மன்னிப்பைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்

மன்னிப்பைப் பற்றிய பொன்மொழிகள்

Forgiveness

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் எம் முன்னோர்கள், நம் வாழ்விலும் அப்படித்தான் சில நேரங்களில் சிலதவறுகள் ஏற்படுவதை எம்மால் தவிர்க்கவே முடிவதில்லை. நம் வாழ்வில் தவறுகள் இயற்கைதான் என்பதால் நம் தவறுகளை எண்ணி எண்ணி வருந்திக்கொண்டே இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

அதே நேரத்தில் தவறு செய்வது மனித இயல்புதான் என்றெண்ணி மேலும் மேலும் தவறுகளை செய்துகொண்டே இருப்பதும் முட்டாள்தனம். நாம் தவறிளைக்கும் சமயங்களில் முதலில் அதை ஏறுக்கொள்ள வேண்டும், பின் அதற்காக மன்னிப்புக் கோர வேண்டும், பின் அதே தவறை மீண்டும் செய்யாமலிருக்க உறுதிபூண வேண்டும்.

மன்னிப்பு (Forgiveness) என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும், அதை பழக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியமான ஒன்றாகும். ஆனாலும் ஒருவர் உங்களுக்கு எதிராக தொடர்ந்து தீமைகளை செய்துகொண்டே இருக்கும் போது அவரை மீண்டும் மீண்டும் மன்னித்துக்கொண்டே இருப்பது எந்த வகையிலும் சரியான ஒரு செயலாக இருக்காது.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Forgiveness quotes in Tamil


  • ஒரு முட்டாள் மன்னிப்பதும் இல்லை மறப்பதும் இல்லை, ஒரு அப்பாவி மன்னித்தும்விடுவான் மறந்தும்விடுவான், ஒரு புத்திசாலி மன்னிப்பான் ஆனால் மறக்கமாட்டான். --தாமஸ் சாஸ்


  • நாம் அனைவரும் பலவீனம் மற்றும் பிழைகள் நிறைந்தவர்கள், நாம் ஒருவருக்கொருவர் நமது முட்டாள்தனங்களை மன்னிப்போம். இது தான் இயற்கையின் முதல் விதி. --வோல்டயர்


  • உங்கள் எதிரிகளை மன்னியுங்கள், ஆனால் அவர்களின் பெயர்களை மறக்காதீர்கள். --ஜான் எஃப். கென்னடி


  • மன்னிக்கும்போது, உங்களால் கடந்த காலத்தை எந்த வகையிலும் மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் நிச்சயமாக எதிர்காலத்தை மாற்றுவீர்கள். --பெர்னார்ட் மெல்ட்ஸர்


  • மன்னித்தல் எப்பொழுதும் எளிதானதல்ல. சில சமயங்களில் நாம் பட்ட காயத்தை விட, அதை ஏற்படுத்தியவரை மன்னிப்பது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கிறது. இருப்பினும் மன்னிப்பு இல்லாமல் அமைதி இல்லை. --மரியான் வில்லியம்சன்


  • மன்னிப்பு இல்லாமல் அன்பு இல்லை, அன்பு இல்லாமல் மன்னிப்பு இல்லை. --பிரையன்ட் எச். மெக்கில்


  • தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ இயல்பு. --அலெக்சாண்டர் போப்


  • உங்களுக்கு நீங்களே கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று மன்னிப்பு. --மாயா ஏஞ்சலோ


  • துணிச்சல் மிக்கவனுக்குத்தான் மன்னிக்கத் தெரியும். கோழை மன்னிக்கவே மாட்டான். அது அவனுடைய இயல்பில்லை. --லாரன்ஸ் ஸ்டெர்ன்


  • மன்னிப்பு உங்களுக்கானது, ஏனெனில் அது உங்களை விடுவிக்கிறது. அது உங்களை நீங்களே சிறைவைத்துள்ள சிறையிலிருந்து உங்களை விடுவிக்கிறது. --லூயிஸ் ஹே


  • உங்கள் நண்பர் உங்களுக்கு தீமை செய்தால், அவரிடம் சொல்லுங்கள், "நீ எனக்குச் செய்ததை நான் மன்னிக்கின்றேன், ஆனால் நீ உனக்குச் செய்ததை என்னால் எப்படி மன்னிக்க முடியும்?". --ஃபிரெட்ரிக் நீட்சே


  • மன்னிப்பு போன்ற முழுமையான பழிவாங்கல் எதுவும் இல்லை. --ஜோஷ் பில்லிங்ஸ்


  • உங்களை புண்படுத்திய அனைவரையும் மன்னியுங்கள், அவர்களுக்காக அல்ல, உங்களுக்காக. --ஹாரியட் நெல்சன்


  • உங்களால் மன்னிக்கவும் மறக்கவும் முடியாவிட்டால், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். --ராபர்ட் பிரால்ட்


  • மன்னிக்கும் மனநிலை நல்லதை ஈர்க்கும் ஒரு காந்த சக்தியாகும். --கேத்தரின் போண்டர்


  • ஒரு நண்பனை மன்னிப்பதை விட ஒரு எதிரியை மன்னிப்பது எளிதானது. --வில்லியம் பிளேக்


  • அன்பின் இறுதி வடிவம் மன்னிப்பு. --ரைன்ஹோல்ட் நீபுர்


  • மன்னிப்பு என்பது துணிச்சல் மிக்கவர்களின் நற்பண்பு. --இந்திரா காந்தி


  • ஏற்றுக்கொள்ளுதல், சகிப்புத்தன்மை மற்றும் மன்னிப்பு, இவை மூன்றும் வாழ்க்கையை மாற்றும் பாடங்கள். --ஜெசிகா லாங்கே


  • அனுமதி கேட்பதை விட மன்னிப்பு கேட்பது பெரும்பாலும் எளிதானது. --கிரேஸ் ஹாப்பர்


  • நாம் ஒருவரையொருவர் மன்னிப்பதற்கு முன், நாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். --எம்மா கோல்ட்மேன்


  • நாம் மன்னிக்கும் திறனை வளர்த்து அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மன்னிக்கும் ஆற்றல் இல்லாதவன் அன்பு செய்யும் ஆற்றல் இல்லாதவன். --மார்டின் லூதர் கிங்


  • பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். --மகாத்மா காந்தி


  • தவறுகள் எப்போதும் மன்னிக்கப்படக்கூடியவை, அவற்றை ஒப்புக்கொள்ள தைரியம் இருந்தால். --புரூஸ் லீ


  • ஒரு மதத்தின் முழு நோக்கமும் அன்பு மற்றும் இரக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை எளிதாக்குவதாகும். --தலாய் லாமா


  • மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை. --நெல்சன் மண்டேலா


  • மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள். --கன்பூசியஸ்

  • உங்கள் அடியைத் திருப்பித் தராத மனிதனைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர் உங்களை மன்னிப்பதுமில்லை, உங்களை நீங்களே மன்னிக்க அனுமதிப்பதுமில்லை. --ஜார்ஜ் பெர்னார்ட் ஷா



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link