உள்ளுணர்வைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
உள்ளுணர்வைப் பற்றிய பொன்மொழிகள்
சில விடயங்களை தர்க்கரீதியாக விளக்குவதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஆனால் அவற்றை நம்மால் உணர முடியும். அப்படிப்பட்ட ஒரு விடயம்தான் உள்ளுணர்வு (Intuition). வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் முடிவெடுக்கத் தடுமாறும் போது நம் உள்ளே இருந்து ஒரு குரல் நம்மை சரியாக வழிநடத்தும் அந்தக் குரல்தான் உள்ளுணர்வு.
நம் பகுத்தறிவு கூட சில சமயங்களில் தவறான முடிவுகளைத் தந்துவிடும். ஆனால் உள்ளுணர்வு எப்பொழுதும் பொய்ப்பதில்லை. நமக்கு ஐம்புலன்கள் போதாதென்பதால் இறைவன் நமக்கு ஆறாவது புலனாக உள்ளுணர்வைக் கொடுத்துள்ளார். அதை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால் பல கடினமான சூழ்நிலைகளையும் இலகுவாகக் கடந்துவந்து வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Intuition quotes in Tamil
- மிகவும் வெற்றிகரமான நபர்கள் பெரும்பாலும் மிகுந்த உள்ளுணர்வு கொண்டவர்கள். அறிந்தோ அல்லது அறியாமலோ, அவர்கள் தங்கள் உள்ளுணர்வுகளைப் பின்பற்றுகிறார்கள். --சக்தி கவைன்
- உங்கள் உள்ளுணர்வுக்குச் செவிசாயுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்குச் சொல்லும். --அந்தோனி ஜே. டி'ஏஞ்சலோ
- பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளிடம் பேசுவது என்றால், உள்ளுணர்வு என்பது கடவுள் உங்களிடம் பேசுவது. --வெய்ன் டயர்
- உள்ளுணர்வே அறிவியல் அறிவின் ஆதாரம். --அரிஸ்டாட்டில்
- உள்ளுணர்வு என்பது ஆன்மாவின் வழிகாட்டுதல், மனிதனின் மனம் அமைதியாக இருக்கும் தருணங்களில் அது இயற்கையாகவே தோன்றும். --பரமஹம்ச யோகானந்தர்
- உள்ளுணர்வு என்பது ஆன்மாவால் பார்ப்பது. --டீன் கூன்ட்ஸ்
- என் உள்ளுணர்வு என்னை ஒருபோதும் தோல்வியடையச் செய்யாது, அதற்குச் செவிசாய்க்காத போது தோல்வியடைவது நான்தான். --ஹஸ்ரத் இனாயத் கான்
- உண்மையான மதிப்புமிக்க விடயம் உள்ளுணர்வு மட்டுமே. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றின் முடிவை நீங்கள் அடையும்போது, நீங்கள் உணர வேண்டியவற்றின் தொடக்கத்தில் இருப்பீர்கள். --கலீல் ஜிப்ரான்
- உள்ளுணர்வுள்ள மனம் ஒரு புனிதமான பரிசு. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- அறிவியல் மூலம் நாம் நிரூபிக்கிறோம், ஆனால் உள்ளுணர்வு மூலமே நாம் கண்டுபிடிக்கிறோம். --ஹென்றி பொயின்கேர்
- நம் உள்ளுணர்வை நம்புவது பெரும்பாலும் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. --ஆன் வில்சன் ஷேஃப்
- ஒரு பெண் தனக்கு எது சிறந்தது என்பதை தன் உள்ளுணர்வால் அறிவாள். --மர்லின் மன்றோ
- உள்ளுணர்வு சார்ந்த மனம் ஒரு புனிதமான பரிசு மற்றும் பகுத்தறிவு சார்ந்த மனம் ஒரு உண்மையுள்ள ஊழியர். நாங்கள் ஊழியரை மதிக்கும் மற்றும் பரிசை மறந்துவிட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- உங்கள் இதயத்தையும் உள்ளுணர்வையும் பின்தொடர தைரியம் வேண்டும். --ஸ்டீவ் ஜாப்ஸ்
- அறிவார்ந்த தர்க்கரீதியான பகுப்பாய்வைவிட உள்ளுணர்வு சார்ந்த புரிதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் உணர ஆரம்பித்தேன். உள்ளுணர்வு மிகவும் சக்திவாய்ந்தது. அறிவாற்றலை விட மிகவும் சக்திவாய்ந்தது. அது எனது வேலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே என் கருத்து. --ஸ்டீவ் ஜாப்ஸ்
- உள்ளுணர்வைப் புரிந்துகொள்ளும் சக்தி, உங்கள் வாழ்நாளின் இறுதி வரை தீங்குகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். --லாவோ சீ
- எங்கள் உலகில் நிறைய சத்தங்கள் கேட்கின்றன, ஆனால் நீங்கள் எப்போதுமே கேட்க வேண்டிய குரல் உங்கள் உள்ளுணர்வு, மேலும் நீங்கள் உங்கள் உள்ளுணர்வை நம்பினால், உங்களால் காரியங்களைச் செய்ய முடியும் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் செல்ல முடியும். --டுவைன் ஜான்சன்
- உள்ளுணர்வு என்பது அறிவை மீறிய ஒன்று. சந்தேகத்திற்கு இடமின்றி, தர்க்கரீதியான அனுமானம் அல்லது மூளையின் வேறு எந்த முயற்சியும் பயனற்றதாகும்போது உண்மைகளை உணர்வதற்கு உதவும் சில நுண்ணிய இழைகள் நம்மிடம் உள்ளன. --நிக்கோலா டெஸ்லா
- உள்ளுணர்வும் தர்க்கமும் ஒத்துப்போகும் போது, நீங்கள் சொல்வது எப்பொழுதும் சரிதான். --பிலைஸ் பாஸ்கல்
- மற்றவர்களின் கூச்சல் மற்றும் கருத்துக்கள் உங்கள் உட்குரலை மூழ்கடிக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள். --ஸ்டீவ் ஜாப்ஸ்
- நீங்கள் பெரும்பாலும் உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும். --பில் கேட்ஸ்
- உள்ளுணர்வு மட்டுமே வாழ்க்கையில் உண்மையான வழிகாட்டி. --ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
- உங்கள் உள்ளுணர்வைப் பின்தொடருங்கள். அங்குதான் உண்மையான ஞானம் வெளிப்படுகிறது. --ஓப்ரா வின்ஃப்ரே
உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.