ஜார்ஜ் வாஷிங்டனின் மிகச்சிறந்த பொன்மொழிகள்
ஜார்ஜ் வாஷிங்டனின் பொன்மொழிகள்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியும், அமெரிக்க இராணுவ அதிகாரியும் மற்றும் அமெரிக்காவில் "தேசத்தின் தந்தை" (Father of the Nation) என்று போற்றப்படு மாபெரும் தலைவரும் தான் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington).
அமெரிக்கப் புரட்சிப் போரை தலைமை தாங்கி அதில் வெற்றி பெற்றதன் மூலம் வாஷிங்டனின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவியது. இவரை நினைவுகூரும் வகையிலேயே அமெரிக்காவில் Presidents' Day கொண்டாடப்படுகிறது.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
George Washington quotes in Tamil
- நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதையே நீங்கள் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் முழு பலத்துடன் அதைச் செய்யுங்கள்.
- மகிழ்ச்சி என்பது இந்த உலகின் வெளிப்புற விடயங்களை விட ஒரு நபரின் மனதின் உள் கட்டமைப்பைச் சார்ந்துள்ளது.
- சுதந்திரமும் சொத்துரிமையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவை. உங்களிடம் ஒன்று இல்லாமல் மற்றொன்று இருக்க முடியாது.
- ஒரு கழுதையால் வழிநடத்தப்படும் சிங்கங்களின் கூட்டத்தை விட ஒரு சிங்கத்தால் வழிநடத்தப்படும் கழுதைகளின் கூட்டம் மேலானது.
- கற்றறிந்தவர்களாக இருப்பது மட்டுமல்ல, நல்லொழுக்கத்துடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது.
- சாக்குப்போக்கு சொல்லும் நபர்களிடமிருந்தே 99% தோல்விகள் வருகின்றன.
- எங்கு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகிறதோ அங்கே இறுதியில் உண்மை வெல்லும்.
- எந்த ஒரு அரசாங்கத்தினதும் இறுதியான உத்தியோகபூர்வ செயற்பாடு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதுதான்.
- தவறு செய்வது இயல்பு, தவறைத் திருத்திக்கொள்வது பெருமைக்குரியது.
- புத்தகங்களைப் பற்றிய அறிவுதான் ஏனைய அறிவைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை என்று நான் கருதுகிறேன்.
- போருக்குத் தயாராக இருப்பது அமைதியைப் பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
- எங்களால் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, எங்களால் அதற்கு தகுதியானவர்களாக இருக்க முயற்சி செய்ய முடியும்.
- மதமும் ஒழுக்கமும் சிவில் சமூகத்தின் இன்றியமையாத தூண்களாகும்.
- கடன் வாங்குவதை விட மிகவும் ஆபத்தான பழக்கம் எதுவும் இல்லை.
- உங்கள் நற்பெயரை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், நற்பண்புள்ள மனிதர்களுடன் பழகுங்கள், கெட்டவர்களின் சகவாசத்தில் இருப்பதை விட தனியாக இருப்பதே சிறந்தது.
- ஒரு நேர்மையான நபராக இருப்பதற்கு வலிமை வேண்டும்.
- ஒரு அரசாங்கம் நெருப்பைப் போன்றது, ஒரு எளிய வேலைக்காரன், ஆனால் ஒரு ஆபத்தான எஜமானன்.
- தலைமைத்துவம் என்பது தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருப்பது மட்டுமல்ல, உங்களை அங்கு அழைத்துச் செல்வதற்கான தைரியம், ஒழுக்கம் மற்றும் வளங்களைக் கொண்டிருப்பதுமாகும்.
- மனிதனின் மகிழ்ச்சியும் அவனின் தார்மீக கடமையும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.
- ஒரு இலட்சம் மனிதர்கள், ஒருவர் பின் ஒருவராக வந்து, ஒரு டன் எடையை நகர்த்த முடியாது. ஆனால் 50 பேரின் ஒன்றுபட்ட பலத்தால் அதை எளிதாகக் நகர்த்தலாம்.
- எல்லாத் தீமைகளுக்கும், இந்த நாட்டில் பாதி வேலையாட்களின் அழிவுக்கும் மூலகாரணமான குடிப்பழக்கத்தைத் தவிருங்கள்.
- கடந்த கால தவறுகளை சரிசெய்வது சாத்தியமற்றது, ஆனால் அவற்றினால் கிடைத்த அனுபவத்தின் மூலம் நாம் பயனடையலாம்.
உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.