நெப்போலியன் ஹில்லின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

நெப்போலியன் ஹில்லின் பொன்மொழிகள்

Napoleon Hill

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும், உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றான திங்க் அண்ட் க்ரோ ரிச் (Think and Grow Rich) எனும் புத்தகத்தின் எழுத்தாளரும் தான் நெப்போலியன் ஹில் (Napoleon Hill). இவரது பல புத்தகங்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இவரது The law of success எனும் புத்தகம் தமிழில் "வெற்றி விதிகள்" எனும் பெயரிலும், Think and Grow Rich எனும் புத்தகம் தமிழில் "சிந்தனை மூலம் செல்வம்" எனும் பெயரிலும் வெளிவந்துள்ளன. நெப்போலியன் ஹில்லின் புத்தகங்கள் தனிமனித வளர்ச்சிக்கு உதவுவனவாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவனவாகவும் உள்ளன.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link


Napoleon Hill quotes in Tamil


  • வலிமையும் வளர்ச்சியும் தொடர்ச்சியான முயற்சி மற்றும் போராட்டத்தின் மூலம் மட்டுமே வரும்.


  • சிறிதளவு நெருப்பு சிறிதளவு வெப்பத்தையே தருவதைப் போல, பலவீனமான ஆசைகள் பலவீனமான விளைவுகளையே தரும்.


  • ஒரு வழக்கில் வெற்றி பெறுபவர் அதிக சட்டத்தை அறிந்த வழக்கறிஞர் அல்ல, தனது வழக்கிற்கு சிறப்பாக தயாரான வழக்கறிஞர்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


  • நமக்குப் புரியாததை நாம் நம்ப மறுக்கிறோம்.


  • அதிகமாக நேசித்தால் நீங்கள் காயப்படக்கூடும், ஆனால் குறைவாக நேசித்தால் நீங்கள் துன்பத்தில் வாழ்வீர்கள்.


  • பெரும் சாதனைகள் பொதுவாக பெரும் தியாகத்தால் பிறக்கிறது, ஒருபோதும் சுயநலத்தின் விளைவால் அல்ல.


  • வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதில் உங்கள் மனதை நிலைநிறுத்துங்கள், உங்களுக்கு என்ன வேண்டாமோ அதில் அல்ல.


  • காத்திருக்காதீர்கள், நேரம் எப்பொழுதுமே சரியாக இருக்காது. நீங்கள் நிற்கும் இடத்திலிருந்தே தொடங்குங்கள், உங்களிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டே உழையுங்கள்.


  • பேசுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள், ஏனெனில் உங்கள் வார்த்தைகளும் நீங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் மற்றொருவரின் மனதில் வெற்றிக்கான அல்லது தோல்விக்கான விதையை விதைக்கும்.


  • வாய்ப்பு என்பது பெரும்பாலும் துரதிர்ஷ்டம் அல்லது தற்காலிக தோல்வி போன்று மாறுவேடமிட்டே வருகிறது.


  • உங்கள் எண்ணங்கள் ஒன்றின் மீது மட்டுமே உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. இந்த தெய்வீகப் பரிசுதான் உங்கள் விதியைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி. உங்கள் மனதைக் கட்டுப்படுத்தத் தவறினால், நீங்கள் வேறு எதையுமே கட்டுப்படுத்த மாட்டீர்கள்.


  • வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி முயற்சியை நிறுத்துவதே.


  • எதிர்மறை எண்ணங்களுக்கு உங்கள் மனக்கதவை மூடும்போது, ​​உங்களுக்கு வாய்ப்பின் கதவு திறக்கிறது.


  • மக்கள் வாழ்க்கையில் தோல்வியடைவதற்கு முதற் காரணம், அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டாரின் பேச்சைக் கேட்பதுதான்.


  • உங்களால் பெரிய விடயங்களைச் செய்ய முடியாவிட்டால், சிறிய விடயங்களைச் சிறந்த முறையில் செய்யுங்கள்.


  • ஒரு பழக்கத்தை மாற்றுவதற்கு இன்னொரு பழக்கம் தேவை.


  • ஒரே நேரத்தில் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் எதிர்மறை உணர்ச்சிகள் இரண்டும் மனதை ஆக்கிரமிக்க முடியாது.


  • இந்த உலகில் வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி, மற்றவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரைகளின்படி நீங்களே செயல்படுவதுதான்.


  • நேர்மறை உணர்ச்சிகள் உங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.


  • நீங்கள் தொடங்கிய இடத்தை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் செல்லும் திசையை உங்களால் மாற்ற முடியும்.


  • மற்றவர்களின் வெற்றிக்கு உதவுவதன் மூலம் நீங்கள் சிறப்பாக மற்றும் விரைவாக வெற்றிபெற முடியும் என்பது உண்மையில் உண்மைதான்.


  • பெரும்பாலன நபர்கள் தங்கள் மிகப்பெரிய தோல்வியைத் தாண்டி வெறுமனே ஒரு படி மேலே சென்று மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர்.


  • ஆசையே எல்லா சாதனைகளுக்கும் தொடக்கப் புள்ளி.


  • எந்தவொரு மனிதனும் அவன் விரும்பாத ஒரு முயற்சியில் வெற்றியடைய முடியாது.


  • நீங்கள் அனுமதிக்காதவரை உங்களை யாரும் பொறாமைப்படவோ, கோபப்படவோ, பழிவாங்கவோ அல்லது பேராசைப்படவோ வைக்க முடியாது.


  • செயலே புத்திசாலித்தனத்தின் உண்மையான அளவுகோல்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link