ஒரு ஞானி என்று நினைக்கும் ஒரு முட்டாள் வெறும் முட்டாள். தான் ஒரு முட்டாள் என்று தெரிந்த முட்டாள் உண்மையில் ஒரு ஞானி. --கெளதம புத்தர்
- ஒரு முட்டாள் தான் ஒரு புத்திசாலி என்று நினைக்கிறான், ஆனால் ஒரு புத்திசாலிக்கு தான் ஒரு முட்டாள் என்று தெரியும். --வில்லியம் ஷேக்ஸ்பியர்
- முட்டாள்கள் புத்திசாலிகளை முட்டாள்கள் என்று அழைக்கிறார்கள். ஒரு புத்திசாலி எந்த மனிதனையும் முட்டாள் என்று அழைக்க மாட்டான். --தாமஸ் அல்வா எடிசன்
- கேள்வி கேட்கும் மனிதன் ஒரு நிமிடம் முட்டாள், கேள்வி கேட்காத மனிதன் வாழ்க்கை முழுமைக்கும் முட்டாள். --கன்பூசியஸ்
- நான் ஒரு முட்டாள், ஆனால் நான் ஒரு முட்டாள் என்று எனக்குத் தெரியும், மேலும் அது என்னை உங்களை விட புத்திசாலி ஆக்குகிறது. --சாக்ரடீஸ்
- ஒரு முட்டாள் நாய், பறக்கும் பறவையைப் பார்த்துக் குரைக்கிறது. --பாப் மார்லி
- முட்டாள்தனத்திற்கு எதிரான தடுப்பூசி இங்கே இல்லை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- மூன்று பெரிய சக்திகள் உலகை ஆளுகின்றன: முட்டாள்தனம், பயம் மற்றும் பேராசை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- எல்லோரும் ஒரு மேதையே. ஆனால் நீங்கள் ஒரு மீனை மரத்தில் ஏறும் திறனைக் கொண்டு மதிப்பிட்டால், அது தன் வாழ்நாள் முழுவதும் தான் ஒரு முட்டாள் என்ற நம்பிக்கையிலேயே வாழும். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- முட்டாள்கள் மட்டுமே ஒரே விடயங்களை மீண்டும் மீண்டும் செய்து, வெவ்வேறு முடிவுகளைப் பெறுவதற்கு எதிர்பார்க்கிறார்கள். --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா
- முட்டாள்கள் கூட சில சமயங்களில் சரியானவர்கள் என்பதை அறிவதே வாழ்க்கையின் மிகச்சிறந்த பாடமாகும். --வின்ஸ்டன் சர்ச்சில்
- ஒரு மனிதன் தன்னால் அடையக்கூடிய ஒன்றைக் குறித்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வது முட்டாள்தனம். --எபிகியூரஸ்
- ஒரு ஆணுக்கு ஆறு மணி நேர தூக்கம், ஒரு பெண்ணுக்கு ஏழு மணி நேர தூக்கம், ஒரு முட்டாளுக்கு எட்டு மணி நேர தூக்கம். --நெப்போலியன் போனபார்ட்
- பைத்தியம்: ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் செய்து வெவ்வேறு முடிவுகளை எதிர்பார்க்கும். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- கோபம் முட்டாள்களின் நெஞ்சில் மட்டுமே குடியிருக்கிறது. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- புத்திசாலிகளுக்கு வாழ்க்கை ஒரு கனவு, முட்டாள்களுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு, பணக்காரர்களுக்கு வாழ்க்கை ஒரு நகைச்சுவை, ஏழைகளுக்கு வாழ்க்கை ஒரு சோகம். --ஷோலெம் அலிச்செம்