மகிழ்ச்சியைப் பற்றிய மிகச்சிறந்த பொன்மொழிகள்
மகிழ்ச்சியைப் பற்றிய பொன்மொழிகள்
வாழ்க்கை என்பது ஒரு முறைதான், அதை மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டியது அவசியமானது. ஆனால் "எதைத் தின்றால் பித்தம் தெளியும்" என்பது போல் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கொட்டும் மழை போல் மகிழ்ச்சியை (Happiness) எதிர்பார்த்தால் அது வெறும் வெட்டும் மின்னல் போலவே வந்து செல்கிறது.
நாம் சிறு வயதில் ஐஸ்கிரீம் வாங்கும் போது கிடைத்த மகிழ்ச்சி நாம் பெரியவரானதும் ஐபோன் வாங்கினால் கூட கிடைப்பதில்லை. நம் வயது கூடக் கூட நம் மகிழ்ச்சி குறைந்து கொண்டே செல்வது போல் உள்ளது. எந்தப் பொருளாலும் நம்மைத் திருப்திப்படுத்தவும் முடிவதில்லை, மகிழ்ச்சிப்படுத்தவும் முடிவதில்லை.
நமக்குள்ளே இருக்கும் மகிழ்ச்சியை வெளிக்கொண்டுவர நாம் எதை எதையோ நாடிச்செல்கிறோம். ஆனாலும் அறிஞர்களிடம் ஒரு விடயத்தை கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலம் நிச்சயம் பலன் கிடைக்கும். எனவே மகிழ்ச்சி பற்றி அறிஞர்கள் கூறிய கருத்துகளை இந்தப் பதிவில் காணலாம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
Happiness quotes in Tamil
- ஒரு முட்டாள் மகிழ்ச்சியைத் தொலைவில் தேடுகிறான், ஒரு ஞானி அதைத் தன் காலடியில் வளர்க்கிறான். --ஜேம்ஸ் ஓபன்ஹெய்ம்
- மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் ரகசியம் தைரியம். --கேரி ஜோன்ஸ்
- மகிழ்ச்சியான நபராக இருப்பதே வாழ்க்கையின் திறவுகோல் என்று நான் நினைக்கிறேன், மகிழ்ச்சி உங்களுக்கு வெற்றியைத் தரும். --டியாகோ வால்
- மகிழ்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, அது நம் சக்திற்கு அப்பாற்பட்ட விடயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துவதாகும். --எபிக்டெட்டஸ்
- உண்மையான மகிழ்ச்சி என்பது, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் நிகழ்காலத்தை அனுபவிப்பதே. --செனிக்கா
- ஒரு மேசை, ஒரு கதிரை, ஒரு கிண்ணம் நிறைய பழங்கள் மற்றும் ஒரு வயலின், ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேறு என்ன வேண்டும்? --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- ஏற்றுக் கொள்வதில் மட்டுமே மகிழ்ச்சி இருக்க முடியும். --ஜார்ஜ் ஆர்வெல்
- இன்று என்னை மகிழ்விக்கும் அல்லது மகிழ்ச்சியற்றதாக்கும் ஆற்றல் நிகழ்வுகளுக்கு இல்லை. அது எதுவாக இருக்க வேண்டும் என்பதை என்னால் தேர்வு செய்ய முடியும். நேற்று என்பது முடிந்துவிட்டது, நாளை என்பது இன்னும் வரவில்லை. எனக்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது, அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன். --க்ரூச்சோ மார்க்ஸ்
- மற்றவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முயற்சிப்பதே மிகவும் மதிப்புமிக்க விடயம். --ராபர்ட் பேடன் பவல்
- செயல் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டுவராது ஆனால் செயல் இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. --பெஞ்சமின் டிஸ்ரேலி
- எனக்குத் தெரிந்த அரிதான விடயம் அறிவாளிகளிடத்தில் மகிழ்ச்சி. --எர்னஸ்ட் ஹெமிங்வே
- மகிழ்ச்சி என்பது ஒரு முத்தம் போன்றது. அதை அனுபவிப்பதற்கு அதை நீங்கள் பகிர வேண்டும். --பெர்னார்ட் மெல்ட்ஸர்
- அதிகளவு மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதே மகிழ்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய தடையாகும். --பெர்னார்ட் டி ஃபோன்டெனெல்லே
- நாம் நம்பும் விடயங்கள் நாம் செய்யும் விடயங்களிலிருந்து வேறுபட்டால் அங்கே மகிழ்ச்சி இருக்காது. --ஃப்ரேயா ஸ்டார்க்
- உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்கள் எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தது. --மார்கஸ் ஆரேலியஸ்
- இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது. --ஜார்ஜ் சாண்ட்
- சிலர் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்கள், மற்றவர்கள் அவர்கள் செல்லும் போதெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்கள். --ஆஸ்கார் வைல்ட்
- மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்
- வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சி என்று கருதாதபோது மட்டுமே மனிதர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். --ஜார்ஜ் ஆர்வெல்
- உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது. --அரிஸ்டாட்டில்
- மற்றவர்கள் மீதான அக்கறை உணர்வு, நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகிறது. இது தான் மனிதனின் அனைத்து மகிழ்ச்சிக்கும் மூலமாகும். --தலாய் லாமா
- உங்கள் துக்கம் உங்களை எவ்வளவு ஆழமாகச் செதுக்கியிருக்கிறதோ அவ்வளவு ஆழமாகதான் உங்கள் மகிழ்ச்சியும் உங்களை நிரப்ப முடியும். --கலீல் ஜிப்ரான்
- நான் என் வலியை பொறுமை எனும் வயலில் விதைத்த போது அது மகிழ்ச்சி எனும் பழத்தைத் தந்தது. --கலீல் ஜிப்ரான்
- மகிழ்ச்சி என்பது ஒரு பட்டாம்பூச்சி போன்றது, நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகத் துரத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது உங்களை விட்டு தப்பிச் செல்லும், ஆனால் நீங்கள் வேறு விடயங்களில் கவனம் செலுத்தினால், அது மெதுவாக உங்கள் தோளில் வந்து அமரும். --ஹென்றி டேவிட் தோரே
- மகிழ்ச்சி என்பது நல்லொழுக்கத்திற்கான வெகுமதி. --அரிஸ்டாட்டில்
- மகிழ்ச்சி என்பது இந்த உலகில் இல்லை, அது நம்மில் உள்ளது. --பெஞ்சமின் பிராங்க்ளின்
- நன்மை செய்வதிலிருந்தும் மற்றவர்களுக்கு உதவுவதிலிருந்தும் மகிழ்ச்சி உருவாகிறது. --பிளேட்டோ
- மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்புவதை வைத்திருப்பதில் இல்லை, ஆனால் நீங்கள் வைத்திருப்பதை விரும்புவதில் உள்ளது. --கன்பூசியஸ்
- நல்லதைச் செய்ய உங்கள் இதயத்தை தயார் செய்யுங்கள். அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள், நீங்கள் மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள். --கெளதம புத்தர்
- வெற்றி என்பது நீங்கள் விரும்புவதைப் பெறுவது, மகிழ்ச்சி என்பது நீங்கள் பெறுவதை விரும்புவது. --டபிள்யூ.பி. கின்செல்லா
- மகிழ்ச்சி என்பது இந்த உலகின் வெளிப்புற விடயங்களை விட ஒரு நபரின் மனதின் உள் கட்டமைப்பைச் சார்ந்துள்ளது. --ஜார்ஜ் வாஷிங்டன்
- மனிதனின் மகிழ்ச்சியும் அவனின் தார்மீக கடமையும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. --ஜார்ஜ் வாஷிங்டன்
- நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், மற்றவரை மகிழ்ச்சிப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியான நபரைக் கண்டுபிடிக்க விரும்பினால், நீங்கள் சரியான நபராக இருங்கள். நீங்கள் இந்த உலகில் மாற்றத்தைக் காண விரும்பினால், நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்களே மாறுங்கள். --தீபக் சோப்ரா
- ஒரு குழந்தையைப் போல எந்த காரணமும் இன்றி மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஒரு காரணத்திற்காக மகிழ்ச்சியாக இருந்தால், நீங்கள் சிக்கலில் உள்ளீர்கள், ஏனெனில் அந்த காரணம் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம். --தீபக் சோப்ரா
- அனைத்து இலக்குகளினதும் இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் மற்றவரை மகிழ்வியுங்கள். --தீபக் சோப்ரா
- மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணிப் பார்ப்பது உண்மையிலேயே மூளையில் நேர்மறையான இரசாயன மாற்றத்தை உருவாக்குகிறது, இது நேர்மறையான உடல் மற்றும் உளவியல் நன்மைகளைத் தூண்டுகிறது. --தீபக் சோப்ரா
- எந்தவொரு மகிழ்ச்சியும் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. --சாய் பாபா
- தன்னை மகிழ்ச்சியற்றவர் என்று நம்புபவரே மனிதர்களில் மகிழ்ச்சியற்றவர். --டேவிட் ஹியூம்
- புத்திசாலித்தனமாகவும், உன்னதமாகவும், நேர்மையாகவும் வாழாமல் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியாது. --எபிகியூரஸ்
- பெறுவதை விட கொடுப்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. --எபிகியூரஸ்
- நாளையை மிகக் குறைவாகச் சார்ந்திருக்கும் மனிதன் நாளையை மிகவும் மகிழ்ச்சியுடன் சந்திக்கச் செல்கிறான். --எபிகியூரஸ்
- பணம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை, இப்போது என்னிடம் 50 மில்லியன் டாலர் உள்ளது, ஆனால் என்னிடம் 48 மில்லியன் டாலர் இருந்தபோது உள்ள மகிழ்ச்சியே இப்போதும் உள்ளது. --அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
- நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணையுங்கள், மக்களுடனோ அல்லது பொருட்களுடனோ அல்ல. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- என் வாழ்வில் சிறந்த மகிழ்ச்சியை, நான் இசையில் இருந்து பெறுகிறேன். --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
- இந்த கணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். இந்த கணமே உங்கள் வாழ்க்கை. --உமர் கயாம்
- பிரபலமாக இருக்க விரும்புவோரின் மகிழ்ச்சி மற்றவர்களைச் சார்ந்துள்ளது. --மார்கஸ் அரேலியஸ்
- ஒரு மனிதனின் உண்மையான மகிழ்ச்சி, அவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வதே. --மார்கஸ் அரேலியஸ்