ஃபிரெட்ரிக் நீட்சேயின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஃபிரெட்ரிக் நீட்சேயின் பொன்மொழிகள்
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய தத்துவஞானி தான் ஃபிரெட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche). இவரது மெய்யியல் கருத்துக்கள் பொதுவாக ஒழுக்கநெறி, தத்துவம், வரலாறு, கலை, மதம், துன்பியல், கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானம் தொடர்புடைய கருத்துக்களாக உள்ளன.
மிகக் குறைந்த வயதில் (24) பேசல் பல்கலைக்கழகத்தின் (University of Basel) மொழியியல் துறைத் தலைமைப் பதவியை வகித்த பெருமை இவரையே சாரும். நீட்சேவின் மறைவிற்குப் பிறகு அவரது சகோதரியான எலிசபெத் போர்ஸ்டர் நீட்சே என்பவர் நீட்சேவின் எழுத்துக்களுக்கு காப்பாளராக இருந்தார்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Friedrich Nietzsche quotes in Tamil
- உங்கள் எதிரிகளை நேசியுங்கள், ஏனெனில் அவர்கள் உங்களில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டுவருகிறார்கள்.
- இந்த உலகில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர், தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் நம்ப விரும்புபவர்கள்.
- நான் இருளில் இருந்தேன், ஆனால் நான் மூன்று அடிகள் எடுத்துவைத்ததில் சொர்க்கத்தில் என்னைக் கண்டேன். முதல் அடி ஒரு நல்ல சிந்தனை, இரண்டாவது ஒரு நல்ல வார்த்தை, மூன்றாவது ஒரு நல்ல செயல்.
- சில நேரங்களில் மக்கள் உண்மையைக் கேட்க விரும்புவதில்லை. ஏனெனில் தங்கள் மாயைகள் அழிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.
- நமக்கு முன்னால் இருக்கும் பாதையில் எப்பொழுதும் கற்கள் இருக்கும். அவை தடைக்கற்களா அல்லது படிக்கற்களா என்பது நீங்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
- நீ பொய் சொன்னதில் எனக்கு வருத்தம் இல்லை, இனிமேல் என்னால் உன்னை நம்ப முடியாது என்றுதான் எனக்கு வருத்தம்.
- ஒரு இளைஞனை கெடுப்பதற்கான உறுதியான வழி, வித்தியாசமாக சிந்திப்பவர்களை விட ஒரே மாதிரியாக சிந்திப்பவர்களை உயர்வாக மதிக்கும்படி அறிவுறுத்துவதாகும்.
- தீமை என்றால் என்ன? - பலவீனத்திலிருந்து தோன்றும் எதுவும்.
- அரக்கர்களுடன் போரிடுபவர், அச் செயல்பாட்டில் அவரும் ஒரு அரக்கனாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- நாம் எவ்வளவு உயரமாக பறக்கிறோமோ பறக்க முடியாதவர்களுக்கு நாம் அவ்வளவு சிறிதாகத் தோன்றுவோம்.
- இந்த உலகம் அழகானது, ஆனால் அதற்கு மனிதன் என்று ஒரு நோய் உள்ளது.
- உங்கள் சொந்தச் சுடரில் உங்களை நீங்களே எரிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும், நீங்கள் முதலில் சாம்பலாகவில்லை என்றால் எப்படி நீங்கள் புதிதாக எழ முடியும்.?
- அச்சமே அறநெறியின் தாய்.
- மகிழ்ச்சியற்ற திருமணங்களை உருவாக்குவது அன்பின் பற்றாக்குறை அல்ல, ஆனால் நட்பின் பற்றாக்குறை.
- சிறந்த விடயங்கள் அனைத்தும் முதலில் சாத்தியமற்றதாகவே தோன்றும்.
- ஒருவர் தான் தேடியதைக் கண்டுபிடிக்கும் போது, எந்தப் பயணமும் சிறந்ததல்ல.
- மற்றவர்கள் ஒரு முழு புத்தகத்தில் சொல்வதை பத்து வாக்கியங்களில் சொல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்.
- குற்றவியல் சட்டத்தின் நோக்கம் அதிகாரத்தில் இருப்பவர்களின் எதிரிகளை தண்டிப்பதாகும்.
- எல்லா நேரத்திலும் தான் புகழப்பட வேண்டும் என்று விரும்பும் கடவுளை என்னால் நம்ப முடியாது.
- ஒரு எதிரிக்கு எதிரான சிறந்த ஆயுதம் மற்றொரு எதிரி.
- எண்ணங்கள் நம் உணர்வுகளின் நிழல்கள் - எப்போதும் இருண்டது, வெறுமையானது மற்றும் எளிமையானது.
- காதலில் எப்போதுமே கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு எப்போதும் சில காரணம் இருக்கிறது.
- பழிவாங்குவதிலும் காதலிலும், ஆணை விட பெண் அதிக காட்டுமிராண்டித்தனம் உடையவள்.
- உங்கள் நண்பர் உங்களுக்கு தீமை செய்தால், அவரிடம் சொல்லுங்கள், "நீ எனக்குச் செய்ததை நான் மன்னிக்கின்றேன், ஆனால் நீ உனக்குச் செய்ததை என்னால் எப்படி மன்னிக்க முடியும்?".