ஹிப்போகிரட்டீஸ்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஹிப்போகிரட்டீஸ்ஸின் பொன்மொழிகள்
பண்டைய கிரேக்க மருத்துவரும், "மருத்துவத்தின் தந்தை" என்று போற்றப்படுபவரும்தான் ஹிப்போகிரட்டீஸ் (Hippocrates). இவர் கி. மு. 460 காலப்பகுதியில் கோஸ் (kos) எனும் கிரேக்க தீவில் வாழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவரே நோய்க்கான மூல காரணங்களை கண்டறிய முற்பட்ட முதல் மருத்துவராகக் கருதப்படுகிறார்.
ஒருவர் மருத்துவம் பயின்று மருத்துவராக பதவி ஏற்கும் முன் ஏற்கும் உறுதிமொழி இவரால் எழுதப்பட்டதாகும். இவர் வாழ்ந்த காலத்தில் கிரேக்க மக்கள் நோய்களுக்கு காரணம் கடவுளின் சாபம் என நம்பி இருந்தனர். அதை கடுமையாக எதிர்த்து நோய்க்கான காரணங்களையும், தீர்வுகளையும் மக்களுக்கு வழங்கியவர் ஹிப்போகிரட்டீஸ்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Hippocrates quotes in Tamil
- உண்மையிலேயே அறிவது அறிவியல், வெறுமனே தனக்குத் தெரியும் என்று நம்புவது அறியாமை.
- முன்னோர்களால் அடையப்பெற்ற அறிவை இகழும் மருத்துவர் ஒரு முட்டாள்.
- அளவுக்கு மிஞ்சிய அனைத்தும் இயற்கைக்கு எதிரானது.
- ஜோதிட அறிவு இல்லாத ஒரு மருத்துவருக்கு தன்னை மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை இல்லை.
- நம் உணவே மருந்தாகவும், நம் மருந்தே உணவாகவும் இருக்க வேண்டும்.
- நீங்களே உங்கள் மருத்துவராக இல்லாவிட்டால், நீங்கள் ஒரு முட்டாள்.
- இந்த இரண்டு விடயங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்: மற்றவர்களுக்கு உதவுவது அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் இருப்பது.
- மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார், ஆனால் இயற்கையே குணப்படுத்துகிறது.
- நோயாளியை உணவின் மூலம் குணப்படுத்த முடிந்தால், உங்கள் மருந்துகளை வேதியியலாளரின் குடுவையிலேயே விட்டு விடுங்கள்.
- ஒரு புத்திசாலி தனது மதிப்புமிக்க சொத்து ஆரோக்கியமே என்பதை உணர வேண்டும்.
- சில நேரங்களில் ஒன்றும் செய்யாமல் இருப்பதே ஒரு நல்ல சிகிச்சை.
- இயற்கையே சிறந்த மருத்துவர்.
- வயதானவர்களுக்கு இளைஞர்களை விட குறைவான நோய்களே உள்ளன, ஆனால் அவர்களின் நோய்கள் ஒருபோதும் அவர்களை விட்டு விலகுவதில்லை.
- ஒரு மனிதனின் சிறந்த மருந்து நடைப்பயிற்சி.
- புனிதமான விடயங்கள் புனிதமான மனிதர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன.
- பயன்படுத்தப்படுவது வளர்ச்சியடைகிறது. பயன்படுத்தப்படாதது வீணாகிறது.
- ஒரு நோயாளி மருத்துவருடன் சேர்ந்து நோயை எதிர்த்துப் போராட வேண்டும்.
- ஞானத்தை விரும்பும் ஒரு மருத்துவர் கடவுளுக்கு நிகரானவர்.
- தூக்கம் மற்றும் தூக்கமின்மை இரண்டும், அளவுக்கு அதிகமாகும் போது கேடு விளைவிக்கும்.
- புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் தெய்வீகம் என்று அழைத்தால், தெய்வீகமான விடயங்களுக்கு முடிவே இருக்காது.