ஜாக் மாவின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

ஜாக் மாவின் பொன்மொழிகள்

Jack Ma

சீனாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், முதலீட்டாளரும் மற்றும் புகழ்பெற்ற அலிபாபா குழுமத்தின் (Alibaba Group) செயல் தலைவரும் தான் ஜாக் மா (Jack Ma). மேலும் இவர் சீனாவின் மிகப்பெரும் பணக்காரராவார். இவரது சொத்து மதிப்பு 37.1 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும்.

மேற்படிப்பை முடித்து 31 வேலைகளுக்கும் மேல் விண்ணப்பித்த ஜாக் மா அனைத்திலும் நிராகரிக்கப்பட்டார். பின்னர் தனது சொந்த நிறுவனமான அலிபாபாவை தொடங்கி அதில் வெற்றியும் கண்டார். ஒருவன் சாதிக்க நினைத்துவிட்டால் அவனுக்கு எதுவுமே தடையில்லை என்பதற்கு ஜாக் மா ஒரு சிறந்த உதாரணம்.

தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.

iOS App Link

Android App Link



Jack Ma quotes in Tamil


  • ஒரு தலைவருக்கு அதிக சகிப்புத்தன்மையும், தோல்வியை ஒப்புக்கொள்ளும் திறனும் ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும்.


  • தரையில் ஒன்பது முயல்கள் இருந்தால், அதில் நீங்கள் ஒன்றைப் பிடிக்க விரும்பினால், ஒன்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.


  • நான் மற்றவர்களால் விரும்பப்படுபவராக இருக்க விரும்பவில்லை, நான் மற்றவர்களால் மதிக்கப்படுபவராக இருக்க விரும்புகிறேன்.


  • நீங்கள் ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றால், ஏதேனும் வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு எப்படித் தெரியும்?.


  • எல்லோராலும் பார்க்க முடியாத வாய்ப்புகளே உண்மையான வாய்ப்புகள்.


  • நீங்கள் முயற்சியை கைவிடவில்லை என்றால், உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. மேலும் நீங்கள் சிறியவராக இருக்கும்போது மிகவும் கவனமாகவும் உங்கள் மூளையை நம்பியும் இருக்க வேண்டும், உங்கள் வலிமையை அல்ல.


  • வாடிக்கையாளர் முதலாவது, பணியாளர் இரண்டாவது மற்றும் பங்குதாரர் மூன்றாவது. வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக இருந்தால், வணிகமும் மகிழ்ச்சியாக இருக்கும், பங்குதாரர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


  • வெற்றி மற்றும் இலாபம் என்பது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கவனம் செலுத்துவதன் வருவிளைவுகளே தவிர, குறிக்கோள்கள் அல்ல.


  • ஒரு சிறந்த வாய்ப்பை பெரும்பாலும் தெளிவாக விளக்குவது கடினமானது, தெளிவாக விளக்கக்கூடிய விடயங்கள் பெரும்பாலும் சிறந்த வாய்ப்புகள் அல்ல.


  • ஒரு நல்ல வேலை என்பது நீங்கள் வெளியே சென்று கண்டுபிடிப்பது அல்ல, அது நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது நீங்கள் கண்டுபிடிக்கும் ஒன்று.


  • இந்த உலகில் மிகவும் நம்பமுடியாத விடயம் மனித உறவுகள்.


  • ஒருபோதும் விலையில் போட்டிபோடாதீர்கள், மாறாக சேவைகள் மற்றும் புதுமைகளில் போட்டிபோடுங்கள்.


  • உங்கள் பணியாளருக்கு உங்களை விட மேம்பட்ட தொழில்நுட்ப திறன்கள் இருக்க வேண்டும். அவர் அப்படி இல்லை என்றால், நீங்கள் தவறான நபரை வேலைக்கு அமர்த்தியுள்ளீர்கள் என்று அர்த்தம்.


  • உங்கள் வாழ்க்கையில் உங்களால் எவ்வளவு செய்ய முடியும் என்று ஒருபோதும் உங்களுக்குத் தெரியாது.


  • ஒருபோதும் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்யாதீர்கள்.


  • நான் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் நான் அந்த கருத்தாக்கத்தை மற்றவர்களுக்கு கடத்தியுள்ளேன். நான் வெற்றியடையாவிட்டாலும், யாராவது வெற்றியடைவார்கள்.


  • உங்கள் போட்டியாளர்களை மறந்துவிடுங்கள், வெறுமனே உங்கள் வாடிக்கையாளர்களின் மீது கவனம் செலுத்துங்கள்.


  • இளைஞர்களுக்கு உதவுங்கள். சிறியவர்களுக்கு உதவுங்கள். ஏனெனில் சிறியவர்கள் பெரியவர்களாவார்கள். நீங்கள் விதைத்த விதைகளை இளைஞர்கள் மனதில் வைத்திருப்பார்கள், அவர்கள் வளரும்போது, அவர்கள் இந்த உலகை மாற்றுவார்கள்.


  • சரியான நபர்களைக் கண்டறியுங்கள், சிறந்த நபர்களை அல்ல.


  • நீங்கள் சொல்வதை இந்த உலகம் நினைவில் கொள்ளாது, ஆனால் நீங்கள் செய்ததை அது நிச்சயமாக மறக்காது.


  • உங்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் பொறுமை.


  • ஒரு உண்மையான தொழிலதிபர் அல்லது தொழில்முனைவோருக்கு எதிரிகளே இல்லை, ஒருமுறை அவர் இதைப் புரிந்துகொண்டவுடன், வானமே எல்லை.


  • நீங்கள் எல்லோரையும் உங்கள் எதிரிகளாகப் பார்த்தால், உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் உங்களுக்கு எதிரிகளாக இருப்பார்கள்.



உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள்.

iOS App Link

Android App Link