எபிகியூரஸ்ஸின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
எபிகியூரஸ்ஸின் பொன்மொழிகள்
பண்டைக் கிரேக்க தத்துவஞானிகளில் ஒருவரும், எபிகியூரியனிசம் (Epicureanism) எனும் தத்துவக்கோட்பாட்டை நிறுவியவரும்தான் எபிகியூரஸ் (Epicurus). மனிதர்கள் அடிமைப்படுத்தப்படும் அந்தக் காலகட்டத்திலேயே எபிகியூரஸ் தனது சொந்தப் பள்ளியை நிறுவி அங்கு பெண்களையும் அடிமைகளையும் கூட கல்வி பயில அனுமதித்தார்.
எபிகியூரஸைப் பொறுத்தவரை தத்துவத்தின் நோக்கம் மனிதர்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ உதவுவதாக இருக்க வேண்டும் என்பதாகும், அவருடைய தத்துவங்களும் அவ்வாறே இருந்தன. எபிகியூரஸ் பல்வேறு தலைப்புகளில் 300 க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியதாகக் கூறப்பட்டாலும், அவற்றுள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Epicurus quotes in Tamil
- ஒரு மனிதன் தன்னால் அடையக்கூடிய ஒன்றைக் குறித்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வது முட்டாள்தனம்.
- திறமையான மாலுமிகள் புயல்கள் மற்றும் சூறாவளிகளில் இருந்து தங்கள் நற்பெயரை சம்பாதிக்கிறார்கள்.
- மனிதனின் துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்காத தத்துவஞானியின் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் மற்றும் வீண் வார்த்தைகள்.
- மன அமைதி உள்ளவன் தன்னையோ மற்றவரையோ தொந்தரவு செய்வதில்லை.
- யாரோ உங்களை உற்று நோக்கிக்கொண்டிருப்பதைப் போல அனைத்தையும் செய்யுங்கள்.
- நாம் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் எதையாவது தேடுவதற்கு முன்பு, நம்முடன் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் யாரையாவது தேட வேண்டும்.
- பயத்தை ஏற்படுத்தும் ஒரு மனிதன் பயத்திலிருந்து விடுபட முடியாது.
- நான் ஏன் மரணத்திற்கு பயப்பட வேண்டும்? நான் இருக்கும்போது, மரணம் இருக்கப்போவதில்லை, மரணம் இருக்கும்போது, நான் இருக்கப்போவதில்லை, நான் இல்லாத போது மட்டுமே இருக்கும் ஒன்றுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்?.
- கடவுள் மனிதர்களின் பிரார்த்தனைகளைக் கேட்டிருந்தால், எல்லா மனிதர்களும் விரைவிலேயே அழிந்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் தீமைக்காகவே பிரார்த்திக்கிறார்கள்.
- நன்றாக வாழும் கலையும் நன்றாக இறக்கும் கலையும் ஒன்றே.
- எவருக்குச் செல்வம் குறைவாகத் தேவையோ, அவரே செல்வத்தை அதிகமாக அனுபவிக்கிறார்.
- நாளையை மிகக் குறைவாகச் சார்ந்திருக்கும் மனிதன் நாளையை மிகவும் மகிழ்ச்சியுடன் சந்திக்கச் செல்கிறான்.
- அனைத்து செல்வங்களிலும் மிகச் சிறந்த செல்வம் தன்னிறைவு.
- பாவத்தைப் பற்றிய அறிவே இரட்சிப்பின் ஆரம்பம்.
- பெறுவதை விட கொடுப்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது.
- நீங்கள் இறந்த பிறகு மரணம் உங்களுக்கு வலியை ஏற்படுத்தாது என்றால், அதைப் பற்றிய பயம் இப்போது உங்களுக்கு வலியை ஏற்படுத்த அனுமதிப்பது முட்டாள்தனம்.
- புத்திசாலித்தனமாகவும், உன்னதமாகவும், நேர்மையாகவும் வாழாமல் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
- நீங்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால், நீங்கள் தத்துவத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும்.
- உயிருள்ளவர்களுக்கு மரணம் அர்த்தமற்றது ஏனெனில் அவர்கள் வாழ்கிறார்கள், மேலும் இறந்தவர்களுக்கு மரணம் அர்த்தமற்றது ஏனெனில் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
- நம்பிக்கை இல்லாமல், நட்பு இல்லை.
- தத்துவத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை அல்லது அதற்கான நேரம் கடந்துவிட்டதாகச் சொல்பவர், மகிழ்ச்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை அல்லது அதற்கான நேரம் கடந்துவிட்டதாகச் சொல்பவரைப் போன்றவர்.