வாரன் பஃபெட்டின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

வாரன் பஃபெட்டின் பொன்மொழிகள்

Warren Edward Buffett

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரும், தொழிலதிபரும் மற்றும் உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும்தான் வாரன் பஃபெட் (Warren Edward Buffett).

பெரும் பணக்காரராக இருந்த போதிலும் வாரன் பஃபெட் மிகவும் எளிமையானவர் மற்றும் தனது சொத்துக்களில் பெரும் பகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 117 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link

Warren Buffett quotes in Tamil


  • நம்பிக்கை என்பது நாம் சுவாசிக்கும் காற்றைப் போன்றது. அது இருக்கும்போது, உண்மையில் யாரும் கவனிக்க மாட்டார்கள், அது இல்லாதபோது, ​​எல்லோரும் கவனிக்கிறார்கள்.


  • பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள்.


  • தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு வழியை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரை வேலை செய்வீர்கள்.


  • நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவான நபர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்.


  • செலவுக்குப் பின் மிச்சமிருப்பதைச் சேமிக்காதீர்கள், சேமித்த பின் மிச்சமிருப்பதைச் செலவிடுங்கள்.


  • ஒருபோதும் ஒற்றை வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்.


  • நாம் மற்றவர்களை விட புத்திசாலியாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் நாம் மற்றவர்களை விட மிகவும் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.


  • நீங்கள் உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கினால், நீங்கள் விரைவில் உங்களுக்குத் தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும்.


  • நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை ஒரு பொழுதுபோக்காக ஆக்குங்கள், இந்த உலகம் எதைச் செய்ய விரும்புகிறதோ, அதை ஒரு வணிகமாக்குங்கள்.


  • நீங்கள் வாழ்க்கையில் கழுகு போல் உயரப்பறக்க வேண்டுமென்றால், நீங்கள் வான்கோழிகளுடன் கூட்டாக இருக்க முடியாது.


  • உங்களால் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், உங்களால் உங்கள் பணத்தைக் கட்டுப்படுத்த முடியாது.


  • ஒரு முதலீட்டாளருக்கான மிக முக்கியமான பண்பு அறிவாற்றல் அல்ல, மனோபாவம்.


  • மகிழ்ச்சிக்கான இரகசியம் குறைந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதே.


  • வெற்றிகரமான முதலீட்டுக்கு நேரம், ஒழுக்கம் மற்றும் பொறுமை அவசியம். எவ்வளவு பெரிய திறமை அல்லது முயற்சி இருந்தாலும், சில விடயங்களுக்கு நேரம் எடுக்கும்: ஒன்பது பெண்களைக் கர்ப்பமாக்குவதன் மூலம் உங்களால் ஒரே மாதத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க முடியாது.


  • ஆற்றின் ஆழத்தை ஒருபோதும் இரு கால்களாலும் சோதிக்காதீர்கள்.


  • உங்களில் நீங்களே முதலீடு செய்வதே நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான முதலீடு, அதற்கு வரி விதிக்கவோ அல்லது அதை உங்களிடமிருந்து பறிக்கவோ யாராலும் முடியாது.


  • நீண்ட காலத்திற்கு முன்பு யாரோ ஒருவர் ஒரு மரத்தை நட்டதால் இன்று ஒருவர் நிழலில் அமர்ந்திருக்கிறார்.


  • எப்பொழுதும் உங்களை விட சிறந்த நபர்களுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.


  • நீங்கள் இன்று அதைச் செய்யப் போகிறீர்களா நாளை அதைச் செய்யப் போகிறீர்களா என்பதுதான் ஒரே கேள்வி. நீங்கள் அதை நாளை செய்யப் போகிறீர்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தால், நீங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டீர்கள்.


  • ஒரு நற்பெயரைச் சம்பாதிக்க 20 ஆண்டுகள் ஆகும், அதை கெடுக்க ஐந்து நிமிடங்களே ஆகும். நீங்கள் அதைப் பற்றிச் சிந்தித்தால், நீங்கள் விடயங்களை வித்தியாசமாகச் செய்வீர்கள்.


  • உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது நல்லது, மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது சிறந்தது.


  • வேலைக்கு ஆட்களைத் தேடும்போது, இந்த மூன்று குணங்களைப் பாருங்கள்: நேர்மை, புத்திசாலித்தனம் மற்றும் ஆற்றல். அவர்களிடம் முதலாவது இல்லையென்றால், மற்ற இரண்டும் உங்களைக் கொன்றுவிடும்.


  • நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிப்பீர்கள்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link